சிறுகதை. சிக்கல்கள். [2]
அதாவது எதைப் பற்றி எழுதப் போகிறோம் என்கிற தெளிவு.
கதை எழுத வழி காட்டும் புத்தகங்களாகட்டும், எழுத்தாளர்களாகட்டும் கண்ணில் படும் சிறுகதைக்கான விஷயங்களை ஒரு டயரியில் குறித்து வைக்கச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள்.
இல்லா விட்டால் அவை மறந்து போகும் என்பதே அந்த அறிவுரைக்கான காரணம்.
எனக்கு அந்தப் பழக்கமே இல்லை.
நான் மறந்து போகும் விஷயங்கள் கதைக்கு உதவாத விஷயங்களாகத்தான் இருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. சுவாரஸ்யமான விஷயங்களை எத்தனை நாளானாலும் என்னால் மறக்க முடியாது.
நான் மூன்றாங்கிளாஸ் படிக்கையில் பள்ளியின் வேலிக்கருகில் அநாதையாய் விடப்பட்டிருந்த நாய்க்குட்டியை வகுப்பறைக்கு எடுத்து வந்து விட்டேன்.
பெஞ்ச்சில் அதை என் பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்ள பேபி டீச்சர் அனுமதித்ததும், திருதிருவென விழித்துக் கொண்டு அந்த நாய்க்குட்டி வகுப்பறையையும், நாங்கள் அந்த நாய்க்குட்டியையும் வேடிக்கை பார்த்த காட்சியை இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை.
அதில் ஒரு சிறுகதைக்கான சுவாரஸ்யம் நிச்சயம் இருக்கிறது.
ஆகவே சிறுகதைக்கான விஷயத்தைத் தேடி நான் எங்கும் போவதில்லை. வருடக் கணக்காய் அவை மனதுக்குள் தூங்கிக் கொண்டிருக்கின்றன.
(தொடரும்)
அனைத்து பகுதிகளையும் இங்கே படிக்கலாம்.
செந்தில் 12:25 பிப on ஜனவரி 30, 2011 நிரந்தர பந்தம் |
ஆழம்மான்ன கருத்து, அமர்க்கலமான ஆரம்பம்.
சத்யராஜ்குமார் 11:29 முப on ஜனவரி 31, 2011 நிரந்தர பந்தம் |
நன்றி.
காஞ்சி ரகுராம் 12:13 முப on ஜனவரி 31, 2011 நிரந்தர பந்தம் |
குறிப்பெடுக்கத் தேவையில்லை என்பது முற்றிலும் உண்மை. சுவாரஸ்ய நிகழ்ச்சியின் நீள அகல ஆழங்கள் மனதில் அப்படியே பதிந்துவிடும். அதிலும் ஒரு எழுதும் மனதிற்கு ப்ளூ-ப்ரிண்டாகவே பதிந்துவிடும். அவற்றை நெஞ்சம் ஒருகாலும் மறப்பதில்லை. ஆனால் இன்றைய அவசர வாழ்வில், அப்படிப் பதிந்திருப்பதையே நாம் மறக்கிறோம். அதற்காகவாவது, நிகழ்ச்சியின் தலைப்பையாவது குறிப்பெடுக்க வேண்டியிருக்கிறது என நான் நினைக்கிறேன்.
சத்யராஜ்குமார் 11:42 முப on ஜனவரி 31, 2011 நிரந்தர பந்தம் |
ரகுராம், ஏற்கெனவே குறிப்பிட்டபடி எழுத்தைப் பொறுத்தவரை என்னுடைய இயங்குமுறையைப் பற்றி எழுதுவதே நோக்கம். இது சரியா, தவறா என்பதல்ல. சம்பவங்களைப் பார்த்து நான் எழுத உட்காருவதில்லை. எழுத உட்காரும்போது சம்பவங்களை அசை போடுகிறேன். 🙂
காஞ்சி ரகுராம் 12:23 முப on பிப்ரவரி 1, 2011 நிரந்தர பந்தம்
ஹஹ்ஹா… நீங்கள் குறிப்பெடுக்காததையும், இதை எழுத அமர்ந்தபின்தான் அசை போட்டுக் குறிக்கிறீர்கள், இல்லையா? :). நல்ல சுவை. தொடருங்கள். நல்ல பின்னூட்டங்களும் தொடரும். அலசல்களும் வளரும். எழுதும் ஆசையும் ஊற்றெடுக்கும் 🙂
PADMANABAN 1:12 முப on ஜனவரி 31, 2011 நிரந்தர பந்தம் |
நிண்ட நாட்களாகி விட்டது …புத்தாண்டு தொடங்கி அனைத்து சிறப்பு நாட்களுக்கும் வாழ்த்துகள் சத்யா ….
எவ்வளவு கதை படித்தாலும் ..ஓரு கதை எழுதுவது மிக கடினமான விஷயமாகவே இருக்கிறது …கரு தேர்ந்து எடுத்து , முன் வரி அமைத்து ..நடை கொடுத்து, முடித்து . தலைப்பிட்டு அனுப்புவது என்பது ஓரு பிரசவ உணர்வு ஆகிவிடுகிறது …. அதற்க்கெல்லாம் தனியாக ஓரு சுழி வேண்டும் என ஒதுங்கியாயிற்று…
நீங்கள் எழுதப்போகும் அனுபவப்பாடம், கதை எழுதுவதற்கான மீண்டும் ஆவலைத் தூண்டுகிறது .. நன்றி …தொடருங்கள்…
சத்யராஜ்குமார் 11:43 முப on ஜனவரி 31, 2011 நிரந்தர பந்தம் |
நன்றி பத்மனாபன். உங்களூக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.
//அதற்கெல்லாம் தனியாக ஓரு சுழி வேண்டும் என ஒதுங்கியாயிற்று…//
அப்படியெல்லாம் இல்லைங்க. எல்லாமே பயிற்சிதான்.
ila 9:21 முப on ஜனவரி 31, 2011 நிரந்தர பந்தம் |
குறிப்பெடுத்துக்குறது நல்லதுன்னு நினைக்கிறேங்க. நிறைய சுவாரஸ்யமான விசயங்களை சிலவற்றை மறந்து போயிருவோம். மறந்து போறது மனுச இயல்புதானுங்களே. அப்படி மறந்து போனதிலேயிருந்தும் கூட நல்ல கதைகள் கிடைக்கலாமே 🙂
சத்யராஜ்குமார் 11:50 முப on ஜனவரி 31, 2011 நிரந்தர பந்தம் |
இளா, கருத்துக்கு நன்றி. உங்களுக்கும் ரகுராமிற்கு சொன்ன பதில்தான். இன்னொரு கோணத்தையும் பாருங்கள். மேலே நான் குறிப்பிட்ட மூணாங்கிளாஸ் நாய்க்குட்டி விஷயத்தை மனதைத்தவிர வேறு எங்கே குறித்து வைத்திருக்க முடியும்? ஆகவே நான் அதை செய்வதில்லை. இது போன்ற ஒப்பீடுகள் பின்னூட்டங்களில் எழ வேண்டும் என விரும்பினேன். எழுப்பியதற்கு நன்றி! 🙂