கால் ஃப்ரம் கடவுள்

பேச ஆரம்பித்ததும் கண்டக்டர் கத்தினார்.
“ஏம்பா… டிக்கெட்டை வாங்கிட்டுப் பேசேன். என்னதான் இருக்கோ அந்த ஃபோன்ல..? எங்க தாலிய அறுக்கறானுக..!”.
பஸ்ஸில் எல்லோரும் திரும்பி என்னையே பார்க்க, மன்னிப்புக் கேட்டு டிக்கெட்டை வாங்கித் திரும்பும்போது டேனி கேட்டான்.
“என்னப்பா… பஸ்ஸிலயா வர்ற..?”.
நான் வர இருக்கும் ஆபத்து புரியாமல், “ஆமாடா..!” என்றதும், “யாரு விசில் அடிக்கறாங்க..?” என்று கேட்டான்.
நான் “கண்டக்டர் மாமாடா…!” என்றதுதான் தாமதம், “ஃபோனைக் கண்டக்டர் மாமாகிட்டக் கொடு…!” என்று ஆரம்பித்துவிட்டான்.
கண்டக்டரோ கொடூரக் கோபத்தில் எல்லோரையும் கத்திக் கொண்டிருந்தார்.
என்ன செய்வது என்று யோசித்தபடியே, நானே கண்டக்டர் போல கொஞ்சம் மிமிக்ரி எல்லாம் பண்ணிப் பார்த்தேன். நம்ம ஃபெர்பாமென்ஸ் நாலு வயசுக் குழந்தையைக் கூட ஏமாற்றத் துப்பில்லை.
கடைசியாய் டேனி கோபத்தில், “ஃபோனை கண்டக்டர் மாமாகிட்டக் குடுடா..!” என்றான். இனி மரியாதையில்லை.
குழந்தையை மேலும் ஏமாற்ற மனதில்லாமல் நேராய்க் கண்டக்டரிடம் போய், “சார்.. என் பையன் உங்ககிட்டப் பேசணும்ங்கிறான். ஒரு ரெண்டு நிமிஷம் பேசிட்டுக் கொடுங்க சார்…ப்ளீஸ்..!”.
‘ஒருவேளை லூஸோ…!” என்று யோசித்தபடி நிமிர்ந்தவர், என் உடையைப் பார்த்துவிட்டு, “சின்னப் பையனா சார்..?” என்றபடி ஃபோனை வாங்கினார்.
ஒரு மூன்று விநாடிகள்தான் இருக்கும். “ஆமாடா…”, “சாப்டுட்டேன். நீ சாப்டுட்டியா..?”, “ஆமா, அங்கிள்தான் விசிலடிச்சேன்..” என்றவர், அவன் கேட்டானோ என்னவோ மேலும் ஒருமுறை ஃபோனைக் கையில் வைத்துக் கொண்டே விசிலடித்தார். அப்புறம் கொஞ்சம் மகிழ்ச்சியாய் ஃபோனை என்னிடம் கொடுத்தவர், அடுத்து வந்தவர்களைக் கவனிக்க ஆரம்பித்தார்.
நானோ எங்கே என் பையன், ‘டிரைவர் மாமாகிட்ட ஃபோனைக் கொடு..!’ என்று கேட்டுவிடுவானோ என்று பயந்து,”அப்பா… சீக்கிரம் வீட்டுக்கு வந்துடறேன்..!’ என்று வேகவேகமாய் ஃபோனைக் கட் செய்தேன்.
அதன்பிறகு, முக்கால் மணி நேரம் என் ஸ்டாப் வரும்வரை கூட்டம் அப்படியே கொஞ்சமும் குறையாமல்தான் இருந்தது. ஆனால், அந்தக் கண்டக்டர் மிகுந்த சந்தோஷத்துடனே எல்லோரையும் நடத்திக் கொண்டு வந்தார்.
எங்கோ முகம் தெரியாத ஒரு நபரின் மாலையை என் குழந்தை மகிழ்ச்சிகரமாக்கியது, எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிப்பதாக இருந்தது.
என் குழந்தை மட்டுமில்லை… எந்தக் குழந்தையானாலும் சொல்கிறேன்.
கடவுளை விடவும் குழந்தைகள் மேலானவர்கள் தான். ஏனென்றால், கடவுள் சேற்றில் பூப்பூக்க வைத்தால், குழந்தைகளோ நெருப்பில் பூக்க வைத்துவிடுகிறார்களே..!
********
டேனியின் உலகம் இங்கேயும் விரிகிறது:
Think Why Not 1:05 முப on ஜனவரி 1, 2011 நிரந்தர பந்தம் |
அருமையான பதிவு…
குழந்தைகளின் உலகமே அலாதியானது…
ஜெகதீஸ்வரன் 2:13 முப on ஜனவரி 1, 2011 நிரந்தர பந்தம் |
புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே!.
சென்ஷி 3:23 முப on ஜனவரி 5, 2011 நிரந்தர பந்தம் |
juupper :))
ப்ரொபைல்ல இருக்கறது உங்க போட்டோவா பாஸ்?
கவாஸ்கர் 6:58 முப on ஜனவரி 5, 2011 நிரந்தர பந்தம் |
சார் உண்மையிலேயே கதை நெகிழ வைத்து விட்டது, சென்னை நகர வாசியின் அனுபவத்தை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்,, வாழ்த்துக்கள்
jeni 7:22 முப on ஜனவரி 5, 2011 நிரந்தர பந்தம் |
Excellent
மணி(ஆயிரத்தில் ஒருவன்) ) 9:50 முப on ஜனவரி 5, 2011 நிரந்தர பந்தம் |
//கடவுளை விடவும் குழந்தைகள் மேலானவர்கள் தான். ஏனென்றால், கடவுள் சேற்றில் பூப்பூக்க வைத்தால், குழந்தைகளோ நெருப்பில் பூக்க வைத்துவிடுகிறார்களே..!//
மீன்ஸ்..அருமையான வரிகள் எனது மனதை நெகிழவைத்துவிட்ட வரிகள்…
காஞ்சி ரகுராம் 6:24 முப on ஜனவரி 7, 2011 நிரந்தர பந்தம் |
இந்தக் கள்ளமற்ற மனநிலை மேலும்மேலும் வளர்ந்தபடி டேனியும் வளர வாழ்த்துக்கள்.
சூரியப்பிரகாஷ் 12:12 முப on ஜனவரி 8, 2011 நிரந்தர பந்தம் |
அருமை… அருமை… அருமை….
மா சிவகுமார் 8:40 முப on ஏப்ரல் 19, 2011 நிரந்தர பந்தம் |
அருமை 🙂
andalmagan 9:42 முப on ஏப்ரல் 19, 2011 நிரந்தர பந்தம் |
நல்ல பதிவு …அருமை..பதிவிற்க்கு நன்றி
iyyanars 9:51 முப on ஏப்ரல் 19, 2011 நிரந்தர பந்தம் |
Everybody care abt child…but child doesn`t care anybody!
Anandamayam 10:40 முப on ஏப்ரல் 19, 2011 நிரந்தர பந்தம் |
அற்புதமான நிகழ்வு! கடைசி இரண்டு வரிகள் மனத்தில நீங்காமல் நிறைந்திருக்கிறது!
Sriraam 10:55 முப on ஏப்ரல் 19, 2011 நிரந்தர பந்தம் |
அழகு !! கதை மட்டுமல்ல உங்கள் கவனிப்பும் !!!
rajakumar 9:37 பிப on ஏப்ரல் 20, 2011 நிரந்தர பந்தம் |
Nice Story
கோளாரு 5:56 முப on ஜூன் 14, 2011 நிரந்தர பந்தம் |
ஒரு நல்ல தந்தை தெரிகிறார் தல 🙂
கோமாளி செல்வா 7:09 முப on ஜூலை 8, 2011 நிரந்தர பந்தம் |
//கடவுளை விடவும் குழந்தைகள் மேலானவர்கள் தான். ஏனென்றால், கடவுள் சேற்றில் பூப்பூக்க வைத்தால், குழந்தைகளோ நெருப்பில் பூக்க வைத்துவிடுகிறார்களே..!//
நான் மீனாட்சி அண்ணாவின் கதைகள் நிறைய படிச்சிருக்கேன். உண்மையில் ரொம்ப ரொம்ப அருமையான பதிவு அண்ணா 🙂
Elango 9:15 முப on ஓகஸ்ட் 11, 2011 நிரந்தர பந்தம் |
//கடவுளை விடவும் குழந்தைகள் மேலானவர்கள் தான். ஏனென்றால், கடவுள் சேற்றில் பூப்பூக்க வைத்தால், குழந்தைகளோ நெருப்பில் பூக்க வைத்துவிடுகிறார்களே..!//
Great lines