பாண்டேஜ்


நாலு பிளாக் தள்ளி வசிக்கிறார். இந்தியாவிலிருந்து வந்து மூன்று மாதம் கூட ஆகவில்லை. பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்புதான் மனைவியும், குழந்தைகளும் வந்து சேர்ந்தார்கள். வாஷிங்டன் டி.சியில் ஆபிஸ் போகிற நேரம் சாலையை கடக்கையில் பைக் மோதியது. பலத்த அடி. காலில் ப்ராக்சர். வந்து மோதிய பைக் ஆசாமிக்கும்தான்.

எமர்ஜென்சி வாகனங்கள் உடனே வந்து விட்டன. அருகில் உள்ள GW மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சர்ஜரி நடந்தது. இந்த மாதிரி இக்கட்டான நிலையில் இந்தியாவில் நம் சொந்த ஜனம் பூராவும் கூடி விடும். தார்மீக ஆதரவு நிறைய கிடைக்கும். இங்கே யார் இருக்கிறார்கள்? முடிந்தால் நாலு நண்பர்கள் மாலையில் வந்து பார்க்கக் கூடும்.

இது பிரசவத்துக்கும் பொருந்தும். என்னுடைய பல நண்பர்களின் பெற்றோர்களுக்கு விசா கிடைக்காததினால் பெரியவர்கள் பக்க பலம் இல்லாமல் தன்னந்தனியாய் குழந்தையைப் பெற்று, அதை வளர்ப்பது எப்படி என புத்தகம் படித்து வளர்த்திருக்கிறார்கள். முதலில் யோசிக்க மலைப்பாக இருந்தாலும், ஆஸ்பத்திரியாகட்டும், அங்கே பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்களாகட்டும், மற்ற பொதுத்துறை அலுவலகங்கள் மக்களை அக்கறையாய் அணுகுகிற முறை… படிப்படியாய் குழந்தைக்கு சொல்லித் தருவது போல் எல்லாருக்கும் எல்லாவற்றையும் கற்றுத் தருகிற பொறுமை… இங்கே அதற்குரிய அமைப்புகள் பலமாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் அது சுலபமாகி விடுகிறது. தீவுகளாக வாழும் இவர்கள் வாழ்க்கை முறையும் ஒரு காரணமாக இருக்கலாம். (வரியாகவும், காப்பீட்டுத் தொகையாகவும் பெரும் பணம் கட்டுகிறோம் என்பது ஒருபுறமிருந்தாலும், அது சரியாய் செலவழிக்கப்படுவது ஆறுதல்)

அடிபட்ட நண்பருக்கு வருவோம். அவர் மனைவி ஊருக்கு புதிதாக இருந்தாலும் தனியாக, தைரியமாக சமாளித்திருக்கிறார். காலில் இரண்டு மூன்று இடங்களில் பிளேட் பொருத்தியிருக்கிறார்கள். இன்னும் சில மாதங்கள் ஆஸ்பத்திரியில் இருந்து பிசியோ தெரபி எடுத்துக் கொண்டால் தேறி விடுவார் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

நான் போய் பார்த்த போது – வலியின் தாக்கத்தில், மருந்துகளின் வீரியத்தில், நிறைய ரத்தமிழந்த பலவீனத்தில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். அவர் விரைவில் நலம் பெற பிரார்த்தனைகளை தெரிவித்தேன். வீட்டுக்கு வந்த பின், ஆஸ்பத்திரி வாசனை அகலும் முன் நான் எழுதிய சிறுகதை பாண்டேஜ்!


பாண்டேஜ்!
~ சத்யராஜ்குமார் ~


என்னைச் சுற்றி கொழகொழவென ரத்தம்.

நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டுக் கிடந்தேன். வேகமாய் கண்களில் பரவியது இருள். பென்சில்வேனியா தெருவை பெடஸ்ட்ரியன் க்ராசிங்கில் கடக்க முயலும் போது, தேங்கிக் கிடந்த கார்களுக்கு நடுவே திடீரென முளைத்த மோட்டார்பைக்கை நானும், நடந்து செல்லும் என்னை பைக் ஆசாமியும் பார்த்து அதிர்ச்சியடைந்ததுதான் தெரியும்.

அடிபட்ட நானும், அடித்த அவனும் பெரிய ஓலத்தோடு ரத்தம் சிதற ஆளுக்கொரு திசையில் தெறித்தோம்….

தொடர்ந்து வாசிக்க…