Updates from திசெம்பர், 2009 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

  • மீனாட்சி சுந்தரம் 11:31 am on December 22, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    ஜவ்வு மிட்டாஆஆஆஆய்… 

    ”தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்” என்று கூறியிருக்கிறார் தமிழக முதல்வர்.

    நாடே கவனிக்கும் ஒரு வழக்கில், ஒரு மாநில முதல்வர் இவ்வாறு கூறும் அளவுக்கு வழக்குகள் இழுக்கப்பட வேண்டிய அவசியம் மட்டும் புரிவதேயில்லை. கிட்டத்தட்ட முடிந்துபோன வழக்கு, மறுபடி ‘ஐயா.. வணக்கம்’ என்பதிலிருந்து ஆரம்பிக்கவேண்டும்.

    ஒரு மாநில அரசு தொடர்ந்த வழக்கே இப்படி என்றால் சாதாரண குடிமகன் நிலைமையை யோசித்துப்பாருங்கள்.

    நாட்டில் கைதிகளின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட நாற்பது விழுக்காட்டுக்கு மேல் விசாரணைக் கைதிகள். பஞ்சாயத்து அலுவலகத்தில் பல்பு திருடிய ஒருவர் மூன்றரை வருடங்களுக்கு மேல் விசாரணைக் கைதியாய் இருக்கிறார். அதற்கு தண்டனை கொடுத்திருந்தாலே அதிகபட்சம் எட்டு மாதங்கள்தானாம்.

    ஆனால், பைனான்ஸ் கம்பெனி அதிபர் எல்லாம் பெயிலில் வந்து பர்த்டே கொண்டாடுகிறார்கள்.

    வேறு நாட்டில் இருந்து விசா இல்லாமல் வந்து ரயில்வே ஸ்டேஷன், ரஸ்தா எல்லாம் சுட்டுக் கொண்டே போனதை வீடியோ பார்த்த நீதிபதி இன்னும் விசாரித்துக் கொண்டே இருக்கிறார். அவனோ பிரியாணியில் வேண்டுமென்றே உப்பை அதிகமாய்ப் போட்டுவிட்டார்கள் என்று உண்ணாவிரதம் இருக்கிறான்.

    தெய்வங்கள் நின்று கொல்லட்டும்…. நீதிமன்றங்களும் அதையே செய்யவேண்டுமா என்ன…?

    இவர்கள் நின்று நிதானித்துக் கொல்வதற்குள் அவனவனே சுகமாய் விதி முடிந்து செத்துவிடலாமென்ற தைரியத்தில்தான் பல ஊழல்களை தைரியமாய் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

    கீழ்கோர்ட் சொன்ன தீர்ப்பை மேல்கோர்ட் மாற்றுகிறது. உயர்நீதிமன்றம் சொன்னதை உச்சநீதி மன்றம் மறுக்கிறது. விசாரணை நீண்டுகொண்டே போகிறது. யார் சொன்ன நீதி தப்பு என்று தெரிவதேயில்லை.

    ‘தப்பு செய்தாயா… தண்டனை உடனே’ என்று சொல்லிப் பாருஙகள்; தவறுகள் எவ்வளவு சடுதியில் குறைகிறதென்று?

    விஷம் குடிக்க மறுப்பவன் மதுவருந்துவது எதனால்…?

    விஷம் உடனே கொல்லும்… மது கொல்ல இன்னும் பத்து வருடம் ஆகும் என்பதால்தானே?

    புகையினால் கேன்ஸர் வரும்…. ஆனால் இருபது வருடம் கழித்து – என்பதால்தானே புகையிலைப் பொருட்கள் வியாபாரம் கனஜோராய் நடக்கிறது.

    இதே மனோபாவம்தான் தண்டனை தாமதமாகும் எனத் தெரிவதால் தவறுகளைத் துணிந்து செய்ய வைக்கிறது.

    தெய்வமே ஆகட்டும். அடுத்தவன் கையை வெட்டினால் உன் கை, அடுத்தவன் தலையை வெட்டினால் உன் தலை கழண்டு விழுந்துவிடும் என்று இருந்திருக்கட்டும்…. எவனாவது அடுத்தவனை வெட்ட அருவாளை எடுப்பானா?

    அவ்வளவு ஏன்…?

    பொய் சொன்னால் உன் நாக்கு அறுந்துவிடும் என்றோ, தாவாங்கட்டை கழண்டுவிடும் என்றோ தண்டனை இருந்திருக்கட்டுமே……

    ………எவனாவது கட்டின பெண்டாட்டியைப் பார்த்து “ஐ லவ் யூ…” சொல்லிவிடுவானா என்ன…?

    -மீனாட்சி சுந்தரம்

     
    • N.K.Atitya 1:35 பிப on திசெம்பர் 22, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நீதியைப் பற்றிப் பேச ஆரம்பித்து கடைசியில் பீதியை கிளப்பிட்டீங்களே சார்!!!

      • REKHA RAGHAVAN 1:16 முப on திசெம்பர் 23, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

        //எவனாவது கட்டின பெண்டாட்டியைப் பார்த்து “ஐ லவ் யூ…” சொல்லிவிடுவானா என்ன…?//

        இது சூப்பரோ சூப்பர். நல்ல பதிவு.

        ரேகா ராகவன்.

        • Vijayashankar 5:08 முப on திசெம்பர் 23, 2009 நிரந்தர பந்தம்

          //எவனாவது கட்டின பெண்டாட்டியைப் பார்த்து “ஐ லவ் யூ…” சொல்லிவிடுவானா என்ன…?//

          நான் தினம் சில முறை சொல்கிறேன். கூடவே சில டார்லிங்குகளும்… தவறா? இந்தியாவிலே இதெல்லாம் சகஜமப்பா!

        • meens 9:28 முப on திசெம்பர் 24, 2009 நிரந்தர பந்தம்

          இன்னும்கூடச் சொல்லலாமப்பா…. இங்கே இதெல்லாம் allowed.

        • meens 9:30 முப on திசெம்பர் 24, 2009 நிரந்தர பந்தம்

          ரொம்ப பேரு பாதிக்கப்பட்டிருப்பாங்க போல இருக்கே…. நன்றி ராகவன் சார்.

      • மீன்ஸ் 9:34 முப on திசெம்பர் 24, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

        ஆதி……….. பாதிதானேய்யா சொல்லிருக்கேன். இதுக்கேவாஆஆஆஆஆஆஆஆ……..
        மீதிய அப்புறம் சொல்றேன்.

    • தனபால் பத்மநாபன் 10:03 முப on திசெம்பர் 29, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      ஆனாலும் கணவர்களின் மன நிலையை விளக்க என்னவெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது?

    • சந்துரூ 6:36 முப on ஜனவரி 29, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      தெய்வம் வேண்டுமானால் நின்றே கொல்லட்டும். நீதியும் நின்றோ, உட்கார்ந்தோ, தூங்கிக்கொண்டோ, சாய்ந்தோ – எப்படி வேண்டுமானாலும் கொல்லட்டும் – ஆனால் “அன்றே கொல்லட்டும்”!

  • தனபால் பத்மநாபன் 11:36 am on December 12, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    ஆழ்மனதின் சலனம் 

    நண்பர்களாக ‘இன்று’வில் எழுதுவதால் சற்று personal ஆக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

    அன்றாடம் நிகழும் சம்பவங்கள் எனக்கு ஏதோ ஒரு செய்தியை பிரத்யேகமாக சொல்லிச் செல்வதாகத் தோன்றுகிறது.

    ‘இன்று’ பதிவில் முதல் முறையாக எழுதுவதால் சமீபத்தில் சந்தித்த இரண்டு மகிழ்ச்சியான ‘பிரத்யேகச் செய்திகளை’ சொல்லலாம் எனத் தோன்றுகிறது.

    தனபால் கம்யூனிச சிந்தனை கொண்டவராக முதலில் அறிமுகமானார். அதன் பின் கொஞ்ச நாளில் தீவிர இலக்கிய ஆர்வலராகத் தெரிந்தார். கோமல் சுவாமினாதனின் சுபமங்களாவில் ஒரு சிறுகதை எழுதின போதுதான் இவர் எழுத்தாளர் என்றறிந்தேன். அதன் பின் சில வருட இடைவெளிக்குப் பின் சந்தித்த போது கணினி தொழிலதிபராக மாறியிருந்தார். அப்போது நான் கொஞ்சம் இவருடன் நெருங்கிப் பழகியிருந்தேன். இவருடைய இலக்கு தொழிலதிபராவதோ, எழுத்தாளராவதோ அல்ல என அறிந்தேன். திரைப்படம். அதற்கு அச்சாரமாக டாக்டர் திரு.கலாம் அவர்களின் வாழ்க்கையை ஒட்டிய டாக்குமெண்ட்டரி ஒன்றை குழந்தைகளுக்காக இயக்கி வெளியிட்டார். இவருடைய அனுபவங்களை சின்ன சின்ன விஷயங்களாக இன்று-Today-ல் பகிர்ந்து கொள்ள கேட்டேன். இதோ முதல் பதிவை அளித்துள்ளார். தொடர்வார் என நம்புகிறேன்.

    -சத்யராஜ்குமார்

    ஒன்று:

    Mani Ratnamகோவா திரைப்பட விழாவில் மிகுந்த தடுமாற்றத்திற்குப் பிறகு அந்தக் கேள்வியை மணிரத்னத்திடம் கேட்டேன்.

    ‘உங்களுக்கு மிகவும் பிடித்த இருவர் படத்தில் ஏன் அரசியல்வாதிகளின் இருண்ட பக்கங்களைக் காட்டவில்லை?’

    மணிரத்னம் சொன்னார், ‘I left it for you.’

    ‘You’ என்பது என்னை மட்டுமல்ல, புதிய தலைமுறை இயக்குனர்கள் அனைவரையும் குறிக்கும் என்பதை உணர்ந்தாலும் அந்த பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.

    இரண்டு:

    Dr. Kalamஇன்று டாக்டர்.கலாம் அவர்களை அவருடைய டெல்லி இல்லத்தில் சந்தித்தேன். ஒரு விழாவிற்கு என்னையும் அழைத்துப் போனார்.மாலையில் அவர் இல்லத்திற்குத் திரும்பியதும் பேசிக் கொண்டிருக்கும்போது சொன்னார், ‘You have to come up big, you are deserved.’

    எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. Because he knows all hardships I went through.

    ஒரு புதிய மனிதரை சந்திப்பது, தினசரியில் சிறு குறிப்பாக ஒரு செய்தியை படிக்க நேர்வது, எதிர்பாராத நேரத்தில் ஒலிக்கும் ஆத்மார்த்தமான திரைப் பாடல், திடீரென வரும் பிரிவு, ஒரு நட்பு என எல்லாவற்றிலும் பிரத்யேகமான செய்தி ஒன்று ஒளிந்திருப்பதாகத் தோன்றுகிறது. சந்தோஷம் தர வேண்டிய கணங்கள் கூட ஆழ்மனதில் மிகுந்த அதிர்ச்சியையும், பயத்தையும் கொடுக்கின்றன.

    வயதாகிக் கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை.

    • தனபால் பத்மநாபன்
     
    • ஆர்ஜி 12:26 பிப on திசெம்பர் 12, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      மற்றவர்கள் நம்மீது அபரிமிதமான நம்பிக்கை வைக்கும்போது நம்மை நாமே தராசில் நிறுத்திப் பார்க்கிறோம். நிரூபித்தாகவேண்டிய சூழல் மற்றும் அதனால் ஏற்படுகிற உணர்வுகள்தான் நீங்கள் சொல்வது என்று தோன்றுகிறது. மேலும் உங்கள் அனுபவங்களை எழுதுங்கள். வாழ்த்துக்கள் தனபால்.

    • மீன்ஸ் 10:13 முப on திசெம்பர் 14, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்வரவு தனபால்.

    • பொன்.சுதா 5:14 முப on திசெம்பர் 18, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      உங்கள் வருகைக்கு வாழ்த்துக்கள் தனபால். சுபமங்களா சிறுகதைக்கு பிறகு உங்கள் எழுத்தை இப்போதுதான் படிக்கிறேன். ஷாராஜ் பார்த்தால் ரொம்ப சந்தோசப்படுவார். பாராட்டுக்கள். மிக பெரிய மனிதர்களுடனான சந்திப்புகளை நீங்கள் இன்னும் விரிவாகவே எழுதலாம். தொடர்ந்து எழுதுங்கள் தனபால்.

      • சரசுராம் 5:33 முப on திசெம்பர் 18, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

        வாழ்த்துக்கள் தனபால். ’இன்று’ மூலம் மீண்டும் உங்கள் எழுத்தை படிப்பதில் சந்தோசம். தொடர்ந்து எழுதுங்கள்.

      • தனபால் பத்மநாபன் 7:13 முப on திசெம்பர் 19, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

        நன்றி சுதா & ராம். நேரம் இருக்கும்போது http://minveli.wordpress.com/ பாருங்கள். சில கவிதைகள் எழுதியிருக்கிறேன். (தமிழ்நாட்டின் 6 கோடி கவிஞர்களில் நானும் ஒருவனாகிவிட்டேன்!) 🙂

  • சத்யராஜ்குமார் 8:21 pm on December 8, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 3 

    வருடம் நினைவில்லை.

    எழுத்தாளர் ராம் ‘சரசுராம்’ என்ற பெயரில் எழுதத் துவங்குவதற்கு முன்பொரு நாள். சாயந்தரம் போல வீட்டுக்கு வந்தவர், “ப்ரீயா இருந்தா வாங்களேன். சென்னையில் இருந்து வந்திருக்கும் என் நண்பர் ஒருவர் அஷோக் ஹோட்டலில் தங்கியிருக்கார். பார்த்துட்டு வரலாம்.”
    lit-bad-luck
    புதுப் புது சந்திப்புகள் எப்போதும் மகிழ்ச்சிக்குரியன. யார் என்று கூட கேட்கவில்லை. சாவி இதழுக்காக எழுதிக் கொண்டிருந்த கதையை பாதியில் நிறுத்தி விட்டு புறப்பட்டேன். எழுதிக்கொண்டிருந்த அந்த சிறுகதை பற்றி வழக்கம் போல ராமிடம் விவாதித்துச் சென்றதில் மூன்று கிலோ மீட்டர்களை சட்டென்று கடந்தோம்.

    பொள்ளாச்சியில் சினிமா ஷூட்டிங்குகள் அமோகமாக நடை பெற்று வந்த நாட்கள் அவை. அஷோக் ஹோட்டல் போன்ற லாட்ஜ்கள் சினிமா கலைஞர்களால் நிரம்பியிருக்கும். ராம் இரண்டாம் தளத்தில் இருந்த அறைக்கதவை தட்டியபோது, தலைவாசல் விஜய் எங்களை முறைத்துப் பார்த்துக் கொண்டே கடந்து சென்றார். (ஏன் முறைத்தார் என்று தெரியவில்லை)

    கதவு திறந்தது. கண்ணாடி அணிந்த, லேசாய் தலை சிலும்பிய, இளம் மஞ்சள் டி ஷர்ட்டும், நீல நிறத்தில் கட்டம் கட்டிய லுங்கியும் தரித்திருந்த இளைஞர், ”வாங்க ராம். ” என்றார். கையில் சிகரட் புகைந்து கொண்டிருந்தது. ”இவர்தான் எழுத்தாளர் ம.வே.சிவகுமார்!” என்று எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் சரசுராம்.

    அந்த சமயத்தில் நான் கமர்ஷியல் இலக்கியத்தில்(!) முழு மூச்சாய் இருந்ததால் ஒரு அற்புதமான எழுத்தாளரை சந்திக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல், ”ஹலோ.” என்று சும்மா கை குலுக்கி விட்டு, ஓரமாய் நின்று அவர்கள் இருவரும் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

    தேவர் மகன் ஷூட்டிங்கிற்காக வந்திருக்கிறார் என்று தெரிந்தது. பாங்க்கில் நல்ல வேலையில் இருப்பவர். சினிமா வெறியில் காலவரையற்ற விடுப்பு எடுத்துக் கொண்டு கமல், பாலச்சந்தர் போன்றோரிடம் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்று அறிந்தேன். ஒரு சிகரட் தீர்ந்தால் பயர் குறையாமல் அடுத்த சிகரட் பற்ற வைத்துக் கொண்டு பேசினார்.

    சுமார் ஒரு மணி நேர சந்திப்பிற்குப் பிறகு வீடு திரும்புகையில், ”அவர் புக் ஏதாச்சும் இருக்கா?” என்று கேட்க, சரசுராம் அவர் வீட்டிலிருந்து ‘வேடந்தாங்கல்’ நாவலை எடுத்துக் கொடுத்தார். துள்ளலும், எள்ளலும் நிறைந்த எழுத்து நடை. படிக்கப் படிக்க பிரமித்தேன். இரு பொருள் பொதிந்த அந்த தலைப்பு அதன் பின் பல சிறுகதைகளுக்கு நல்ல பெயர் சூட்ட இன்ஸ்பிரேஷனாக இருந்தது.

    பல வருஷம் கழித்து தேவர்மகன் ஷுட்டிங் அனுபவத்தை வைத்து ம.வே.சிவகுமார் எழுதிய ஒரு சிறுகதை குமுதத்தில் வெளி வந்தது. இசைக் கலைஞர் ஒருவரின் நாதஸ்வரத்தை செட் ப்ராப்பர்ட்டியாக வாங்கிக் கொடுத்து விட்டு மன அவதிப்படும் உதவி டைரக்டரின் கதை. அஷோக் ஹோட்டல் சந்திப்பு மனசுக்குள் பளிச்சிட்டு மறைந்தது. சமீபத்தில் விகடனில் அவர் சிறுகதை ஒன்றைப் படிக்க நேர்ந்த போது, அந்த சந்திப்பு பற்றி எழுத வேண்டும் என தோன்றியது.

    பதிவை எழுதி முடித்து, அவர் படம் கிடைக்குமா என்று இணையத்தில் தேடியவனுக்கு கிடைத்தது கருணை மனு என்ற அதிர்ச்சி தரும் இந்த கட்டுரை.

    மிக இளம் வயதில் நமது சமூகம் சிலருக்கு அளிக்கும் அங்கீகாரம் வரம் போன்ற கலர் பேப்பரில் சுருட்டித் தரும் சாபம்.


    சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 1 | சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 2


     
    • துளசி கோபால் 11:16 பிப on திசெம்பர் 8, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      கருணை மனுவை வாசித்துவிட்டு, மனம் கலங்கி பேய்முழி முழித்துக் கொண்டிருக்கின்றேன்.

      • சத்யராஜ்குமார் 7:44 முப on திசெம்பர் 11, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

        திறமை தற்காலத்தில் பணத்தால் அளக்கப்படுவது வருத்தமான விஷயம். இலக்கியம் சோறு போடுமா என்று உஷா ராமச்சந்திரன் அவர் வலைப்பதிவில் கேள்வி எழுப்பியிருந்தார். இலக்கியம் என்பது கோபுரம் மாதிரி. அஸ்திவாரம் இருந்தால் மட்டுமே அண்ணாந்து பார்ப்பார்கள் என்று அதற்கு நான் பதில் இட்டது நினைவுக்கு வருகிறது.

    • என். சொக்கன் 2:03 முப on திசெம்பர் 9, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      ம. வே. சிவக்குமார் அற்புதமான எழுத்தாளர், அவருடைய சிறுகதைத் தொகுப்புகள் (இரண்டா, மூணா? நினைவில்லை!), நாவல்கள் (வேடந்தாங்கல், பாப்கார்ன் கனவுகள்) அனைத்தும் மிகக் கவனமாகக் கட்டமைக்கப்பட்ட, அதேசமயம் எதார்த்தமான படைப்புகள்.

      சில மாதங்களுக்குமுன்னால் தேவர் மகன் படப்பிடிப்பு அனுபவங்களை ஒரு மாத நாவலில் எழுதினார் – அது முழுப் புத்தகமாக வரப்போவதாகப் படித்த நினைவு, என்ன ஆச்சுன்னு தெரியலை.

      நீங்கள் சொல்லும் அந்த விகடன் கதை, எந்த வாரம் வந்தது சத்யராஜ்குமார்?

      – என். சொக்கன்,
      பெங்களூரு.

    • woven 3:06 முப on திசெம்பர் 9, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      http://pksivakumar.blogspot.com/2007/01/blog-post_26.html
      முன்பு பி.கே.எஸ். பதிவில் மூலம் அறியப்பட்ட (எனக்கு) ம.வே.சிவக்குமாரின் கருணை மனு அதே வலி மீண்டும் நினைவுப்படுத்தியது.

      • சத்யராஜ்குமார் 7:53 முப on திசெம்பர் 11, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

        சுட்டிக்கு நன்றி. யதார்த்த நிலையிலிருந்து பார்த்தால் அவர் செயல் தவறு என்றுதான் சட்டென்று நினைக்கத் தோன்றும்.

        • Raju 8:39 முப on திசெம்பர் 14, 2009 நிரந்தர பந்தம்

          நல்ல பதிவு.

          பிரபலம், ஜால்ரா இவை தான தமிழனின் தலை எழுத்து.

          தனி மனித ஒழுக்கமும் சில சமயம் காலை வாரி விடும். ( சிலருக்கு சிகரெட் வாசம் பிடிக்காது… எங்கப்பா டி.எஸ்.பி யாக இருந்த சமயம், சிகரெட் வாசத்தோடு யாரவது வந்தால், அவர் முகம் கோணலாகி, வந்தவர் காரியம் நடக்காது! )

          அவர் எழுத்துக்கள் படிக்க ( ஆன்லைனில் ) என்ன வழி? பணம் கொடுத்து வாங்கும் ஈ-புக் வசதி உண்டா?

          அவர் தம் குழந்தைகளுக்கு ஆற்ற வேண்டிய கட்டாய சேவைகளை செய்து முடித்த திருப்தி அவர் கடிதத்தில் தென்படுகிறது!

        • சத்யராஜ்குமார் 7:16 முப on திசெம்பர் 16, 2009 நிரந்தர பந்தம்

          @Raju மின்வடிவில் எங்கேயும் இருக்கிற மாதிரி தெரியவில்லை.

    • சித்ரன் 5:16 முப on திசெம்பர் 9, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      ம.வே. சிவக்குமார் ஒரு அற்புதமான எழுத்தாளர். அநாயாசமான நீரோட்டம் போன்ற புதுமையான எழுத்து நடை அவருடையது. பொள்ளாச்சியில் தேவர் மகன் படப்பிடிப்புக்கு நடுவேயும், மற்ற இடங்களிலும் அவரை சந்தித்து உரையாடிய பொழுதுகள் நினைவுக்கு வருகின்றன. சரசுராமும், நானும் அவருக்கு கொஞ்சம் சர்ப்ரைஸ் எல்லாம் கொடுத்தது ஒரு சின்ன கதை.

      என்னைப் பொறுத்தவரை இந்த ‘வடக்கிருத்தல்’ விஷயத்துக்கெல்லாம் அவர் போயிருக்கவேண்டியதில்லை. நம்பிக்கைதானே வாழ்க்கை. கடைசி வரை மோதிப் பார்த்துவிட வேண்டாமா? ‘ஒலகம் பெர்சு மாமூ’ என்பதை மனதில் கொண்டாலே எப்படியாவது ஜெயித்துவிட முடியாதா?? (என்ன, வாழ்வதற்கு கொஞ்சம் நுண்ணரசியலும் தெரிந்திருக்கவேண்டும்.)

    • v.sundaravadivelu 12:24 பிப on ஜனவரி 4, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      it s a great curse for writers, especially tamil writers. even the great writer STELLA BRUCE cannot survive in this stupid society.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி