கிரந்தம் தவிர்!
சமீபத்தில் கிரந்தம் தவிர்த்து எழுதுவது குறித்த விவாதத்தை ட்விட்டரில் படிக்க நேர்ந்தது. ஒரு புனைவு எழுத்தாளனாக எழுத்தில் முற்றிலுமாக கிரந்தம் தவிர்ப்பது இயலாது என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதற்கு கிரந்த வார்த்தைகள் சொற்கள் முதலில் சமூகத்திலிருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும். இது ஒரு பிடி இருபத்தியிரண்டு நிலைமை.
ஆனால், நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முந்தைய செய்தித்தாளில் சுருட்டித் தரப்பட்ட சுண்டலோ, பஜ்ஜியோ சாப்பிட நேர்ந்தால் – அப்போதிருந்த எத்தனையோ கிரந்தச் சொற்கள் இப்போது வழக்கொழிந்து போயிருப்பதை உணரலாம். எப்படி இது நிகழ்ந்தது? இது குறித்த ப்ரக்ஞை சிந்தனை மிகுந்தவர்கள் பேசும்போதும், எழுதும்போதும் வடிகட்டிய தமிழ் வார்த்தைகளை சொற்களை தொடர்ந்து உபயோகித்து பயன்படுத்தி வந்திருக்க வேண்டும்.
ஆக முடிந்த வரை கிரந்தம் தவிர்ப்பதன் மூலம் ஓரளவு தமிழ் சுத்திகரிக்க்ப்படும் வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. ஆனால் கிரந்தம் தவிர்ப்பதில் உள்ள பிரதான தலையாய சிக்கல், தகுந்த மாற்றுச் சொற்களைப் பிரயோகித்து பயன்படுத்தி எழுதும் அளவு மொழி வளம் எல்லோருக்கும் இல்லை என்பதே ஆகும். அதற்குக் காரணம் மொழி அருவியாய்க் கொட்டும் சங்க இலக்கிய தமிழ் பொக்கிஷங்களை கருவூலங்களை ஆற அமர படித்து ரசிக்க தற்கால சந்ததியினர்க்கு பொறுமையில்லை அல்லது நேரமில்லை.
இது தமிழ் படிக்க மட்டுமில்லை; எல்லா துறைகளுக்கும் பொருந்தும். அதனால்தான் இணையத்தில் இன்று எல்லாமே கூட்டு முயற்சியில் நடைபெறுகின்றன. எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன். உனக்குத் தெரிந்ததை நீ சொல்லு. இணைந்து அறிவு பெறுவோம். இணைந்து செயல்படுவோம்.
அப்படித்தான் @kryes கிரந்தம் தவிர்க்க ட்விட்டரில் தினம் ஒரு சொல்லை இட ஆரம்பித்தார். படிக்க சுவாரஸ்யமாக ஆர்வமூட்டுவதாக இருந்தது. ஆனாலும் அவை ட்விட்டரின் நேரச் சுழலில் புதைந்து மறைந்து விடுவதைப் பார்த்து மெலிதான கவலை பிறந்தது.
நினைத்த போது ஒரு கிரந்தச் சொல்லை உள்ளிட்டு அதற்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறியும் வசதி வேண்டும் என எண்ணினேன். அப்படி ஒன்று ஏற்கெனவே இருக்கிறதா என்று தேடிப்பார்த்துக் கிடைக்காததால், நாள்தோறும் அலுவலகத்துக்கு பஸ்ஸில் பேருந்தில் செல்லும் நேரத்தில் இந்த எளிய கருவியை உருவாக்கி – புல்வெளி.காம் தளத்தில் வெளியிட்டுள்ளேன்.
@kryes இக்கருவி குறித்து பல யோசனைகளை சிந்தனைகளை வழங்கியுள்ளார். தினம் ஒரு சொல்லை இதில் இணைக்க தான் உதவ முடியுமென நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். @raghuji தளத்துக்கான தோற்றம், வடிவமைப்பில் தனது உதவிக்கரம் நீட்டினார்.
தளத்தில் இதுகாறும் இல்லாத சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் உங்களுக்குத் தெரியுமெனில் அதை நீங்களே இணைக்கவும் வழியுண்டு. அடுத்த முறை நீங்கள் ஒரு பதிவு எழுதும்போது கிரந்த வார்த்தை உங்கள் எழுத்தில் வந்து விழுந்தால் அதற்கு மாற்று உண்டா என இங்கே ஒரு எட்டு வந்து பார்க்கலாம்.
TPKD / TBCD (@TPKD_) 10:03 பிப on ஓகஸ்ட் 28, 2011 நிரந்தர பந்தம் |
அருமையான முயற்சி..பாராட்டுகள்…வாழ்த்துகள்.
இது கிரந்தம் இல்லாத வடமொழிச்சொற்களுக்கும் நீட்டித்தால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன் :-))
amas32 10:43 பிப on ஓகஸ்ட் 28, 2011 நிரந்தர பந்தம் |
நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்!
amas32
PADMANABAN 11:37 பிப on ஓகஸ்ட் 28, 2011 நிரந்தர பந்தம் |
நல்ல பதிவு சத்யா…பெயர்ச் சொல் தவிர மற்ற இடங்களில் கிரந்தம் தவிர்க்கலாம் …. முயற்சி திரு வினையாக்கும்… கிரந்தம் தாண்டி விடலாம் அடுத்து ஆங்கில கலப்புக்கு என்ன செய்வது…..
Ravi 12:03 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் |
நல்ல முயற்சி. நானும் சில சொற்களைச் சேர்க்கத் தொடங்கி இருக்கிறேன்.
Balaraman 1:20 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் |
மிகவும் நல்ல முயற்சி! 🙂
இந்தப் பதிவில் கீழ்க்கண்ட சொற்களையும் ‘அடித்து’ நொறுக்கவும்:
ரசிக்க – விரும்ப
யோசனைகளை – சிந்தனைகளை
அப்புறம் ‘பஜ்ஜியோ’ என்பதை ‘பஃச்சியோ’ என்று எழுத ஊக்குவிக்கலாமா?!
நானும் ‘புல்வெளி’யில் என்னால் முடிந்ததைச் செய்கிறேன், நன்றி!
சத்யராஜ்குமார் 6:08 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் |
@TPKD_ , amas32, PADMANABAN, Ravi, Balaraman உங்கள் ஆலோசனைகளுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
Kannabiran Ravi Shankar (KRS) 8:46 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் |
//ஒரு புனைவு எழுத்தாளனாக எழுத்தில் முற்றிலுமாக கிரந்தம் தவிர்ப்பது இயலாது என்பது எனது தனிப்பட்ட கருத்து//
🙂
ஓரளவு உண்மையே!
முற்றிலும் தவிர்ப்பதற்குப் பதிலாக, இயன்ற வரை தவிர்க்க முனைவோம்! இதனால் நல்ல தமிழ்ச் சொற்கள் வழக்கொழியாமல் நிலைக்கும்!
@ksrk & @raghuji – இந்தப் பணிக்கு என் மிகுந்த நன்றி!
@TPKD_ , amas32, PADMANABAN, Ravi, Balaraman – உங்களால் இயன்ற அளவு சொற்களைச் சேருங்கள்! நண்பர்களிடையேயும் அறிமுகம் செய்யுங்கள்!
elavasam 9:27 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் |
சிந்தனை என்பதை யோசனை என்ற சொல்லின் மாற்றாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. சிந்தனை = thought, யோசனை = suggestion / idea இல்லையா?
சத்யராஜ்குமார் 10:07 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் |
பலராமனின் பின்னூட்டத்துக்குப் பின் மாற்றினேன். யோசனைக்கு உரிய மாற்றுச் சொல் யாரேனும் வழங்க வேண்டும்.
Kannabiran Ravi Shankar (KRS) 10:55 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் |
@elavasam
யோசனை என்பதே தமிழ்ச் சொல் தான்! – ‘வழாமை ஓடி யோசனை நீண்டு மாலை வேய்ந்து’ என்பது மணிமேகலை!
யோசிக்கிறேன் = thought! யோசனை சொல்=suggestion! works both ways!
சிந்தனை= always, thought
C.R. Selvakumar 10:07 முப on நவம்பர் 27, 2013 நிரந்தர பந்தம் |
யோசனை என்பதற்கு ஈடாக கருத்து அல்லது கருத்தூட்டு என்று சொல்லலாம். ஒரு யோசனை வந்தது என்பதை ஒரு கருத்து தோன்றியது என்று சொல்லலாம். ஆ! அது நல்ல யோசனை என்பதை ஆ! அது நல்ல கருத்தாச்சே என்று சொல்லலாம். suggestion என்றால் பரிந்துரை, கருத்தூட்டு என்று சொல்லலாம். யோசனை என்பதையோ அது போன்ற சொற்களை நீக்கவேண்டும் என்பதையோ கருத்தாகக் கொள்ளவேண்டாம் என்பது என் தனிக்கருத்து. வாடிக்கை, அலமாரி முதலான சொற்களும் தமிழ் அல்ல. ஆனால் தமிழாக உள்வாங்கி ஆளலாம். மிக அதிகமாக வேற்றுமொழிச்சொற்கள் பெருகிப் போனால் தான் சிக்கல். ஆனாலும் ஈடான தமிழ்ச்சொற்களை ஆங்காங்கே ஆள்வதும் நல்லது. புனை கதைகள் வேறு கட்டுரை, புனைவிலா எழுத்துகள் வேறு.
ila 9:46 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் |
அருமையான முயற்சிங்க. சில வார்த்தைகளை சொற்களை இணைத்துள்ளேன். அதே மாதிரி அதை நிர்வகிக்கவும் ஒரு குழு அமைச்சிருங்க. டேமிளர்ஸ் ஆர் சோ கன்னிங் பெல்லோஸ் யூ நோ..
சத்யராஜ்குமார் 10:14 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் |
நன்றி இளா.
seenu 11:02 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் |
நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்.நன்றியுடன்
சீனு
சத்யராஜ்குமார் 6:11 பிப on ஓகஸ்ட் 30, 2011 நிரந்தர பந்தம் |
சீனு, வாழ்த்துக்கு நன்றி.
இரா. செல்வராசு 6:57 பிப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் |
நல்ல முயற்சி. தள வடிவமைப்பும் மிகவும் அழகாகவும் எளிமையாகவும் இருக்கிறது.
சத்யராஜ்குமார் 6:13 பிப on ஓகஸ்ட் 30, 2011 நிரந்தர பந்தம் |
மிக்க நன்றி.
REKHA RAGHAVAN 5:07 முப on ஓகஸ்ட் 30, 2011 நிரந்தர பந்தம் |
நல்ல முயற்சி. வாழ்த்துகள்.
சத்யராஜ்குமார் 6:57 முப on செப்ரெம்பர் 15, 2011 நிரந்தர பந்தம் |
நன்றி!
Bar-Code 11:55 முப on ஓகஸ்ட் 31, 2011 நிரந்தர பந்தம் |
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சத்யா
சத்யராஜ்குமார் 6:56 முப on செப்ரெம்பர் 15, 2011 நிரந்தர பந்தம் |
நன்றி.
blog.indian 1:25 பிப on திசெம்பர் 4, 2011 நிரந்தர பந்தம் |
திரு. இராம.கி அவர்களின் வளவு பதிவில் உள்ள சொல்லாக்கங்களின் தொகுப்பு.
http://thamizhchol.blogspot.com/
Kannabiran Ravi Shankar (KRS) 8:36 பிப on திசெம்பர் 9, 2011 நிரந்தர பந்தம் |
மிக்க நன்றி; இராம.கி ஐயாவின் செஞ்சொல்லாக்கங்களின் நனி மகிழ்நன் நான்! அவரை அறிந்தவனும் ஆதலால்…இத்தளம் கண்டு பெரிதும் மகிழ்ந்தேன்!
blog.indian 1:29 பிப on திசெம்பர் 4, 2011 நிரந்தர பந்தம் |
ஹஸ்தம் = கைத்த(ல)ம்
சுவாரஸ்யம் = சுவையாரம்
புஸ்தகம் = பொத்தகம்
ஜோடி = சோடி
Krishnan 11:56 பிப on நவம்பர் 13, 2013 நிரந்தர பந்தம் |
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்..நானும் கிரந்த சொற்களை பயன்பாட்டில் இருந்து தவிர்க்க முயல்வேன்.
Krishnan 11:56 பிப on நவம்பர் 13, 2013 நிரந்தர பந்தம் |
Reblogged this on My Perspectives and commented:
கிரந்தம் தவிர்.
C.R. Selvakumar 10:09 முப on நவம்பர் 27, 2013 நிரந்தர பந்தம் |
மிக நல்ல முயற்சி! நல்வாழ்த்துகள்!