Updates from ஜனவரி, 2015 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

  • சத்யராஜ்குமார் 6:57 pm on January 17, 2015 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    நீல நயனங்கள் 

    லைப்ரரியில் ஒரு சிறுவர் நிகழ்ச்சிக்காக மகளைக் கூட்டிச் சென்றிருந்தேன். அவள் பள்ளித் தோழியும் வந்திருந்தாள். இருவரும் பேசி விளையாட வசதியாய்த் தோழியின் அம்மா என்னருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

    “உன் பெண்ணின் நீல நயனங்கள் மிக அழகு.” என்று சொன்னேன்.

    Blue Eyes

    “ரொம்ப நன்றி. எங்கள் குடும்பத்திலோ, கணவனின் குடும்பத்திலோ யாருக்கும் இப்படி நீலக் கண்கள் இல்லை. அதனாலேயே எனக்கும் அவளுடைய நீலக்கண்கள் ரொம்பப் பிடிக்கும்.”

    “ஓ, இறைவனின் அதிசயம்தான். உன் தலைமுறைச் சங்கிலியில் எங்காவது யாருக்காவது நீலக் கண்கள் இல்லாமலிருந்திருக்காது.” என்றேன்.

    அவள் மறுத்தாள். “இல்லை, கருமுட்டையை தானமாகப் பெற்று இவளைப் பெற்றேன்.” உதட்டில் பளிச்சென்று புன்னகை நிறைந்திருந்தது.

    அவள் பூர்வீகம் என்ன என்றெல்லாம் நான் கேட்கவில்லை. இதையெல்லாம் ஒரு சிறுகதையாக எழுதும் எண்ணமும் எனக்கு இல்லை.

     
  • சத்யராஜ்குமார் 9:21 am on September 9, 2012 நிரந்தர பந்தம் | மறுமொழி
    Tags: life, usa   

    சிறை 

    முந்தா நாள் நண்பர் வீட்டில் ஒன்று கூடல். ஜூன் முதல் அக்டோபர் வரை இந்த மாதிரி இடங்களில் நிச்சயம் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் அம்மா-அப்பாக்களைப் பார்க்கலாம். அன்றும் மூன்று தந்தைமார்களைப் பார்த்தேன்.

    “மூணு மாசம் இருக்கச் சொல்றாங்க. என்னால பத்து நாள் கூட இருக்க முடியுமா தெரியலை.”

    டீக்கடை இல்லை. பெட்டிக்கடை இல்லை. தானாக எங்கும் வெளியே செல்ல முடியவில்லை. நிறைய மனிதர்களை கண்ணில் காண முடியவில்லை. அருகிலேயே தெரிந்தவர் வீடு இருந்தாலும் சட்டென்று அங்கே சென்று கதவைத் தட்டி பேசி விட்டு வர முடிவதில்லை. முன் கூட்டியே செல்லில் பேசி, சந்திப்பைத் திட்டமிட்டு… எல்லாம் ரொம்ப செயற்கை. இப்படியே குற்றச்சாட்டுகள் நீள்கின்றன. தாங்கள் முள் மேல் இருப்பது போல ஒரு வித பதட்டத்துடனே பேசுகிறார்கள். இது வாழ்நாளில் தங்களுக்குக் கிடைத்து விட்ட மிகப் பெரிய தண்டனை போல் கருதுகிறார்கள்.

    அமெரிக்கா வந்து விட்டு இங்கே இந்தியாவைக் காண முயலும் லாஜிக் புரியவில்லை. இவ்வளவுக்கும் இவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள், நல்ல பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். இது வேறு உலகம். இந்த உலகத்தின் தன்னியல்புகளை புரிந்து கொள்ள முயன்றால் அதற்கு மூன்று மாதமில்லை, ஆறு மாதம் கூட போதாது என்பது புரியும்.

    வெகு சிலரே அந்தக் கலையில் தேர்ந்துள்ளார்கள். இங்கே வந்ததும் தங்களை முற்றிலுமாக மாற்றிக் கொள்கிறார்கள். காலை பத்து மணிக்கு மேல் மகனும் – மருமகளுமோ, மருமகனும்-மகளுமோ அலுவலகம் சென்று விட்டதும் கிடைக்கும் தொந்தரவுகளற்ற தனிமையையும், அமைதியையும் ரசிக்கிறார்கள். இண்ட்டர்னெட்டில் தினமலரோ, ஹிந்துவோ வாசிக்கக் கற்றுக் கொண்டு படித்து மகிழ்கிறார்கள். அருகாமை நூலகத்தைக் கண்டு பிடித்து பொழுதைக் கழிக்க தெரிந்து கொள்கிறார்கள்.

    இந்தப் புதிய உலகை ரசிக்க ஆரம்பிக்கும் இவர்களுக்கு ஆறு மாதங்கள் ஆறு நொடிகள் போல கடக்கின்றன.

    தங்களுக்கான அன்றாட வாழ்க்கை சொந்த ஊரில் இருக்கவே இருக்கிறது என்பதை ஒரு பெரும் கூட்டத்தின் விதிவிலக்குகளாக இருக்கும் இவர்கள் புரிந்து கொண்டிருப்பதே இதன் சூட்சுமம்.

     
    • REKHA RAGHAVAN 10:17 முப on செப்ரெம்பர் 9, 2012 நிரந்தர பந்தம் | மறுமொழி

      உண்மைதான்.வாழ்க்கையை அதன் போக்கில் ரசிக்கத் தெரிந்தவனுக்கு நான்கு சுவர்களுக்குள்ளும் சொர்கமுண்டு! கடைசி பாரா எனக்கு அழகாக பொருந்துகிறது.

      ரேகா ராகவன்.

    • கவிதா 11:37 முப on செப்ரெம்பர் 9, 2012 நிரந்தர பந்தம் | மறுமொழி

      அமெரிக்கா வந்து விட்டு இங்கே இந்தியாவைக் காண முயலும் லாஜிக் புரியவில்லை. இவ்வளவுக்கும் இவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள்//

      இந்தியாவில் பலவருடம் இருந்துவிட்டு, அமெரிக்கா வந்துவிட்டதற்காக ஒரிரு நாட்களில்/மாதங்களில் மாற்றிக்கொள்ள சொல்லுவதும், மாற்றிக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதும் எந்த விதத்தில் நியாயம்.

      அவர்கள் இந்தியாவைக் காண முயலவில்லை. இந்தியாவுடன் ஒப்பிட்டுப்பார்க்கிறார்கள் அவ்வளவே. !

    • சித்ரன் ரகுநாத் 1:27 பிப on செப்ரெம்பர் 9, 2012 நிரந்தர பந்தம் | மறுமொழி

      //மருமகளுமோ, மருமகனும்-மகளுமோ அலுவலகம் சென்று விட்டதும் கிடைக்கும் தொந்தரவுகளற்ற தனிமையையும், அமைதியையும் //

      சில பெற்றோர்களுக்கு மகனோ, மகளோ, மருமகளோ யாருடனாவது இருப்பது ஆறுதலாக இருக்கலாம். தனிமை, அமைதி இவற்றைவிட இனிமையான தொந்தரவுகள் பிடித்து இருக்கலாம். இண்டெர்நெட்டில் தினமலரும், ஹிந்துவும் படிப்பது ஒரு வகை காம்ப்ரமைஸ்தானே? மேலும் இந்தியாவின் ஏதாவது டவுனிலிருந்தோ, கிராமத்திலிருந்தோ வந்த பெற்றோர்கள் எனில் அருகாமை லைப்ரரிக்குத் தனியாக செல்ல பயமோ கூச்சமோ தடுக்கலாம்.

      நீங்கள் சொன்னமாதிரி விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் எல்லோரிடமும் “சூழ்நிலைக்குத் தகுந்தமாதிரி” தன்னை மாற்றிக்கொள்ளும் திறனோ, விருப்பமோ இருக்குமா என்பது சந்தேகமே. என்ன சொல்லுகிறீர்கள்?

    • krish 6:16 முப on செப்ரெம்பர் 10, 2012 நிரந்தர பந்தம் | மறுமொழி

      சரியாத்தான் சொல்லியுள்ளீர்கள்.நன்றி.

    • சத்யராஜ்குமார் 7:38 பிப on செப்ரெம்பர் 11, 2012 நிரந்தர பந்தம் | மறுமொழி

      ரேகா ராகவன், கவிதா, சித்ரன், க்ரிஷ், உங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

      //இந்தியாவுடன் ஒப்பிட்டுப்பார்க்கிறார்கள் அவ்வளவே//

      ஒப்பிடுவதோடு நில்லாமல் அவை இல்லாததால் இங்கே தங்களுக்கு எந்த மகிழ்ச்சியுமில்லை என ஒட்ட மறுக்கிறார்கள்.

      //ஆனால் எல்லோரிடமும் “சூழ்நிலைக்குத் தகுந்தமாதிரி” தன்னை மாற்றிக்கொள்ளும் திறனோ, விருப்பமோ இருக்குமா என்பது சந்தேகமே. என்ன சொல்லுகிறீர்கள்?//

      //மாற்றிக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதும் எந்த விதத்தில் நியாயம்.//

      எனக்கு எந்த எதிர்பார்ப்புமில்லை. மாறுவதும் மாறாததும் தனி நபர்கள் சம்பந்தப்பட்டதே. ஆனால் சூழ்நிலையைப் புரிந்து கொள்வதும், அதனுடன் தன்னைப் பொருத்திக் கொள்வதுமே வாழ்க்கைத் தத்துவம் என நமக்கு மட்டுமல்ல, பூச்சி பொட்டு என எல்லாவற்றுக்குமே இயற்கை விதித்திருக்கிறது. ஒரு சாரார் புலம்பி வருந்தி துயருறுவதையும், மறு சாரார் மகிழ்ச்சியுடன் புது சூழலை அனுபவிப்பதையும் ஒருங்கே கவனித்ததால் பதிவு செய்தேன்.

  • சத்யராஜ்குமார் 8:55 pm on August 28, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி
    Tags: கிரந்தம்   

    கிரந்தம் தவிர்! 

    சமீபத்தில் கிரந்தம் தவிர்த்து எழுதுவது குறித்த விவாதத்தை ட்விட்டரில் படிக்க நேர்ந்தது. ஒரு புனைவு எழுத்தாளனாக எழுத்தில் முற்றிலுமாக கிரந்தம் தவிர்ப்பது இயலாது என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதற்கு கிரந்த வார்த்தைகள் சொற்கள் முதலில் சமூகத்திலிருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும். இது ஒரு பிடி இருபத்தியிரண்டு நிலைமை.

    ஆனால், நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முந்தைய செய்தித்தாளில் சுருட்டித் தரப்பட்ட சுண்டலோ, பஜ்ஜியோ சாப்பிட நேர்ந்தால் – அப்போதிருந்த எத்தனையோ கிரந்தச் சொற்கள் இப்போது வழக்கொழிந்து போயிருப்பதை உணரலாம். எப்படி இது நிகழ்ந்தது? இது குறித்த ப்ரக்ஞை சிந்தனை மிகுந்தவர்கள் பேசும்போதும், எழுதும்போதும் வடிகட்டிய தமிழ் வார்த்தைகளை சொற்களை தொடர்ந்து உபயோகித்து பயன்படுத்தி வந்திருக்க வேண்டும்.

    ஆக முடிந்த வரை கிரந்தம் தவிர்ப்பதன் மூலம் ஓரளவு தமிழ் சுத்திகரிக்க்ப்படும் வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. ஆனால் கிரந்தம் தவிர்ப்பதில் உள்ள பிரதான தலையாய சிக்கல், தகுந்த மாற்றுச் சொற்களைப் பிரயோகித்து பயன்படுத்தி எழுதும் அளவு மொழி வளம் எல்லோருக்கும் இல்லை என்பதே ஆகும். அதற்குக் காரணம் மொழி அருவியாய்க் கொட்டும் சங்க இலக்கிய தமிழ் பொக்கிஷங்களை கருவூலங்களை ஆற அமர படித்து ரசிக்க தற்கால சந்ததியினர்க்கு பொறுமையில்லை அல்லது நேரமில்லை.

    இது தமிழ் படிக்க மட்டுமில்லை; எல்லா துறைகளுக்கும் பொருந்தும். அதனால்தான் இணையத்தில் இன்று எல்லாமே கூட்டு முயற்சியில் நடைபெறுகின்றன. எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன். உனக்குத் தெரிந்ததை நீ சொல்லு. இணைந்து அறிவு பெறுவோம். இணைந்து செயல்படுவோம்.

    அப்படித்தான் @kryes கிரந்தம் தவிர்க்க ட்விட்டரில் தினம் ஒரு சொல்லை இட ஆரம்பித்தார். படிக்க சுவாரஸ்யமாக ஆர்வமூட்டுவதாக இருந்தது. ஆனாலும் அவை ட்விட்டரின் நேரச் சுழலில் புதைந்து மறைந்து விடுவதைப் பார்த்து மெலிதான கவலை பிறந்தது.

    நினைத்த போது ஒரு கிரந்தச் சொல்லை உள்ளிட்டு அதற்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறியும் வசதி வேண்டும் என எண்ணினேன். அப்படி ஒன்று ஏற்கெனவே இருக்கிறதா என்று தேடிப்பார்த்துக் கிடைக்காததால், நாள்தோறும் அலுவலகத்துக்கு பஸ்ஸில் பேருந்தில் செல்லும் நேரத்தில் இந்த எளிய கருவியை உருவாக்கி – புல்வெளி.காம் தளத்தில் வெளியிட்டுள்ளேன்.

    @kryes இக்கருவி குறித்து பல யோசனைகளை சிந்தனைகளை வழங்கியுள்ளார். தினம் ஒரு சொல்லை இதில் இணைக்க தான் உதவ முடியுமென நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். @raghuji தளத்துக்கான தோற்றம், வடிவமைப்பில் தனது உதவிக்கரம் நீட்டினார்.

    தளத்தில் இதுகாறும் இல்லாத சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் உங்களுக்குத் தெரியுமெனில் அதை நீங்களே இணைக்கவும் வழியுண்டு. அடுத்த முறை நீங்கள் ஒரு பதிவு எழுதும்போது கிரந்த வார்த்தை உங்கள் எழுத்தில் வந்து விழுந்தால் அதற்கு மாற்று உண்டா என இங்கே ஒரு எட்டு வந்து பார்க்கலாம்.

     
    • TPKD / TBCD (@TPKD_) 10:03 பிப on ஓகஸ்ட் 28, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      அருமையான முயற்சி..பாராட்டுகள்…வாழ்த்துகள்.

      இது கிரந்தம் இல்லாத வடமொழிச்சொற்களுக்கும் நீட்டித்தால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன் :-))

    • amas32 10:43 பிப on ஓகஸ்ட் 28, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்!
      amas32

    • PADMANABAN 11:37 பிப on ஓகஸ்ட் 28, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்ல பதிவு சத்யா…பெயர்ச் சொல் தவிர மற்ற இடங்களில் கிரந்தம் தவிர்க்கலாம் …. முயற்சி திரு வினையாக்கும்… கிரந்தம் தாண்டி விடலாம் அடுத்து ஆங்கில கலப்புக்கு என்ன செய்வது…..

    • Ravi 12:03 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்ல முயற்சி. நானும் சில சொற்களைச் சேர்க்கத் தொடங்கி இருக்கிறேன்.

    • Balaraman 1:20 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      மிகவும் நல்ல முயற்சி! 🙂

      இந்தப் பதிவில் கீழ்க்கண்ட சொற்களையும் ‘அடித்து’ நொறுக்கவும்:

      ரசிக்க – விரும்ப
      யோசனைகளை – சிந்தனைகளை

      அப்புறம் ‘பஜ்ஜியோ’ என்பதை ‘பஃச்சியோ’ என்று எழுத ஊக்குவிக்கலாமா?!

      நானும் ‘புல்வெளி’யில் என்னால் முடிந்ததைச் செய்கிறேன், நன்றி!

    • சத்யராஜ்குமார் 6:08 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      @TPKD_ , amas32, PADMANABAN, Ravi, Balaraman உங்கள் ஆலோசனைகளுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    • Kannabiran Ravi Shankar (KRS) 8:46 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      //ஒரு புனைவு எழுத்தாளனாக எழுத்தில் முற்றிலுமாக கிரந்தம் தவிர்ப்பது இயலாது என்பது எனது தனிப்பட்ட கருத்து//

      🙂
      ஓரளவு உண்மையே!
      முற்றிலும் தவிர்ப்பதற்குப் பதிலாக, இயன்ற வரை தவிர்க்க முனைவோம்! இதனால் நல்ல தமிழ்ச் சொற்கள் வழக்கொழியாமல் நிலைக்கும்!

      @ksrk & @raghuji – இந்தப் பணிக்கு என் மிகுந்த நன்றி!

      @TPKD_ , amas32, PADMANABAN, Ravi, Balaraman – உங்களால் இயன்ற அளவு சொற்களைச் சேருங்கள்! நண்பர்களிடையேயும் அறிமுகம் செய்யுங்கள்!

    • elavasam 9:27 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      சிந்தனை என்பதை யோசனை என்ற சொல்லின் மாற்றாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. சிந்தனை = thought, யோசனை = suggestion / idea இல்லையா?

      • சத்யராஜ்குமார் 10:07 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

        பலராமனின் பின்னூட்டத்துக்குப் பின் மாற்றினேன். யோசனைக்கு உரிய மாற்றுச் சொல் யாரேனும் வழங்க வேண்டும்.

      • Kannabiran Ravi Shankar (KRS) 10:55 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

        @elavasam
        யோசனை என்பதே தமிழ்ச் சொல் தான்! – ‘வழாமை ஓடி யோசனை நீண்டு மாலை வேய்ந்து’ என்பது மணிமேகலை!

        யோசிக்கிறேன் = thought! யோசனை சொல்=suggestion! works both ways!
        சிந்தனை= always, thought

      • C.R. Selvakumar 10:07 முப on நவம்பர் 27, 2013 நிரந்தர பந்தம் | மறுமொழி

        யோசனை என்பதற்கு ஈடாக கருத்து அல்லது கருத்தூட்டு என்று சொல்லலாம். ஒரு யோசனை வந்தது என்பதை ஒரு கருத்து தோன்றியது என்று சொல்லலாம். ஆ! அது நல்ல யோசனை என்பதை ஆ! அது நல்ல கருத்தாச்சே என்று சொல்லலாம். suggestion என்றால் பரிந்துரை, கருத்தூட்டு என்று சொல்லலாம். யோசனை என்பதையோ அது போன்ற சொற்களை நீக்கவேண்டும் என்பதையோ கருத்தாகக் கொள்ளவேண்டாம் என்பது என் தனிக்கருத்து. வாடிக்கை, அலமாரி முதலான சொற்களும் தமிழ் அல்ல. ஆனால் தமிழாக உள்வாங்கி ஆளலாம். மிக அதிகமாக வேற்றுமொழிச்சொற்கள் பெருகிப் போனால் தான் சிக்கல். ஆனாலும் ஈடான தமிழ்ச்சொற்களை ஆங்காங்கே ஆள்வதும் நல்லது. புனை கதைகள் வேறு கட்டுரை, புனைவிலா எழுத்துகள் வேறு.

    • ila 9:46 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      அருமையான முயற்சிங்க. சில வார்த்தைகளை சொற்களை இணைத்துள்ளேன். அதே மாதிரி அதை நிர்வகிக்கவும் ஒரு குழு அமைச்சிருங்க. டேமிளர்ஸ் ஆர் சோ கன்னிங் பெல்லோஸ் யூ நோ..

    • seenu 11:02 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்.நன்றியுடன்
      சீனு

    • இரா. செல்வராசு 6:57 பிப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்ல முயற்சி. தள வடிவமைப்பும் மிகவும் அழகாகவும் எளிமையாகவும் இருக்கிறது.

    • REKHA RAGHAVAN 5:07 முப on ஓகஸ்ட் 30, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

    • Bar-Code 11:55 முப on ஓகஸ்ட் 31, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சத்யா

    • blog.indian 1:25 பிப on திசெம்பர் 4, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      திரு. இராம.கி அவர்களின் வளவு பதிவில் உள்ள சொல்லாக்கங்களின் தொகுப்பு.

      http://thamizhchol.blogspot.com/

      • Kannabiran Ravi Shankar (KRS) 8:36 பிப on திசெம்பர் 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

        மிக்க நன்றி; இராம.கி ஐயாவின் செஞ்சொல்லாக்கங்களின் நனி மகிழ்நன் நான்! அவரை அறிந்தவனும் ஆதலால்…இத்தளம் கண்டு பெரிதும் மகிழ்ந்தேன்!

    • blog.indian 1:29 பிப on திசெம்பர் 4, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      ஹஸ்தம் = கைத்த(ல)ம் 

      சுவாரஸ்யம் = சுவையாரம் 

      புஸ்தகம் = பொத்தகம்

      ஜோடி = சோடி

    • Krishnan 11:56 பிப on நவம்பர் 13, 2013 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்..நானும் கிரந்த சொற்களை பயன்பாட்டில் இருந்து தவிர்க்க முயல்வேன்.

    • Krishnan 11:56 பிப on நவம்பர் 13, 2013 நிரந்தர பந்தம் | மறுமொழி

      Reblogged this on My Perspectives and commented:
      கிரந்தம் தவிர்.

    • C.R. Selvakumar 10:09 முப on நவம்பர் 27, 2013 நிரந்தர பந்தம் | மறுமொழி

      மிக நல்ல முயற்சி! நல்வாழ்த்துகள்!

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி