Updates from மே, 2009 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • சத்யராஜ்குமார் 8:34 pm on May 14, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  ஆதிமூலம் 

  பூச்சி புழுக்கள் தோன்றி, பிறகு நானும் நீங்களுமாக ஆனதற்குக் காரணம் DNA இல்லையாம். DNA-வின் ஒன்று விட்ட அண்ணன் RNA என்று ஒரு ஆங்கிலேய ரசாயனக்காரர் கண்டுபிடித்துச் சொல்லி விட்டார்.

  குளம் குட்டை ஓரமாய் ஒரு வெம்மையான மாலைப்பொழுதில் சூரியனின் புற ஊதா கதிர்களோடு நிகழ்ந்த ரசாயன மாற்றத்தில் முதல் முதலாய் ஒரு RNA எப்படி தோன்றியிருக்கும் என சோதனைக் குடுவையில் செய்து காட்டியிருக்கிறார்.

  DNA நிரவகிக்கும் பரம்பரை தகவல்களை ஆதி காலத்தில் RNAதான் கையாண்டிரு்க்கும் என்பது இவர் வாதம்.

  DNA, RNA இதெல்லாம் என்னண்ணே என்று கேட்டால் செல்களை ஆக்கவும் அழிக்கவுமான ஜெனட்டிக் சங்கதிகளை DNA சேமித்து வைத்திருக்கிறதாம். தபால்காரர் கணக்காக அந்தத் தகவல்களை எடுத்துக் கொண்டு போய் செல்களிடம் சேர்ப்பதோடன்றி சிக்கலான ஜெனட்டிக் சங்கேத தகவல்களை செல்களுக்குப் புரியும்படி மொழிபெயர்த்துச் சொல்லும் வேலையையும் RNA பார்த்துக் கொள்கிறதாம்.

  4 பில்லியன் வருடங்களுக்கு முன்பு உயிர்கள் தோன்றிய போது பரம்பரை தகவல்களை சேமிப்பது, பரிமாறுவது என இரண்டு வேலையையும் RNA பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் வேலைப்பளு தாங்காமல் DNA-விடம் பாதி வேலையைப் பிரித்துக் கொடுத்து விட்டதால் இத்தனை நாளாய் விஞ்ஞானிகள் டிராக் மாறி DNA-தான் உயிர்கள் தோன்றவும், பரிமாண விருத்திக்கும் காரணமாயிருக்கும் என்று தப்பாட்டம் ஆடி வந்திருக்கிறார்கள் என்கிறார் John D. Sutherland என்னும் இந்த ராசாயனவியலாளர்.

  புரட்சிகரமான இந்த ஆய்வு முடிவை வெளியிட்டவர் எதற்கும் இருக்கட்டுமென, “இன்னும் அவிழ்க்கப்படாத முடிச்சுகள் நிறைய இருக்கிறது. நான் சொன்ன அத்தனையுமே தப்பாகக் கூட இருக்கலாம்.” என்று ஒரு குண்டையும் தூக்கிப் போட்டு விட்டார். இதுதான் விஞ்ஞானிகள் டச்சா?

   
 • சத்யராஜ்குமார் 6:19 am on July 16, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: health, shenandoah,   

  மலை 

  இந்த கோடையில் இரண்டு முறை ட்ரெக்கிங் போய் வந்தாயிற்று. இறங்கும்போது குதூகலமாயிருக்கிறது. திரும்ப ஏறி வரும்போதுதான் தாவு தீர்கிறது. இருதயம் படு வேகமாய் எகிற, நிமிஷத்தில் உடம்பெல்லாம் வேர்வை மழை. ஒரு முறை போய் வந்தால் ஒரு வாரத்துக்கு தைரியமாய் சிக்கனும், டர்க்கியும், முட்டையின் மஞ்சள் கருவையும் எந்த ஒரு குற்ற உணர்ச்சியுமில்லாமல் சாப்பிடலாம்.

  இரண்டு முறையும் காமிரா கொண்டு போக மறந்து விட்டோம். இணையத்தில் தொடுப்புகள் இருக்கின்றன. Shenandoah Valley மற்றும் Fountain Head Park (கவனம். இது யூ ட்யூப் சுட்டி).

  வீட்டில் இதைப் பற்றி சிலாகிக்க முயன்றபோது – ” இதென்ன பிரமாதம் ? பழனி பாதயாத்திரையை விடவா ? ” என்று வாயடைக்கப்பட்டது.

   
 • சத்யராஜ்குமார் 8:44 am on October 18, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  பறவைகள் 

  அகில் நூலகத்திலிருந்து The Complete Idiot’s Guide to Birdwatching என்ற புத்தகத்தை எதேச்சையாகத்தான் எடுத்து வந்தான். அதைப் பார்த்ததும் சட்டென்று நண்பன் கவுதம் நினைவுக்கு வர போன் போட்டேன். கவுதம் இந்தியாவில் National Bird Watcher’s Association-ல் நெடுங்கால உறுப்பினர்.

  சின்ன வயதில் வால்பாறை அட்டகட்டி காடுகளில் திரிந்து பறவைகளைப் படிக்க முயன்ற சமயம் பெற்றோரிடம் எனக்குக் கிடைக்காத சுதந்திரம் அகிலுக்குக் கிடைத்திருப்பது சந்தோஷம் என்றார். இமெயிலில் இன்பாக்ஸ் நிறைய தகவல்கள் செயல்முறைகளை அனுப்பி வைத்தார்.

  கவனித்தால்தான் தெரிகிறது பறவைகளில் இத்தனை வகைகளா ? ஆந்தையால் 270 டிகிரிக்கு தலையைச் சுழற்ற முடியுமா ! மரங்கொத்தி மரம் கொத்தி போல தோற்றமளிக்கும் ‘உட்காக்’ 360 டிகிரியையும் தலையை ஒரு மில்லி மீட்டர் கூட அசைக்காமலே பார்த்து விட முடியுமா ! தினமும் நம் வீட்டுக் கொல்லைப்புறத்துக்கு இத்தனை வகை பறவைகள் வந்து போகின்றனவா ?

  இன்னும் கொஞ்ச நாளில் அமெரிக்கன் கோல்ட் பின்ச்சும், வார்ப்ளரும் ஒரு ராமசாமியைப் போலவோ, பாக்கியலட்சுமியைப் போலவோ எங்கே பார்த்தாலும் ஹாய் சொல்லுமளவுக்குப் பழக்கமாகி விடுவார்கள் என்று தோன்றுகிறது.

   
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி