India என்று கூகிளில் தேடினால் என்னெல்லாம் வருகிறது என்று ஒரு பொழுதுபோகாத பொம்மு மாதிரி ஒரு சின்ன ஆராய்ச்சியில் இறங்கியபோது சில விஷயங்கள் புலப்பட்டன. கூகுள் தேடுதல் முடிவுகளின் முதல் பக்கத்தில் வந்தது என்னவென்றால் கொஞ்சம் இந்திய வரைபடங்கள். சில தாஜ்மஹால் படங்கள். வெவ்வேறு நிறங்களில் இந்திய தேசியக் கொடி. அப்புறம் இந்தியா கேட் அல்லது கேட்வே ஆஃப் இந்தியா. தொடர்ந்து அடுத்தடுத்த பக்கங்களில் மேற்சொன்னவற்றின் கலவையாக திரும்பத் திரும்ப அதேதான்.
சரி ஃப்ளிக்கரில் என்ன காட்டுகிறது என்று தேடிப்பார்த்தபோது, அது தேடிக்கொடுக்கும் ‘4,278,685 results’ களில் அதிகபட்சம் கண்ணில் படுவது யாதெனில்.. தலைப்பாகை அணிந்த ஆண்கள் மற்றும் காதில் மூக்கில் கழுத்தில் விதவிதமாக நகைகளும் தலையில் முக்காடும் அணிந்த பெண்கள். பிச்சைக்கார அல்லது ஏழ்மை நிலையிலுள்ள சிறுமிகள்-சிறுவர்கள். வெண்தாடி சாமியர்கள்-சாதுக்கள். இளைத்துக் கருத்த முதியவர்களின் சுருக்கம் விழுந்த க்ளோஷப் முகங்கள். மறுபடி தாஜ்மஹால். படகுகள். கலர்ப்பொடி.
இந்தியா என்றால் இவை மட்டும் தானா என்று யோசனை வந்தது. வியக்கவைக்கிற அளவுக்கு வேறு பரிமாணங்கள் இந்தியாவுக்கு எத்தனையோ இருக்கிறதே!! ஏன் அவைகள் இந்தப் புகைப்படங்களில் சிக்கவில்லை என்கிற ஆச்சரியம் முளைத்தது.
வேறு பரிமாணம் என்று நான் சொல்வது இந்தியாவின் நாகரீக வளர்ச்சி, நகரங்கள், நவீன தெருக்கள் மற்றும் கட்டிடங்கள், தொழிற்துறை முன்னேற்றங்கள், அழகு ததும்பும் இடங்கள், நவீன இந்தியாவின் மக்கள் இப்படியாக சில விஷயங்கள். கொஞ்சம் மெனக்கெட்டுத் தேடினால் இவ்வாறாக சில புகைப்படங்கள் கிடைக்கின்றனதான்.
நான் ஒரு வெளிநாட்டில் பிறந்து வளர்ந்து கூகிளிலோ ப்ளிக்கரிலோ காட்டும் புகைப்படங்களை பார்த்திருந்தால் இந்தியா ஒரு ஏழை நாடு. அதன் அனைவரும் ஒருவித புராதனமான உடை அணிபவர்கள். பிச்சைக்காரர்களும், போதை புகைக்கிற சாதுக்களும் நிறைந்து காணப்படுவர். எங்கு பார்த்தாலும் வறண்ட நிலங்கள், குப்பை மிகுந்த நகரங்கள். கல்வியறிவு இல்லாத மக்கள். பாம்பாட்டிகள். யானைகள். எப்போதோ மன்னர்கள் கட்டிய ஒரு சில மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், கோயில்கள், மண் ரோடுகள் எட்செட்ரா என்றெல்லாம்தான் இந்தியாவைப் பற்றி ஒரு பிம்பம் கொள்வேன். அதாவது நான் சொல்வது அவ்வாறான புகைப்படங்களைப் பார்க்கும்போது தோன்றும் ஒரு பொதுவான, மேலோட்டமான, உடனடிப் பார்வை.
ஏற்கெனவே ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் முடிந்த அளவு கச்சடா நாடாகக் காட்டி ஆஸ்காரும் வாங்கி இந்தியா பற்றிய ஒரு மோசமான ஆவணமாகப் பதிந்தும் போய்விட்டிருக்கிற நிலையில் இப்படியாக ஏற்படுகிற பிம்பம் சரியானதல்ல.
பரத் பாலா தயாரித்த ஏ.ஆர். ரஹ்மானின் வந்தே மாதரம் வீடியோவைப் பார்த்தபோது கூட மேற்கண்ட உணர்வுதான் தோன்றியது. பாலைவனம், இறுக்கமான முகங்களோடு ராஜஸ்தானிகள் என்று ஒரு வறண்ட நிலையை, ஏழ்மையைப் பறை சாற்றுவது போன்ற உணர்வை அந்த வீடியோ வெளிப்படுத்தியதாக ஒரு எண்ணம் தோன்றியது. இந்தியாவைப் பற்றி எதுவும் தெரியாத யாராவது இந்த வீடியோவைப் பார்த்தால் இவ்வளவுதானா இந்தியா என்கிற மாதிரியான பிம்பம்தான் தோன்றும்.
அது தவிர இந்தியா என்றாலே வட இந்தியா மட்டும்தான் என்கிற தோற்றத்தையே இதிலிருந்து இணையத்தில் புழங்குகிற புகைப்படங்கள் தருகின்றன. தென்னிந்தியப் புகைப்படங்கள் அதிகம் கண்ணில் தென்படுவது இல்லை. இந்தியாவிலிருக்கிற அமெச்சூர் மற்றும் தொழில்முறைப் புகைப்படக்காரர்கள், பத்திரிக்கைகளில் பணிபுரியும் புகைப்படக்காரர்கள் ஆகியோர்களின் கேமராக்கள் தென்னிந்தியாவின் பக்கமும் கொஞ்சம் ஃபோகஸ் செய்தால் நலம் பயக்கும். அல்லது வலையேற்றப் பட்ட புகைப்படங்களில் முக்கால்வாசி வெளிநாட்டவரால் கிளிக்கப்பட்டதாகக் கூட இருக்கலாம். அவர்கள் எப்போதும் போல இந்தியாவின் எழிலை விட்டுவிட்டு ஏழ்மையை வெளிச்சமிட்டுக் காட்டுவதில் ஆர்வம் காட்டுபவர்களாக இருந்திருக்கக்கூடும்.
உண்மையான நவீன இந்தியாவின் அழகை எடுத்துக்காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாய் இல்லையோ என்றுதான் தோன்றுகிறது. அப்படியே இருந்தாலும் கூட அவைகள் சரியான வகையில் இந்தியா பற்றிய இணைய பக்கங்களில் உபயோகப்படுத்தப்படவில்லை. அல்லது நல்ல புகைப்படங்களை இணைய பக்கங்களில் இணைக்கும்போது அவைகளின் குறிச்சொற்கள் மற்றும் கோப்புகளின் பெயர்கள் ஏனோதானோ என்று இருப்பதால் தேடியந்திரங்கள் சரியாகக் காட்டுவதில்லை என்று கூடச் சொல்லலாம். தேடியந்திரங்களில் குறிப்பிட்ட குறிச்சொற்கள் உபயோகித்துத் தேடும்போது மட்டுமே ஒரு சிலது கிடைக்கின்றன. அப்படியே கிடைத்தாலும் இந்தியாவின் பொதுவான லைஃப் ஸ்டைலை அவைகள் காட்டவில்லை என்பதுதான் குறை.
கூகுளில் நம் பெயர் உள்ளிட்டுத் தேடும்போது எப்படி நம் சம்பந்தப்பட்ட வலைப்பக்கங்களை அழகாய்க் கச்சிதமாய் கொண்டுவந்து கொடுக்கிறதோ அது போலவே இந்தியா பற்றிய தலைசிறந்த புகைப்படங்களை இணையத் தேடலின் போது முன்னிறுத்த டெக்னாலஜியை உபயோகித்தால் இப்புகைப்படங்கள் சரியான முறையில் பார்வையாளர்களைச் நிச்சயம் சென்றடையும் என்பது நிச்சயம்.
அதிகபட்சம் கிராமங்களால் நிறைந்திருக்கும் இந்தியாவில் புகைப்படங்களில் வேறு எதைத்தான் காட்டமுடியும் என்று கேள்வி எழலாம். எத்தனையோ இருக்கிறது. இந்தியா வண்ணமயமானது. இது ஒரு அற்புதமான பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் உள்ளடக்கியது. இந்தியா ஒரு வளரும் வல்லரசு நாடு. இந்தியாவில் வெளிநாடுகளைச் சார்ந்த சுற்றுலாவாசிகளைக் கவர என்னென்னவோ இருக்கின்றன. மலைவாசத்தலங்கள், இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள். பிரம்மாண்டமான கோவில்கள், புராதனச் சின்னங்கள், பாரம்பரியம், நடனங்கள், நீர் நிலைகள், யோகா, தியானம், இயற்கை வைத்திய முறைகள், பசுமை, மக்கள், கல்வி, கலாச்சாரம், உணவு வகைகள் என இந்தியாவின் எத்தனையோ முகங்கள் புகைப்படக்காரர்களுக்கு வரப்பிரசாதமாய் அதிரும் வண்ணங்களில் அம்சமாய்க் காட்சிப்படுத்தக் கிடைக்கின்றன.
ஆனால், புகைப்படக்கலைக்குத் தீனி போடும் மிகத் தொன்மையான இந்திய தேசப் பாரம்பரியச் சின்னங்களை அரசு சிறந்த முறையில் பராமரிப்பதில்லை என்பது வருத்தத்திற்குரியது. ஒரு சில உதாரணங்களாக மஹாபலிபுரத்தில் பல்லவர்களின் ஒரு சிற்ப மண்டபம் அற்ப சங்க்யைக்கு ஒதுங்குவதற்காகப் பயன்படுவதும், சென்னை அருங்காட்சியகத்தில் சோழற்கால கல்வெட்டுக்களின் மேலேயே காதலர்கள் இதயம் வரைந்து அம்பு விட்டு siva loves priya போன்ற காவியங்களை மானாவாரியாகப் பொறித்து வைத்திருந்ததையும் சொல்லலாம். இந்த இடத்தில் சதா நாற்காலிக்குப் போட்டியிடும் அரசாங்கத்தைச் சாடுவதா அல்லது அலட்சியப் போக்குள்ள மக்களை குறை சொல்வதா என்றே தெரியவில்லை. ஆனால் இரண்டுமே ஒன்றுக்கொன்று சம்பந்தமுள்ளதுதான் என்பதை மறுக்க முடியாது.
இணையம் என்பது பரந்துவிரிந்து ஒரு மிக முக்கியமான ஊடகமாக வளர்ந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில் இந்தியாவை அதன் நவீன விஷயங்களை ஒரு உன்னத அழகியலோடு புகைப்படங்களில் காண ஆசையாயிருக்கிறது. அதை நிறைவேற்றும் பொறுப்பை சுற்றுலாத்துறையும் காமிராக்காரர்களும் கையில் எடுத்துக்கொள்ளவேண்டும். அதற்கு கிழவர்களின் முகச்சுருக்கங்கள், தலைப்பாகை, மூக்கொழுகும் சிறுவர்கள் தாண்டி யோசிக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
-சித்ரன்
இலவசக்கொத்தனார் 7:58 பிப on ஜூன் 19, 2010 நிரந்தர பந்தம் |
சீக்கிரமே ஐபோனில் வரப் பிராப்திரஸ்து! 🙂
சத்யராஜ்குமார் 8:06 பிப on ஜூன் 19, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி 🙂
என். சொக்கன் 10:39 பிப on ஜூன் 19, 2010 நிரந்தர பந்தம் |
வாழ்த்துகள் 🙂
ஆண்ட்ராய்ட், ஐஃபோன் இரண்டுமே கைவசம் இல்லை, நோக்கியாமீது நீங்கள் கருணை காட்டும்போது பார்த்துக் கருத்துச் சொல்கிறேன் 🙂
– என். சொக்கன்,
பெங்களூரு.
சத்யராஜ்குமார் 7:46 முப on ஜூன் 20, 2010 நிரந்தர பந்தம் |
சொக்கன், வாழ்த்துக்கு நன்றி! 🙂
சித்ரன் 10:51 பிப on ஜூன் 19, 2010 நிரந்தர பந்தம் |
முதலில் ஆ கிடைக்கவேண்டும் பிறகுதான் இ.
நீங்கள் 2001-ல் எலெக்ட்ரிக் ட்ரெயினில் (மாம்பலம் டு கிண்டி) போகும்போது PDA -வில் தமிழ் நிறுவி சிறுகதை எழுதிக் கொண்டிருக்கும்போதே இது மாதிரி பின்னாளில் ஏதாவது நடக்கும் என்று ஊகித்தேன்.
வாழ்த்துக்கள் உரித்தாகுக.
சத்யராஜ்குமார் 7:48 முப on ஜூன் 20, 2010 நிரந்தர பந்தம் |
ஆண்ட்’ராய்ட் ப்ரொக்ராம்கள் இன்னும் கொஞ்ச நாளில் கூகிள் டி.வி வந்த பின் டிவி திரையில் கூட செயல்படும். அப்போது டி இருந்தால் கூட போதும்!
கௌதமன் 11:53 பிப on ஜூன் 19, 2010 நிரந்தர பந்தம் |
திரு என் சொக்கன் அவர்கள் கூறியுள்ளதை, நானும் வழிமொழிகிறேன்.
கே ஜி கௌதமன்
பெங்களுரு
சத்யராஜ்குமார் 7:54 முப on ஜூன் 20, 2010 நிரந்தர பந்தம் |
கௌதமன், நன்றி. ஆனால் நோக்கியா அப்ளிகேஷன்கள் குறித்து எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லை.
பத்மநாபன் 3:15 முப on ஜூன் 20, 2010 நிரந்தர பந்தம் |
பெருமைக்குரிய விஷயம் சத்யா ….எல்லா மொபைலிலும் டவுன் லோட் செய்யமுடியுமா என்பதயும் விளக்குங்கள். முடியும் என்றால் என்ன செய்யவேண்டும்….
சத்யராஜ்குமார் 7:56 முப on ஜூன் 20, 2010 நிரந்தர பந்தம் |
இல்லை, ஆன்ட்’ராய்ட் ப்ளாட்பார்ம் இயக்க வல்ல கருவிகளிலேதான் இந்த அப்ளிகேஷன் செயல்படும்.
பத்மா அர்விந்த் 6:35 முப on ஜூன் 20, 2010 நிரந்தர பந்தம் |
பாராட்டுக்கள். நிறைய பேருக்கு மிக உதவியாக பயணிக்கும் போது வசதியாக இருக்கும்.
சத்யராஜ்குமார் 7:59 முப on ஜூன் 20, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி பத்மா அர்விந்த்.
சீனா 7:53 முப on ஜூன் 20, 2010 நிரந்தர பந்தம் |
நல்ல முயற்சி சத்யராஜ்குமார் – வெற்றி பெற நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
சத்யராஜ்குமார் 8:06 முப on ஜூன் 20, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி சீனா! இது மிகச் சிறிய ஒரு முயற்சிதான்.
காஞ்சி ரகுராம் 9:34 முப on ஜூன் 20, 2010 நிரந்தர பந்தம் |
நேற்று கிண்டிக்கு ரயிலில் பயணித்தபோது, ஒரு கல்லூரி யுவதி iPad-ல் ஏதோ ஒரு eBook-ஐ படித்துக் கொண்டிருந்தார். வேகு சீக்கிரமே ஆப்பிள் நிறுவனம் தங்களுக்கு அனுமதி வழங்குவதாகுக. யுவன் யுவதிகளெல்லாம் iPhone-னும் iPad-டும் வாங்கி தங்கள் படைப்புகளை படிப்பதாகுக. தங்கள் பெயர் தமிழ்(பட்டி) தொட்டியெல்லாம் சென்றடைவதாகுக.
சத்யராஜ்குமார் 3:53 பிப on ஜூன் 20, 2010 நிரந்தர பந்தம் |
ரகுராம், இனி வருங்காலம் மொபைல் கருவிகள்தான், சந்தேகமில்லை. 🙂
dhandapanidevarajan 1:49 பிப on ஜூன் 20, 2010 நிரந்தர பந்தம் |
ஐயா,
தமிழினை iPhone, android இல் கொண்டுவந்தமைக்கு மிக்க நன்றி…
உங்களுடைய iPhone app பற்றி ஒரு சந்தேகம்.. அதில் எப்படி font rendering சரி வர செய்தீர்கள்… நானும் தமிழில் ஒரு iPhone app செய்ய முயற்சித்தேன்.. ஆனால் font சரியாக வரவில்லை…. எனக்கு இது சார்பாக உங்கள் உதவி கிடைக்குமா…
சத்யராஜ்குமார் 3:57 பிப on ஜூன் 20, 2010 நிரந்தர பந்தம் |
iPhone, Android இரண்டிலுமே தமிழ் ரெண்டரிங் சப்போர்ட் இதுகாறும் இல்லை. இன்னும் ஐபோன் அப்ளிகேஷன் செய்து முடிக்கவில்லை. ஆண்ட்’ராய்டில் custom font போட்டுக் கொள்ளவியலும். அப்படித்தான் eNool-ல் தமிழ் வருகிறது.
dhandapanidevarajan 11:54 முப on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம்
நன்றி!! ஐபோனிலும் தமிழ் எழுத்துரு சீக்கிரம் வர எதிர்பார்ப்போம். நானும் ஐபோனிற்கு அப்ளிகேஷன் எழுதுவதால் தமிழ் மொழிக்காக ஏதாவது செய்ய ஆவலுடன் இருக்கிறென்… அதற்கு தங்களுடன் இணைந்து செய்ய வாய்ப்பிருந்தால் தெரியபடுத்தவும்.. !!!
ந.ர.செ. ராஜ்குமார் 3:10 பிப on நவம்பர் 12, 2010 நிரந்தர பந்தம்
//ஆண்ட்’ராய்டில் custom font போட்டு…
யுனிகோட் எழுத்துருவையே போட்டுக் கொள்ள இயலுமா? அல்லது TAM/TAB போல பயன்படுத்த வேண்டுமா? ஆண்ட்ராய்ட் இ-நூல் யுனிகோடா?
சத்யராஜ்குமார் 3:25 பிப on நவம்பர் 12, 2010 நிரந்தர பந்தம்
யுனிகோட் எழுத்துருவை போட்டுக் கொள்ள இயலும். அப்படி போட்டுக் கொண்டாலும் தமிழ் ரெண்டரிங் சப்போர்ட் இல்லாததால் உடைந்த தமிழையே இப்போதைக்கு படிக்க இயலும். ஆகவே இ நூலில் யுனிகோட் எழுத்துரு பயன்படுத்தவில்லை. ஆவலுடன் எதிர்பார்க்கும் அடுத்து வரவுள்ள ‘ஜிஞ்சர்ப்ரெட்’டில் தமிழ் யுனிகோட் சப்போர்ட் கிடைத்தால் பரவாயில்லை.
சத்யராஜ்குமார் 5:06 பிப on ஜூன் 23, 2010 நிரந்தர பந்தம் |
இணைந்து செய்யுமளவு அர்ப்பணிப்பும், நேரமும் இருக்காது. எனினும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். BTW, ஐபோனில் தமிழ் எழுத்துரு வந்து விட்டது!
dhandapanidevarajan 11:51 முப on ஜூன் 29, 2010 நிரந்தர பந்தம்
மிக்க நல்ல செய்தி…. !!!!! ஐ போனில் தமிழ் எழுத்துரு 4.0 வந்துள்ளதா?? அதை பற்றி மேலும் தகவல்கள் எங்கு கிடைக்கும்??
dhandapanidevarajan 11:58 முப on ஜூன் 29, 2010 நிரந்தர பந்தம்
ஒருங்குறி (unicode) rendering தமிழில் ஒழுங்காக வருமா?
நன்றி
சத்யராஜ்குமார் 12:08 பிப on ஜூன் 29, 2010 நிரந்தர பந்தம்
வரும். பார்க்க TrueNext.com
ஆசிப் மீரான் 1:37 முப on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம் |
விரைவிலேயே ஐபோனிலும் வர வாழ்த்துகள்!
சத்யராஜ்குமார் 5:26 முப on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம் |
ஆசிப் மீரான், வாழ்த்துக்கு நன்றி.
ஜி எஸ் ஆர் 10:02 முப on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம் |
நிச்சியமாக இனி வருங்காலத்தில் அலைபேசியில் இயங்குதளம் மற்றும் ஒரு ரிமோட் சிஸ்டமாக மாறியிருக்கும் அதனால் தானே இப்போதே பெரிய நிறுவனங்கள் தங்கள் கவணத்தை அலைபேசி பக்கம் திருப்பியிருக்கிறது உதராணத்துக்கு மைக்ரோசாப்ட் மற்றும் கூகுளை சொல்லலாம் மேலும் பணப்பரிமாற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்த்னை இந்த மொபைல் போன்கள் கொண்டுவரும் அநேகமாக 2030க்கு மேல் பணம் நம் கண்களில் பார்ப்பது கடிணம் தான் அந்த இடத்தையும் இந்த மொபைல் போன்கள் ஆக்ரமித்துகொள்ளும் என்பதில் சந்தேகமில்லை
நான் தங்களின் பதிவுக்கு சம்பந்தமேயில்லாமால் எழுதுகிறேன் மன்னிக்கவும் தங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்
சத்யராஜ்குமார் 6:54 பிப on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம் |
வாழ்த்துக்கு நன்றி ஜி.எஸ்.ஆர். மொபைல் தொழில்னுட்பம் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது சரியே. பதிவுக்கு சம்பந்தமில்லாமலில்லை!
சண்முகம் 10:24 முப on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம் |
நல்ல முயற்சி. உங்கள் பணி தொடரட்டும். ஆண்ட்ராய்ட் யுனிகோட் கூட support செய்ய வில்லை. எனது புதிய கைபேசியில் தமிழ் பார்க்க ஏங்கிக் கொண்டிருந்த எனக்கு இது நல்ல செய்தி. உங்க அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.
சத்யராஜ்குமார் 6:55 பிப on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி சண்முகம்!
yirus.exe 11:28 முப on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம் |
nandri…
முரளி 11:55 முப on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம் |
நன்றாக இருக்கிறது. எப்படி மற்ற மாத கதைகளை படிப்பது?
சத்யராஜ்குமார் 6:56 பிப on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம் |
பதிவில் குறிப்பிட்டபடி அடுத்த அப்டேட்டில் படைப்புகளை மாற்ற உத்தேசம்.
ila 3:09 பிப on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம் |
சேவையைத் தொடருங்கள். இன்னும் சில காலத்தில் அலைபேசிதான் வாழ்க்கை என்றாகும்போது, பணம் செய்து கொள்ளுங்கள்(being practical)
சத்யராஜ்குமார் 7:02 பிப on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி இளா! இதுவும் சரி வலைப்பதிவு, இணையதளங்களும் சரி… ஒழிந்த நேரத்தில் டென்னிஸ் ஆடுவது போலவோ, செஸ் விளையாடுவது போலவோ மன நிறைவுக்காக செய்வது. பண நிறைவுக்குதான் எட்டு மணி நேரம் அலுவலகத்தில் உழைக்கிறோமே! தவிர நிறுவன சாமர்த்தியம் எனக்குப் போதாது என்றும் நினைக்கிறேன். 🙂
Sentil 10:50 பிப on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம் |
அருமையன முயற்சி சத்யராஜ்குமார் – வெற்றி பெற வாழ்த்துகள்.
சத்யராஜ்குமார் 5:02 பிப on ஜூன் 23, 2010 நிரந்தர பந்தம் |
Sentil, நன்றி!
ஜெகதீஸ்வரன் 10:30 பிப on ஜூன் 22, 2010 நிரந்தர பந்தம் |
வெற்றி மேல் வெற்றி கிட்ட ஈசன் அருள் செய்யட்டும்!
– ஜெகதீஸ்வரன்
http://sagotharan.wordpress.com
சத்யராஜ்குமார் 5:02 பிப on ஜூன் 23, 2010 நிரந்தர பந்தம் |
ஜெகதீஸ்வரன், நன்றி!
Kumaran 8:18 பிப on ஜூன் 23, 2010 நிரந்தர பந்தம்
Thirukkural Mobile Books distributed for Participants at Ulaga Thirukkural Peravai’s
Conference
By Ganesh Ram KR, MobileVeda
Dated: Jun 20, 2009
Vellore,
யெஸ்.பாலபாரதி 2:05 முப on ஜூன் 24, 2010 நிரந்தர பந்தம் |
படிக்கவே சந்தோசமாக இருக்கு. வாழ்த்துகள்.. 🙂
சத்யராஜ்குமார் 9:13 பிப on ஜூன் 24, 2010 நிரந்தர பந்தம் |
வாழ்த்துக்கு நன்றி பாலபாரதி.
ராசா 6:32 முப on ஜூன் 28, 2010 நிரந்தர பந்தம் |
வாழ்த்துகள்
சத்யராஜ்குமார் 6:40 முப on ஜூன் 28, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி ராசா! எப்படி இருக்கிங்க?
ila 2:28 பிப on ஜூன் 28, 2010 நிரந்தர பந்தம் |
போன வாரம் சிறந்தப் பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.
சத்யராஜ்குமார் 5:53 பிப on ஜூன் 28, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி இளா. நீங்கள் தந்திருக்கும் லின்க் வேலை செய்யவில்லையே?
இராமசாமி கண்ணண் 3:01 பிப on ஜூன் 28, 2010 நிரந்தர பந்தம் |
நல்ல முயற்சி சார். வாழ்த்துகள்.
சத்யராஜ்குமார் 5:54 பிப on ஜூன் 28, 2010 நிரந்தர பந்தம் |
இராமசாமி கண்ணண், மிக்க நன்றி.
madurai saravanan 9:22 பிப on ஜூன் 29, 2010 நிரந்தர பந்தம் |
pakirvukku nanri.
சத்யராஜ்குமார் 6:53 முப on ஜூன் 30, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி சரவணன்.
பாலராஜன்கீதா 5:45 முப on ஜூலை 22, 2010 நிரந்தர பந்தம் |
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
சத்யராஜ்குமார் 5:51 முப on ஜூலை 22, 2010 நிரந்தர பந்தம் |
வாழ்த்துக்கு நன்றி பாலராஜன்கீதா.
kumaran 7:57 முப on ஜூலை 22, 2010 நிரந்தர பந்தம் |
vazthukkal tamilukku ungal sevai thodarattum
சத்யராஜ்குமார் 6:01 முப on ஒக்ரோபர் 26, 2010 நிரந்தர பந்தம் |
nanRi kumaran.
Samathur saravanan 5:22 முப on ஓகஸ்ட் 30, 2010 நிரந்தர பந்தம் |
Nandri, valthugal
சத்யராஜ்குமார் 6:01 முப on ஒக்ரோபர் 26, 2010 நிரந்தர பந்தம் |
nanRi saravanan.
sekar 12:10 முப on ஒக்ரோபர் 25, 2010 நிரந்தர பந்தம் |
Nokia platform la eppo launch panringa?
சத்யராஜ்குமார் 6:05 முப on ஒக்ரோபர் 26, 2010 நிரந்தர பந்தம் |
நோக்கியா பிளாட்பார்ம் எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லை.
அருட்பெருங்கோ 9:34 பிப on ஒக்ரோபர் 30, 2010 நிரந்தர பந்தம் |
முயற்சிக்கு வாழ்த்துகள். இன்றுதான் எனது android செல்பேசியில் நிறுவினேன். பழைய இதழ்களை படிக்க இயலுமா?
சத்யராஜ்குமார் 5:35 முப on ஒக்ரோபர் 31, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி. அந்த வசதி இன்னும் செய்யப்படவில்லை.
ramji_yahoo 11:23 முப on நவம்பர் 14, 2010 நிரந்தர பந்தம் |
பல மொபைல் போன்களில் (இந்தியாவில்- குறிப்பாக எல் ஜி, சாம்சங், நோக்கியா பல மாடல்களில்) தமிழ் எழுத்துருவே படிக்கும் வசதி இப்போது இல்லை. தமிழ் வலைப்பதிவுகளை கூட படிக்க முடிவதில்லை. அதற்கும் ஒரு வழி செய்யுங்கள் உடனே
சத்யராஜ்குமார் 8:53 பிப on நவம்பர் 14, 2010 நிரந்தர பந்தம் |
ராம்ஜி, அடிப்படையில் நான் தமிழ் கம்ப்யூட்டிங் அல்லது மொபைல் துறை வல்லுனர் இல்லை. என்னிடம் இருந்த ஆண்ட்’ராய்ட் மற்றும் ஐபோன்களில் சிறு முயற்சி செய்து பார்த்தேன் அவ்வளவே. மற்றபடி இத்துறையில் தேர்ந்த பலரும் இந்த பிளாட்பார்மில் தமிழுக்காக பெரும் முயற்சிகள் செய்து வருகிறார்கள். அவர்கள் வாயிலாக உங்கள் விருப்பம் நிறைவேறக் கூடும்.
ராஜரத்தினம் 2:11 பிப on நவம்பர் 22, 2010 நிரந்தர பந்தம் |
நண்பர் சத்யாவிற்கு.. மிக நல்ல முயற்சி. மனநி்றைவிற்காக செய்யும் போது உந்துதல் குறையும் போது அதை நாம் தொடர்வதில்லை. அது போலாகாமல் ஈநூல் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். நான் இதை எனது ஐ-டச்சில் படிக்கிறேன்.
ஜெயமோகனின் பதிவு என நீங்கள் சொல்லியிருப்பது ஐ ட்யூன்ஸில் வரவில்லை. கடைசி அப்டேடாக ஜூலை 2010 என்றே காண்பிக்கிறது. சமீபத்திய பதிவுகளை எப்படி பதிவிறக்கம் செய்வது?
மீண்டும் மிக முக்கிய முயற்சியான ஈநூல் பற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நன்றி.
சத்யராஜ்குமார் 6:39 பிப on நவம்பர் 22, 2010 நிரந்தர பந்தம் |
ராஜரத்தினம், மிக்க நன்றி. ஐபோன் / ஐ-டச்சைப் பொறுத்தவரை, நீங்கள் இண்ட்டர்நெட்டில் அதை இணைத்திருப்பின் லேட்டஸ்ட் படைப்பு தானாகவே உங்கள் கருவிக்கு push செய்யப்படும். புதிய படைப்பு வரும்போது பேட்ஜ் ஐகான் மூலம் தெரிவிக்கப்படும் (Badge Notification). அப்ளிகேஷனை ஐ-ட்யூன்சிலிருந்து ஒரு முறை நிறுவினால் போதும்.
shalini.v 1:10 முப on பிப்ரவரி 10, 2011 நிரந்தர பந்தம் |
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
சத்யராஜ்குமார் 8:06 முப on பிப்ரவரி 21, 2011 நிரந்தர பந்தம் |
நன்றி!