டால்பின்கள் – தீபாவளி சிறுகதை 

தமிழோவியம் தீபாவளி மலருக்காக எழுதியது

“நெத்தியில் என்னமோ பட்டிருக்கு.” என்றான் எலிவேட்டரில் என்னைப் பார்த்த அமெரிக்க மேலாளன்.

இது அக்கறை இல்லை. ஒரு வித இளக்காரம். அப்பாவி போன்ற தொனியில் கேள்வி கேட்டு, நறுக்கென்று குத்தும் இது எந்த வகை இலக்கண அணி என்று கொத்தனார் நோட்ஸில்தான் தேடிப் பார்க்க வேண்டும்.

“ஹோலி ஆஷ்.” என்றேன். “இன்னிக்கு தீபாவளி. இந்தியப் பண்டிகை தினம். வீட்டில் சாமி கும்பிட்டு வரேன்.”

“ஓ… ஐயாம் சாரி.” – சிரித்துக் கொண்டே ஒரு போலியான சம்பிரதாய வருத்தம்.

அவனுக்கு உறைப்பது போல் இன்னும் கொஞ்சம் விளக்க வேண்டும் என்று தோன்றியது. “நீயும், நானும், இந்த உலகத்தின் ஒவ்வொரு ஜீவராசியும் ….


மேலும் படிக்க…