Updates from மார்ச், 2016 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

  • சத்யராஜ்குமார் 8:53 am on March 5, 2016 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    அழுத்தம் 

    ஏழாவது படிக்கும் லதிகாவை பிரின்சிபால் அழைப்பதாக வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போது செய்தி வந்தது.

    அமெரிக்க பள்ளிகளில் ஹெட்மாஸ்டர் எல்லாம் இல்லை. பிரின்சிபால்தான்.

    திடீரென்று ஆஃபிஸ் ரூமுக்கு அழைக்கப்பட்டால் பெரும்பாலும்ஏதேனும் பிரச்சனையாகவே இருக்க முடியும்.

    கதவருகே நின்று, “ஹலோ மிஸ்டர் கென், மே ஐ கமின்?” என்கிறாள் லதிகா. முதல்வரானாலும் சரி, ஜனாதிபதியானாலும் சரி சின்னக் குழந்தை கூட பேர் சொல்லிக் கூப்பிடுவதே வழக்கம்.

    “உள்ளே வா லதிகா. சிட் டவுன்.”

    counsஅவர் முகத்தில் தெரிந்த கனிவைப் பார்த்து லதிகாவுக்குள் கொஞ்சம் நிம்மதி பிறந்தது. ஆனால் அவருக்கு பக்கவாட்டில் ஸ்கூல் கைடன்ஸ் கவுன்சிலர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து லேசாய்த் துணுக்குறவே செய்தாள் லதிகா.

    “ஹவ் ஆர் யூ டூயிங்?” என்றார் பிரின்சிபால்.

    “ஐயாம் குட். தாங்க்ஸ் மிஸ்டர் கென்.”

    கைடன்ஸ் கவுன்சிலர் பெண்மணி அவளை உற்றுப் பார்த்து, “ஈஸ் எவெரிதிங் ஆல்ரைட்?” என்று கேட்டார்.

    “எஸ். ஆல்ரைட் மிஸஸ். அமெண்டா.” – லதிகா குழப்பத்துடனே பதில் அளித்தாள்.

    “ஹவ் ஆர் யூ ஃபீலிங்? ஆர் யூ நார்மல்?”

    “எஸ் ஐயாம் நார்மல்.”

    “நீ எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. நாங்கள் இருக்கிறோம். எதுவானாலும் நீ எங்களிடம் வந்து கலந்து பேசலாம்.”

    லதிகாவின் குழப்பம் உச்சத்துக்குப் போனது.

    “ஷ்யூர். ஐ வில் டூ.”

    “உன் பேரன்ட்ஸ் ரொம்ப மிரட்டுகிறார்களா?”

    “வாட்?”

    “டி.ஜே ஹைஸ்கூல் நல்ல ஸ்கூல்தான். ஆனால் அதுவே வாழ்க்கையின் முதலும், முடிவும் இல்லை.” என்றார் கவுன்சிலர்.

    வாஷிங்டன் டி.சி பகுதியில் டி.ஜே ஹை ஸ்கூல் ரொம்ப பிரபலம். ஸ்கூல் பிராஜெக்ட்டாக ஸாட்டிலைட் செய்து விடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  அமெரிக்காவில் நீங்கள் வசிக்கும் பகுதியைப் பொறுத்து உங்கள் குழந்தைகளின் பள்ளிகள் தீர்மானிக்கப்பட்டாலும், இந்தச் சிறப்புப் பள்ளிக்கு மட்டும் வசிக்குமிடம் முக்கியமில்லை; நுழைவுத் தேர்வு வைத்தே மாணவர் தேர்வு செய்வார்கள். அதற்குக் கடும் போட்டி இருக்கும். போட்டி என்றால் இந்திய, சீன பெற்றோர்கள் செய்யும் அலப்பரைகள் தாங்க முடியாது. இயல்பாகவே திறமை மிகுதியான குழந்தைகளுக்கு அதிகபட்ச சவால்கள் தர வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளிக்கு தீவிர கோச்சிங், நிறைய மன அழுத்தம் கொடுத்து பூனைகளுக்கு புலி போல சூடு போட்டு அனுப்பும் வேலைகள் நிறைய நடந்து வருகிறது. இதனால் பாதிப்புக்குள்ளாவது குழந்தைகளே.

    கவுன்சிலர் தொடர்ந்து பேசினார். “டி.ஜே ஹைஸ்கூல் நல்ல ஸ்கூல்தான். ஆனால் அதுவே வாழ்க்கையின் முதலும், முடிவும் இல்லை. அதற்காக தற்கொலை என்ற சிந்தனை எல்லாம் தவறு. அதற்காக என்றில்லை, எதற்காகவும். உன்னுடைய பெற்றோரைக் கூப்பிட்டு நாங்கள் பேசுகிறோம். நீ எதற்கும் பயப்படத் தேவையில்லை. உனக்கு எது முடியுமோ, எது நன்றாக வருமோ அதை செய்தால் போதும். வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம். ”

    லதிகா ரொம்பவே திடுக்கிட்டுப் போனாள். “மிஸ்டர் கென் அண்ட் மிஸஸ் அமெண்டா, என் பெற்றோர் என்னை எதுவும் சொல்வதில்லை. தற்கொலை பற்றி எல்லாம் நான் யோசிக்கவில்லை.”

    இப்போது அவர்களும் குழம்பிப் போனார்கள். யாருக்கோ ஃபோன் போட்டார்கள். லதிகாவைத் திரும்பிப் போகச் சொல்லி விட்டார்கள். உண்மையில் இன்னொரு பெற்றோர் அந்த ஹைஸ்கூலில் சேர தங்கள் பெண்ணுக்கு உச்சபட்ச மன அழுத்தம் தந்ததில் அந்தப் பெண் தற்கொலை செய்யலாம் போல இருப்பதாக நண்பனிடம் சொல்ல, நண்பன் அவன் அம்மாவிடம் சொல்லி விட்டான். அந்த அம்மாவோ PTA (Parents Teacher Association) தலைவி. உடனே பள்ளிக்குத் தகவல் தந்து விட்டார். அந்தப் பெண்ணின் பெயர் திலகா. திலகா – லதிகா இந்தியப் பெயர் குழப்பத்தில் திலகாவுக்கு பதிலாக லதிகாவைக் கூப்பிட்டு அறிவுரை வழங்க ஆரம்பித்து விட்டார்கள்.

    இப்போது மேற்படி உரையாடலை மறுபடியும் படித்து சிரியுங்கள். அமெரிக்கா வந்த பிறகும் பிள்ளைகளுக்கு தேவையற்ற மன அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கும் சில இந்தியப் பெற்றோர்களை நினைத்து வருந்தவும் செய்யுங்கள்.

    – சத்யராஜ்குமார்

     
  • சித்ரன் ரகுநாத் 7:20 am on December 4, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
    Tags: காதல் கதை, , பாடம், ஷேக்ஸ்பியர்   

    பன்னிரண்டாவது இரவு – ஒரு காதல் கதை 

    ‘ஒலிவியாவை உண்மையாகவும் ஆழமாகவும் நீ காதலிப்பது போலவே உன்னைக் காதலிக்கும் இந்த இளம் பெண்ணுக்கு என்ன நிலைமை ஏற்படும்? உன் காதலை அவள் பெற முடியாதென்று நீ அவளிடம் சொல்லியிருந்தால் அந்த பதிலால் அவள் திருப்தியடைந்திருக்க மாட்டாளல்லவா?’

    ‘ஒரு ஆண் ஒரு பெண்ணைக் காதலிக்கிற அளவு ஒரு பெண்ணால் ஆணைக் காதலிக்க முடியாது. பெண்களின் இதயம் இம்மாதிரி ஆழமான காதலையெல்லாம் தாங்காது’

    ‘அவளிடம் என் காதல் கதையையும் அதனால் நானடைந்த கஷ்டத்தையும் அவள் இதயம் உருகும்வரை சொல்.”

    ‘என் எஜமானன் போலவே நானும் உன்னைக் காதலித்தால், நீ அதை ஏற்றுக்கொள்ளும்வரை விடமாட்டேன். காற்று முழுவதையும் உன் பெயரால் நிரப்புவேன். மலைகள் முழுவதும் உன் பெயரை எதிரொலிக்க வைப்பேன்.’

    தற்செயலாக பையன் படித்துக்கொண்டிருந்த பாடபுத்தகத்தை வாங்கிப் பார்த்தபோது மேற்கண்ட வரிகள் கண்ணில் பட்டன. அது ஒரு ஆங்கில நான் – டீடெய்ல் புத்தகம். ஷேக்ஸ்பியரின் (சிறு)கதைகள். ஜெயராஜ் படம் வரைந்திருந்தார். “ Twelfth Night”  என்ற ஒரு கதையில்தான் இதெல்லாம் வருகிறது. கதையில் சரமாரியாக யார் யாரோ யாரையெல்லாமோ காதலித்து உருகிக்கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு முக்கோண அல்லது நாற்கோண காதல் கதையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். முழுதாகப் படிக்கவில்லை. குறிப்பிட்ட வரிகளை மட்டும் கொஞ்சம் மொன்னையாக மொழிபெயர்த்திருக்கிறேன்.

    பாடத்துக்குக் கீழே சில கேள்விகள் கொடுத்திருந்தார்கள். அந்த கேள்விக்கான பதில்களை படித்து பையனாகப்பட்டவன் பரீட்சையில் எழுத வேண்டும். அவற்றில் சில:

    வயோலா ஆர்ஸினோவின் மேல எப்படி காதல் வயப்பட்டாள்? அதை எவ்வாறு அவனிடம் அதை வெளிப்படுத்தினாள்?

    ஒலிவியா சிசாரியோவிடம் எப்படித் தன் காதலைச் சொன்னாள்?

    ஒரு ஆணாகவும் ஒரு காதலனாகவும் இருந்த செபாஸ்டியனைப் பற்றி என்ன நினைக்கிறாய்?

    பிறகு என் மனைவி இந்தக் கேள்விகளையெல்லாம் மகனிடம் கேட்க அவன் படித்தவற்றை ராகம் போட்டு ஒப்பித்துக் கொண்டிருந்தான். வீடு முழுக்க காதல் வழிந்துகொண்டிருந்தது.

    நான் எதுவும் கேட்க முற்படுவதற்குள் மனைவிக்கு ஒரு ஃபோன் வந்தது. மகனின் வகுப்பில் படிக்கும் இன்னொரு பையனின் அம்மா. கொஞ்சம் ஒட்டுக்கேட்டதில் இந்த ஒலிவியா- வயோலா- சிசாரியோவின் காதல் விவகாரத்தைப் பற்றித்தான் அக்கப்போர் பேசிக்கொண்டிருந்தார்கள் என்று தெரிந்தது. மனைவி ஃபோனை வைத்த பிறகு ரகசியமாய் என்ன விஷயம் என்று கேட்டபோது ஐந்தாம் வகுப்புப் படிக்கும் சின்னப் பசங்களுக்கு இந்த மாதிரி காதல் கதையெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்லையா என்று அந்தப் பையனின் அம்மா அங்கலாய்த்தார்களாம். பள்ளி வளாகத்தில் ஆர்.ஐஸ்வர்யா-வின் அம்மா கூட இதையேதான் சொல்லி ஒருபாட்டம் புலம்பியிருக்கிறார். “அதுவும் ஸ்ட்ரெய்ட்டான ஒரு நல்ல லவ் ஸ்டோரிய சொல்லிக்குடுத்தாக்கூட பரவாயில்லை. இதென்னமோ கொளப்பமான காதல் கதையால்ல இருக்கு”. என்றாராம்.

    “எப்படி டீச்சர் இதையெல்லாம் பசங்களுக்கு சொல்லித்தர்ராங்க? இதெல்லாம் இப்பவே தெரிஞ்சு பசங்க கெட்டுப்போயிர மாட்டாங்களா?” மனைவியின் கேள்வி வந்து விழுந்தது.

    “டிவி. சொல்லித்தராததையா டீச்சர் சொல்லிக்குடுக்கப் போறாங்க..” என்றேன்.

     
    • REKHA RAGHAVAN 7:40 முப on திசெம்பர் 4, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      //“டிவி. சொல்லித்தராததையா டீச்சர் சொல்லிக்குடுக்கப் போறாங்க..”//

      அதானே! எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?

    • என். சொக்கன் 1:01 முப on திசெம்பர் 6, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்ல கட்டுரை சித்ரன் – ஷேக்ஸ்பியரின் கதைக்கருக்கள் சிக்கலானவைதான். ஆனால் கொஞ்சம் முயன்றால் எல்லோருக்கும் புரியும்படி சொல்லலாம், நம் விருப்பம்போல் நீட்டிச் சுருக்கலாம், குழந்தைக் கதைகளாகக்கூட மாற்றலாம் – என்னுடைய ஷேக்ஸ்பியர் வாழ்க்கை வரலாறுப் புத்தகத்தின் பின்பகுதியில் இதைக் கொஞ்சம் முயற்சி செய்தேன். படித்தவர்களுக்கு எவ்வளவு தூரம் புரிந்தது என்று தெரியவில்லை 🙂

      – என். சொக்கன்,
      பெங்களூரு.

    • காஞ்சி ரகுராம் 1:36 முப on திசெம்பர் 6, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      அங்கலாய்க்கும் அம்மாக்களுக்கு: இந்தப் பாடங்கள் சற்று ஓவரென்றாலும், பத்தோடு பதினொன்றாய்க் கரைந்துவிடும் (எதைப் படித்தாலும் பரிட்சையுடன் மறந்து விடுகிறார்களே!). ஆனால் நீங்கள் பார்க்கும் டிவி சீரியல்கள்தான் விஷ விருட்சத்தை பிஞ்சு மனங்களில் விதைத்துக் கொண்டிருக்கின்றன.

    • செந்தில் 10:43 பிப on திசெம்பர் 7, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      அருமை சித்ரன்ஜி.. பசங்க பலதும் படித்து பாண்டித்தியம் பெற இது உதவும். 🙂

    • சித்ரன் 12:34 பிப on திசெம்பர் 8, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நன்றி! @ரேகா ராகவன், என்.சொக்கன், காஞ்சி ரகுராம், செந்தில்.

  • சத்யராஜ்குமார் 9:04 pm on September 5, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
    Tags: கணிதம், Math   

    கர்ணம் 

    நண்பர் பாஸ்கரனை நேற்று சந்தித்தேன். பொறியியல் பேராசிரியரான அவருக்கு கணிதத்தில் அலாதி ஈடுபாடு. அகிலிடம் அவனது 7th கிரேடு கணிதம் பற்றி விசாரித்தவர், அவன் பித்தாகரஸ் தியரம் பற்றி சொன்ன போது அதை நிறுவிக்காட்டுமாறு கேட்டார். செங்கோண முக்கோணத்தின் பக்கங்கள் a மற்றும் b எனில், அதன் கர்ணம் c -ஐ கண்டறிய உதவும் கீழ்க்கண்ட சமன்பாடு பித்தாகரஸ் என்னும் கணித மேதை நிறுவியது.

    a2 + b2 = c2


    நான் படிக்கிற காலத்தில் இதை அப்படியே உருப்போடச் சொல்லி விட்டார்கள். ஆனால் அகிலுக்கு அப்படி இல்லை. அவனால் கீழே உள்ள படம் போல வரைந்து உடனே அதை நிறுவிக்காட்ட முடிந்தது.


    தொடர்ந்து பாஸ்கரன் செங்கோண முக்கோணத்தின் கர்ணம் என்னும் hypotenuse-ஐ கண்டறிய பல வழிகள் இருப்பதாகவும், அவற்றில் ஒன்று நம் பழந்தமிழர் கண்டு பிடித்தது என்றும் சொன்னார். சில ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய இந்தத் தமிழ்ப்பாடலில் அந்த வழி முறை சொல்லப்பட்டுள்ளது.

    ஓடிய நீளந்தன்னை ஓரெட்டு கூறதாக்கி கூறிலே ஒன்று தள்ளி
    குன்றத்தில் பாதி சேர்த்தால் வருவது கர்ணம் தானே.

    ( a – (a/8) ) + (b/2) = c

    என்பதே அந்தப் பாடல் சொல்லும் சமன்பாடு. நீளமான பக்கத்தை எட்டாய்ப் பிரித்து, அதில் ஏழு கூறுகள் நீளத்தை எடுத்துக் கொண்டு, அதனுடன் உயரத்தில் பாதியைக் கூட்டினால் கிடைப்பது கர்ணத்தின் நீளம். 4-ஐ எட்டாகப் பிரித்தால் 0.5. அதைக் கழிக்க 4 – 0.5 = 3.5. அதனுடன் உயரத்தில் பாதியை (3/2 = 1.5) கூட்டினால் 3.5 + 1.5 = 5 கிடைப்பது கர்ணம்!

    இது போன்ற கணிதப் பாடல்களின் தொகுப்பு எங்கேனும் உள்ளதா? யாருக்கேனும் விபரம் தெரிந்தால் தெரிவிக்கவும்.

     
    • காஞ்சி ரகுராம் 10:45 பிப on செப்ரெம்பர் 5, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      ஆஹா, படிச்சாலே மனசு குட்டிக் கர்ணம் அடிக்குது. நண்பர் பாஸ்கரனிடத்திலும் பாடல்களின் தொகுப்பு இல்லையா?! கணிதப் பாடல் புதையலை நம்மில் யாராவது தேட முயற்சிப்போம்.

    • வாணி 6:18 முப on செப்ரெம்பர் 6, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      பத்தாங்கிளாஸ்ல படித்த தேற்றம் :)))

      நினைவூட்டியமைக்கு நன்றி

    • செ செ 7:28 முப on செப்ரெம்பர் 6, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      எங்கே தொலைத்தோம் இது போன்ற நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புகளை..! பெருமையான தகவல். நன்றி. .

      • சத்யராஜ்குமார் 6:30 பிப on செப்ரெம்பர் 28, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

        செ செ, நன்றி. இது போன்ற கணக்கீடுகளை தஞ்சை கோயிலை ஒத்த கோபுரங்களின் கலசங்கள் ஏற்ற மணல் மேடு எவ்வளவு நீளத்திற்கு எழுப்ப வேண்டும் என்பது போன்ற விஷயங்களுக்கு பயன்படுத்தினராம் நமது முன்னோர்கள்.

    • மீனாட்சிசுந்தரம் 9:39 முப on செப்ரெம்பர் 6, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      கர்ணம் என்ற வார்த்தையே மறந்து போயிருந்தது சத்யராஜ்குமார்.
      சடாரென்று பள்ளிநாட்களை நினைவுகளில் வரச்செய்து விட்டீர்கள்…!

    • பத்மநாபன் 12:54 பிப on செப்ரெம்பர் 6, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      பிதாகரஸின் செங்கோண முக்கோண சூத்திரம் ஒன்பது ,பத்து வகுப்புகளில் புரிந்தவுடன் கிடைத்த சந்தோசம் இதுவரை கிடைக்கவில்லை …இந்த தேற்றத்தை தவிர அனைத்தும் நினவை விட்டு ஓடி விட்டன . நல்ல பகிர்வு.. கர்ண ப்பாடல் அற்புதம்.. நிச்சயமாக இன்னமும் பாடல்கள் இருக்கும் . தேடிப்பிடிப்போம்.

    • Gowtham 11:28 பிப on செப்ரெம்பர் 6, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      Thanks for this interesting info… just browsed and stumbled upon this lines…”As a poet, he could not however, resist an urge to write poems with mathematical themes. Two such poems appear in this collection (Math in Matrimony). The best of his effusions on mathematics – “Calculus and Narasimha Avataram” is unfortunately not available. But my brother Rangan (Andy Sundaresan) has succinctly presented the central idea. [12]

      http://www.vindhiya.com/kns/kns_intro_Nannu1-white.html

    • கார்த்திக் 12:46 பிப on செப்ரெம்பர் 7, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நம்ம ஊர் கல்வி அமைப்பை இந்த மாதிரி பிரிட்டீஷ் உருவாக்கி சென்று விட்ட பின்பு, நாமும் அப்படியே பின் தொடர்கிறோம்…வரும் சந்ததியாவது மாற வேண்டும்…

      • சத்யராஜ்குமார் 6:36 பிப on செப்ரெம்பர் 28, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

        கார்த்திக், கருத்துக்கு நன்றி. புதியனவற்றை வரவேற்கும் அதே நேரத்தில் பழையனவற்றின் மதிப்பையும் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ளல் பயன் தரும்.

    • RV 3:08 பிப on செப்ரெம்பர் 7, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      If we rotate the right triangle described here by 90 degrees, then we get a triangle with a base of 3 and height of 4. Applying the formula, hypotenuse is 3 * 7 / 8 + 4/2 = 4.625, which is clearly off. The formula is interesting as a historical and (inaccurate) attempt to estimate the hypotenuse, and not useful mathematically!

    • MOTHILAL 12:14 முப on செப்ரெம்பர் 23, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      Arumai mega arumai………………………….

    • தகடூர் கோபி 3:07 முப on செப்ரெம்பர் 23, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      கர்ணம் கண்டுபிடிக்கும் சமன்பாடுகளும் பாடல் விளக்கங்களும் அருமை.

      நான் படித்த காலத்தில் இது போல அருமையாக சொல்லிக் கொடுக்காவிட்டாலும் கணக்கு எனக்கு நன்றாகவே புரிந்தது. அப்போதும் இப்போதும் எனக்கு பிடித்த பாடங்களில் கணக்கும் ஒன்று.

      கர்ணம் என்றால், கணக்கை தப்பாக போடும் போது கணக்கு வாத்தியார் என் காதைப் பிடித்து திருகி தலையில் குட்டியது தான் நினைவுக்கு வருகிறது (கர்ணம் – வடமொழியில் காது)

    • கா. சேது 1:52 பிப on ஒக்ரோபர் 6, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      எல்லா பொதுவான a, b எண்களுக்கும் இச் சமன்பாடு சரியாகாது.

      காட்டாக a=2, b=1 எனில் c=வர்க்க மூலம் (5) . ஆனால் சமன்பாட்டின் படி c= 2×7/8 + 1/2 = 9/4 = 2.25!
      வர்க்க மூலம் (5) ஆனது வகுபடா எண் (irrational number) = 2.2360…..

      அடுத்ததாக a,b,c மூன்றும் முழு (integer) எண்களாகவும் பைத்தகோரியன் மும்மை (Pythagorean Triple) ஆகவும் இருக்கையிலும் அத்தகைய எல்லா மும்மைகளுக்கும் சமன்பாடு பொருந்தாது. நான் இதை நிறுவிக்காட்டியுள்ளேன் பின்வரும் பக்கத்தில் :

      விகிதம் a/b ஆனது 4/3 அல்லது 12/5 என இருப்பினே c = (a-a/8)+b/2 சமன்பாடு சரியான விடை தருகிறது. – [4,3,5] மற்றும் [12,5,13] ஆகியன. மாற்றாக, [24,7,25] க்கு விடை தவறுகிறது.

      அவ்வாறு சமன்பாடு தரும் தவறான விடைக்கும் சரியான எண்ணிற்கும் உள்ள வேறுபாடு ஒரு மட்டுக்குட்பட்டதா, அதனால் இச் சமன்பாட்டை ஒரு தோராயத்துக்குப் பயன்படுத்தலாமா என்பன பற்றி நான் அலசவில்லை இதுவரை.

      பின்வரும் பக்கங்களில் உள்ள பைத்தகோரியன் மும்மைகளை சோதிதித்துப் பார்க்கலாம்.
      http://en.wikipedia.org/wiki/Pythagorean_triple
      http://www.math.uic.edu/~fields/puzzle/triples.html

      • சத்யராஜ்குமார் 5:40 பிப on ஒக்ரோபர் 7, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

        தங்கள் விளக்கத்துக்கு நன்றி. இந்த முறையின் inaccuracy பற்றி பாஸ்கரனிடம் பேசும் வாய்ப்புக் கிடைத்தால் அவரின் பதிலையும் இங்கு பதிவு செய்கிறேன்.

    • சு. க்ருபா ஷங்கர் 3:37 பிப on ஒக்ரோபர் 11, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      “ஓடிய நீளந்தன்னை” வாய்ப்பாடு சூப்பரா இருக்கே. என்ன ஒன்னு, இதைப்புரிஞ்சுக்கவாவது பிதாகரஸ் தியரத்தை ஒழுங்கா படிச்சுருக்கலாம் சின்ன வயசுலன்னு தோணுது 😦

    • சத்யராஜ்குமார் 8:21 பிப on ஒக்ரோபர் 13, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      **** கணிதப் பாடல்கள் – நவீன் குமரன் அனுப்பி வைத்த சுட்டி… ***

      /*இது போன்ற கணிதப் பாடல்களின் தொகுப்பு எங்கேனும் உள்ளதா? யாருக்கேனும் விபரம் தெரிந்தால் தெரிவிக்கவும். */

      கீழ்க்கண்ட சுட்டியில் தாங்கள் கேட்ட அரிய நூலொன்று இருக்கிறது

      http://www.thamizham.net/newunithamizham/jan2009/rare03-u8.htm

      – நவீன் குமரன்

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி