நியூஜெர்ஸியில் ஒரு இலக்கிய சந்திப்பு


அமெரிக்காவில் கிடைக்கும் நிறைய ‘முதல்’களில் முதல் நெடுந்தொலைவு கார்ப் பயணம் மறக்க முடியாதது. இந்த அனுபவத்தை சிறுகதையாக எழுத வேண்டுமென்று நினைத்திருந்த எனக்கு, “ஜெமோ-வை சந்திக்கலாம் வாங்க!” என்று பாஸ்டன் பாலா குறுஞ்செய்தி அனுப்பியபோது சட்டென ஸ்பார்க் ஆனது ஒரு கரு.

நியூஜெர்ஸியில் ஒரு இலக்கிய சந்திப்பு – என்ற அந்த சிறுகதை நான் நினைத்தது போலவே பலருக்கும் தங்கள் முதல் road trip நினைவுகளை கிளறி விட்டிருக்கிறது என்பதை ஒருபக்கம், srikan2 ஆகிய ட்விட்டர் நண்பர்களின் ட்வீட் பின்னூட்டம் வாயிலாக அறிய முடிகிறது.

ஒரு முக்கிய குறிப்பு. கதையில் வரும் பாத்திரங்களை யாரோடும் முடிச்சுப் போட்டு பார்க்க வேண்டாம். பெரும்பாலான ஐ.டி இளைஞர்களின் இலக்கிய பார்வையும், சாலைப் பயண அனுபவமும் மட்டுமே இந்த கதை தாங்கி நிற்கும் விஷயங்கள்.

கதை கீழே…


நியூஜெர்ஸியில் ஒரு இலக்கிய சந்திப்பு

~ சத்யராஜ்குமார் ~


காருக்குள் கலர் கலராய் வெளிச்சமடிக்க, ”டேய் கோபி, போலீஸ்டா!” – செல்போனில் அலறினேன். நட்ட நடுநிசியில் 95 நெடுஞ்சாலையில் விர் விர்ரென பறக்கும் இத்தனை கார்களுக்கு நடுவில் – தட்டுத் தடுமாறி ஓட்டிச் செல்லும் நானா கிடைத்தேன்?

”பதறாதே. ஓரங்கட்டி நிறுத்து.” என்று ஆலோசனை வழங்கினான் கோபி.

”இலக்கியம் வெங்காயமெல்லாம் வேண்டாம்ன்னு முதல்லயே சொன்னேன். கேட்டியா நீ?”

மேலும் படிக்க…