எக்ஸானந்தா


எல்லா லெவல்களிலும் சாமிகள் இருப்பது போல் சாமியார்களும் இருக்கிறார்கள்.
yogi
எங்கள் ஊருக்குப் பக்கத்தில் புரவிபாளையம் ஜமீன் மாளிகையில் இருந்த சாமியார் ரொம்ப பிரபலம். லீவு நாட்களில் பெரும் க்யூ வரிசையில் மக்கள் வெள்ளம் காத்திருக்கும். ‘டயம் சரியில்லை சாமி என்ன பண்ணலாம் ?’என்று ஒருவர் கேட்டதற்கு அவருடைய டைட்டன் வாட்சை கழற்றச் சொல்லி தேங்காய் உடைக்கும் கருவியால் ஒரே போடாய்ப் போட்டு சுக்கு நூறாய் உடைத்து விட்டாராம். பிரசாதத்தை வாயில் போட்டு குதப்புக் குதப்பி வெளியே எடுத்துத் தருவது அவர் ஸ்டைல். நண்பரின் வற்புறுத்தலின் பேரில் அங்கே போன போது அப்படி அவர் பிரசாதம் தந்து விட்டால் என்ன செய்வது என்று பயந்து கொண்டே போனேன். நல்ல வேளை, ஹைஜீனிக்காக ஒரு எலுமிச்சம்பழம் மட்டுமே கொடுத்தார். அமாவாசைக்கும் பவுர்ணமிக்கும் இளையராஜா தவறாமல் அங்கே வந்து விடுவாராம். இருவரும் ராத்திரி பூராவும் ஒரு வார்த்தை கூட பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள் என்று பொள்ளாச்சி பூராவும் பேசிக் கொள்வார்கள்.

இது போன்ற பிரபலங்கள் தவிர, கோயமுத்தூர் க்ராஸ் கட் ரோடு அருகே சின்ன ஓட்டு வீட்டுக்குள் ஏராளமான சாமி படங்களுடன் அழுக்கு பனியன் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கும் குட்டி சாமியார் ஒருவரையும் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு நூல் மில்லில்தான் வேலை பார்க்கிறார். சாமியார் வேலை பார்ட் டைம். மந்திரித்து தாயத்து கட்டுவது அவர் வேலை. தொழிலில் பிரச்னை என்றால் அடிக்கடி அவரை சந்தித்து தாயத்து மாற்றிக் கொண்டு வருவான் என் நண்பன். வீடு பூராவும் விபூதி மணம் கமழும். கைக் குழந்தை நை நை என்று அழும். ‘காபி சாப்பிடறிங்களா?’ என்று அவர் மனைவி உபசரிக்கக் கூட செய்வார். இப்படியான கேஷுவல் சாமியார்கள்.

யாகவா முனிவர், ஷிவசங்கர் பாபா போன்ற மிட் ரேஞ்ஜ் சாமியார்கள் பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

யோகா பிரபலமானவுடன் எக்ஸானந்தாக்கள் பெருகி விட்டார்கள். அதாவது x என்ற மாறியில் பிரேமானந்தா, சகஜானந்தா என என்ன வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். இவர்கள் எலைட் வகையறாக்கள். வார இதழ்களில் தொடர் எழுதுவது முதல் பெரு நகரங்களில் ஆங்கில சொற்பொழிவாற்றுவது வரை இது காறும் சாமியார்கள் செய்திராத என்னென்னவோ செய்து பிரமிப்பூட்டி வருபவர்கள். ஜனாதிபதி, பிரதமர்களுக்கு ஆசி வழங்குதல் இவர்கள் ப்ரைம் டைம் ஜாப்.

இந்தியாவில் இருந்த வரை விரும்பினாலும் விரும்பா விட்டாலும் இப்படி யாராவது சாமியார் குறுக்கிடாமல் இருப்பதை தவிர்க்க இயலாமலே இருந்து வந்தது. அமெரிக்கா வந்தபின் ஆசுவாசமாய் மூச்சு விடலாம் என்றால் – டாக்டர்கள், எஞ்ஜினியர்களை விட அதிக எண்ணிக்கையில் காவி உடை எக்ஸானந்தாக்கள் இங்கே உலவி வருவது தெரிந்து அதிர்ந்தேன்.

ஆரம்பத்தில் என் மனைவிக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்ட போது இவர்களுக்கெல்லாம் மட்டும் எப்படி சுலபமாய் விசா கிடைக்கிறதென்று கவலை கலந்த ஆச்சர்யம் அடைவேன். புது பட ரிலீஸ் போல வருடம் பூராவும் எங்காவது யாராவது சாமியார் வாரா வாரம் பஜனை, பூஜை, சிறப்புரை ஆற்றிக் கொண்டிருப்பார். மக்கள் வெள்ளம் அலை மோதும்.

இந்தப் பின்னணியில் எழுதிய எக்ஸானந்தா சிறுகதை கீழே:


எக்ஸானந்தா
~சத்யராஜ்குமார் ~


ரூம் மேட் பலராமனால் வந்த வினை. சுவாமி எக்ஸானந்தாவின் அதி தீவிர பக்தன். ஆபிஸ் கம்ப்யூட்டரில் ஒரு ஃபார் லூப் எழுதுவது கூட அவரின் மகிமையால்தான் என்று பலமாக நம்பிக் கொண்டிருக்கிறான். டெஸ்க்டாப்பிலிருந்து, பர்சுக்குள் வரை அவனிடம் அவர் திருவுருவப் படம்.

எக்ஸானந்தா பக்தர்களுக்கு அருள் பாலிக்க அமெரிக்கா வரும்போதெல்லாம் பலராமன் பிசி ஆகி விடுவான். போஸ்டர் ஒட்டுவதிலிருந்து சுவாமிகளும், அவர் அடிபொடிகளும் தங்க இடம் பார்ப்பது வரை பம்பரமாய் சுழல்வான்.

….

மேலும் படிக்க…