Updates from திசெம்பர், 2010 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • சித்ரன் ரகுநாத் 7:20 am on December 4, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: காதல் கதை, , பாடம், ஷேக்ஸ்பியர்   

  பன்னிரண்டாவது இரவு – ஒரு காதல் கதை 

  ‘ஒலிவியாவை உண்மையாகவும் ஆழமாகவும் நீ காதலிப்பது போலவே உன்னைக் காதலிக்கும் இந்த இளம் பெண்ணுக்கு என்ன நிலைமை ஏற்படும்? உன் காதலை அவள் பெற முடியாதென்று நீ அவளிடம் சொல்லியிருந்தால் அந்த பதிலால் அவள் திருப்தியடைந்திருக்க மாட்டாளல்லவா?’

  ‘ஒரு ஆண் ஒரு பெண்ணைக் காதலிக்கிற அளவு ஒரு பெண்ணால் ஆணைக் காதலிக்க முடியாது. பெண்களின் இதயம் இம்மாதிரி ஆழமான காதலையெல்லாம் தாங்காது’

  ‘அவளிடம் என் காதல் கதையையும் அதனால் நானடைந்த கஷ்டத்தையும் அவள் இதயம் உருகும்வரை சொல்.”

  ‘என் எஜமானன் போலவே நானும் உன்னைக் காதலித்தால், நீ அதை ஏற்றுக்கொள்ளும்வரை விடமாட்டேன். காற்று முழுவதையும் உன் பெயரால் நிரப்புவேன். மலைகள் முழுவதும் உன் பெயரை எதிரொலிக்க வைப்பேன்.’

  தற்செயலாக பையன் படித்துக்கொண்டிருந்த பாடபுத்தகத்தை வாங்கிப் பார்த்தபோது மேற்கண்ட வரிகள் கண்ணில் பட்டன. அது ஒரு ஆங்கில நான் – டீடெய்ல் புத்தகம். ஷேக்ஸ்பியரின் (சிறு)கதைகள். ஜெயராஜ் படம் வரைந்திருந்தார். “ Twelfth Night”  என்ற ஒரு கதையில்தான் இதெல்லாம் வருகிறது. கதையில் சரமாரியாக யார் யாரோ யாரையெல்லாமோ காதலித்து உருகிக்கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு முக்கோண அல்லது நாற்கோண காதல் கதையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். முழுதாகப் படிக்கவில்லை. குறிப்பிட்ட வரிகளை மட்டும் கொஞ்சம் மொன்னையாக மொழிபெயர்த்திருக்கிறேன்.

  பாடத்துக்குக் கீழே சில கேள்விகள் கொடுத்திருந்தார்கள். அந்த கேள்விக்கான பதில்களை படித்து பையனாகப்பட்டவன் பரீட்சையில் எழுத வேண்டும். அவற்றில் சில:

  வயோலா ஆர்ஸினோவின் மேல எப்படி காதல் வயப்பட்டாள்? அதை எவ்வாறு அவனிடம் அதை வெளிப்படுத்தினாள்?

  ஒலிவியா சிசாரியோவிடம் எப்படித் தன் காதலைச் சொன்னாள்?

  ஒரு ஆணாகவும் ஒரு காதலனாகவும் இருந்த செபாஸ்டியனைப் பற்றி என்ன நினைக்கிறாய்?

  பிறகு என் மனைவி இந்தக் கேள்விகளையெல்லாம் மகனிடம் கேட்க அவன் படித்தவற்றை ராகம் போட்டு ஒப்பித்துக் கொண்டிருந்தான். வீடு முழுக்க காதல் வழிந்துகொண்டிருந்தது.

  நான் எதுவும் கேட்க முற்படுவதற்குள் மனைவிக்கு ஒரு ஃபோன் வந்தது. மகனின் வகுப்பில் படிக்கும் இன்னொரு பையனின் அம்மா. கொஞ்சம் ஒட்டுக்கேட்டதில் இந்த ஒலிவியா- வயோலா- சிசாரியோவின் காதல் விவகாரத்தைப் பற்றித்தான் அக்கப்போர் பேசிக்கொண்டிருந்தார்கள் என்று தெரிந்தது. மனைவி ஃபோனை வைத்த பிறகு ரகசியமாய் என்ன விஷயம் என்று கேட்டபோது ஐந்தாம் வகுப்புப் படிக்கும் சின்னப் பசங்களுக்கு இந்த மாதிரி காதல் கதையெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்லையா என்று அந்தப் பையனின் அம்மா அங்கலாய்த்தார்களாம். பள்ளி வளாகத்தில் ஆர்.ஐஸ்வர்யா-வின் அம்மா கூட இதையேதான் சொல்லி ஒருபாட்டம் புலம்பியிருக்கிறார். “அதுவும் ஸ்ட்ரெய்ட்டான ஒரு நல்ல லவ் ஸ்டோரிய சொல்லிக்குடுத்தாக்கூட பரவாயில்லை. இதென்னமோ கொளப்பமான காதல் கதையால்ல இருக்கு”. என்றாராம்.

  “எப்படி டீச்சர் இதையெல்லாம் பசங்களுக்கு சொல்லித்தர்ராங்க? இதெல்லாம் இப்பவே தெரிஞ்சு பசங்க கெட்டுப்போயிர மாட்டாங்களா?” மனைவியின் கேள்வி வந்து விழுந்தது.

  “டிவி. சொல்லித்தராததையா டீச்சர் சொல்லிக்குடுக்கப் போறாங்க..” என்றேன்.

   
  • REKHA RAGHAVAN 7:40 முப on திசெம்பர் 4, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   //“டிவி. சொல்லித்தராததையா டீச்சர் சொல்லிக்குடுக்கப் போறாங்க..”//

   அதானே! எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?

  • என். சொக்கன் 1:01 முப on திசெம்பர் 6, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நல்ல கட்டுரை சித்ரன் – ஷேக்ஸ்பியரின் கதைக்கருக்கள் சிக்கலானவைதான். ஆனால் கொஞ்சம் முயன்றால் எல்லோருக்கும் புரியும்படி சொல்லலாம், நம் விருப்பம்போல் நீட்டிச் சுருக்கலாம், குழந்தைக் கதைகளாகக்கூட மாற்றலாம் – என்னுடைய ஷேக்ஸ்பியர் வாழ்க்கை வரலாறுப் புத்தகத்தின் பின்பகுதியில் இதைக் கொஞ்சம் முயற்சி செய்தேன். படித்தவர்களுக்கு எவ்வளவு தூரம் புரிந்தது என்று தெரியவில்லை 🙂

   – என். சொக்கன்,
   பெங்களூரு.

  • காஞ்சி ரகுராம் 1:36 முப on திசெம்பர் 6, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   அங்கலாய்க்கும் அம்மாக்களுக்கு: இந்தப் பாடங்கள் சற்று ஓவரென்றாலும், பத்தோடு பதினொன்றாய்க் கரைந்துவிடும் (எதைப் படித்தாலும் பரிட்சையுடன் மறந்து விடுகிறார்களே!). ஆனால் நீங்கள் பார்க்கும் டிவி சீரியல்கள்தான் விஷ விருட்சத்தை பிஞ்சு மனங்களில் விதைத்துக் கொண்டிருக்கின்றன.

  • செந்தில் 10:43 பிப on திசெம்பர் 7, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   அருமை சித்ரன்ஜி.. பசங்க பலதும் படித்து பாண்டித்தியம் பெற இது உதவும். 🙂

  • சித்ரன் 12:34 பிப on திசெம்பர் 8, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நன்றி! @ரேகா ராகவன், என்.சொக்கன், காஞ்சி ரகுராம், செந்தில்.

 • சித்ரன் ரகுநாத் 7:47 am on January 10, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: ஓவியம், கலை   

  ராப் என்கிற கலைஞன் 

  டோராவுக்கு அடுத்தபடியாக நான் ரசித்துப்பார்க்கிற இன்னொரு நிகழ்ச்சி POGO – வில் வருகிற MAD. இந்த நிகழ்ச்சியை நான் வாய்ப்புக் கிடைக்கிறபோதெல்லாம் பார்ப்பதற்கு காரணம் நிகழ்ச்சியை நடத்துகிற ROB என்று செல்லமாய் குழந்தைகளால் அறியப்படுகிற Harun Robert.

  போகோ-வை எனக்குப் பொதுவாகவே பிடிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று அதன் கிரியேட்டிவிட்டி. அடுத்தது எந்த நிகழ்ச்சியைப் பார்த்தாலும் கலர்ஃபுல்லாக இருப்பது. நிகழ்ச்சிகளின் டைட்டில் அனிமேஷன்கள், ட்ரைலர்களைப் பார்த்தாலே நான் சொல்ல வருவது புரியும்.

  இந்த ராப் என்கிற ஆசாமிக்கு கிரியேட்டிவிட்டி கொஞ்சம் ஜாஸ்திதான். கையில் எது கிடைத்தாலும் கொஞ்சம் வர்ணங்கள், இத்துனூண்டு பசை, ஒரு கத்திரிக்கோல் இத்யாதிகளை வைத்துக்கொண்டு ஏதாவது ஒரு அழகான பொருளாக அதை மாற்றிவிடுகிற கைங்கரியம் இருக்கிறதே!! அது பல சமயங்களில் ‘அட’ என்று சொல்ல வைக்கும். எங்கிருந்து இந்த மனிதருக்கு மட்டும் இப்படிக் கற்பனை ஊற்றெடுக்கிறதென்று ஆச்சரியமாக இருக்கும்.

  ராப் ஒரு அருமையான ஓவியர். அனிமேஷனில் மிகத் தேர்ச்சிபெற்றவர். டன் டன்னாக கலைத் திறமை கொட்டிக்கிடக்கிற படைப்பாளி. 

  ஸ்டைலான ஒரு குறுந்தாடி, தலையில் ஒரு பெரிய கர்சீப் அல்லது தொப்பி, வரிசைப் பல் சிரிப்பு , கலர்ஃபுல் பனியன் என்று அசத்தலான கெட்டப்பில் வருகிற ராபுக்கு தன் கிரியேட்டிவிட்டி மூலம் குழந்தைகளை ஸ்நேகமாய் ஈர்க்கத் தெரிந்திருக்கிறது. நிகழ்ச்சியின் ஹைலைட்டாக இறுதியில் அவர் ஒரு சின்ன டீமுடன் அல்லது தனியாக உருவாக்குகிற  “தி பிக் பிக்சர்” அமர்க்களமான ஒன்று. 

  குழந்தைகளின் படைப்புத்திறனை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட பெற்றோர்கள் MAD-ஐ பார்க்க ஊக்குவிக்கலாம்.

  • சித்ரன்
   
 • சித்ரன் ரகுநாத் 7:25 am on October 7, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  பார்த்துத் தொலைப்போம்!! 

  விஜய் டிவியின் ஜோடி நெ.1 நிகழ்ச்சியில் நடுவரில் ஒருவரான சிம்புவின் நேரடி அதிரடித் தீர்ப்பின் தீர்க்கத்தை தாங்க மாளாத நடிகர் பப்லு என்கிற பிருத்வி தன் உணர்ச்சிப் பிழம்பின் சீற்றத்தை சிம்புவின் மேல் திருப்பி அனுப்ப, நிகழ்ச்சி ரசாபாசமாகி சிம்பு ‘இந்த நிகழ்ச்சியிலிருந்து eliminate ஆவது நான்தான்’ என்று தானே அறிவித்துக் கொண்டு கேமரா, ட்ராலி, செட்களைத் தாண்டி வெளியேற, போட்டியில் கலந்து கொண்டவர்கள் வாயடைத்துப்போய் பார்த்துக் கொண்டிருக்க, சிம்பு காரில் ஏறும்முன் மடக்கி, கெஞ்சி மறுபடியும் கொண்டுவந்து நடுவர் இருக்கையில் அமர வைத்தார்கள். மேலும் தொடர்ந்த சிம்புவின் emotional burst-out அழுகை இன்னபிற காரணங்களால் பிருத்விராஜ் போட்டியிலிருந்து வெளியேற, இத்தனையையும் லைவ் ரிலே என்ற பெயரில் போட்டுக் காட்டி டி.வி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

  பெரிய திரையில் K. பாலசந்தர் கையால் எல்லாம் குட்டுப்பட்ட நடிகர் பப்லு என்கிற பிருத்வி சின்னத்திரையில் இப்படி சிம்புவிடம் சிலுப்பிக் கொள்ளவேண்டிய நிர்பந்தம் என்ன வந்தது என்கிற கேள்வியை பார்க்கிறவர்கள் கேட்கிறார்கள்தான். அதை விடுங்கள்!

  இப்பொதெல்லாம், வித்தியாசப் படுத்துகிறோம் என்கிற பெயரில், நிகழ்ச்சியின் இடையில் இம்மாதிரி behind the stage-ல் இருக்கவேண்டிய நிகழ்ச்சிகளையும் ஒரு செட்டப்பாகவோ, அல்லது நிஜத்தில் நடந்ததாகவோ காட்டி பார்வையாளர்களை தங்கள் பக்கம் இழுப்பதை டி.வி சேனல்களில் ஒரு ட்ரெண்ட் ஆக மாறிக் கொண்டிருப்பதை அவ்வப்போது கண்ணுற முடிகிறது.

  ரொம்ப கஷ்டம்தான்! ஆனாலும் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.

   
  • Ramu 9:17 முப on ஒக்ரோபர் 7, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   yes, vijay tv does it a last. it makes money out of people emotions.
   bad example set by vijay tv.
   lot of issues in this Jodi number I session II

  • ராஜா 9:34 முப on ஒக்ரோபர் 7, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   மற்ற நடுவர்கள் பாராட்டி மதிப்பெண் வழங்கிய நிலையில் சிம்புவின் கமெண்ட்களை பப்லு இந்தளவு சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லைதான். என்றாலும், solo round இல் இருந்தே சிம்புவின் கமெண்ட்கள் பப்லுவை மட்டம் தட்டும் வகையில் இருப்பதை உணர முடிகிறது. பப்லு
   உண்மையிலேயே நன்றாக ஆடினார் என்பதில் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் யாருக்கும் இருவேறு அபிப்ராயம் இருக்க முடியாது. பேச விரும்பவில்லை என்று நின்றவரை வீண் வம்புக்கு இழுத்து ரசாபாசமாக்கி வெளியேற்றியது வரை எல்லாம் சிம்புவின் கைவண்ணம்.

   ஒவ்வொரு ஜோடியும் ஆடி முடித்ததும் அவர்களை டென்ஷன் ஆக்குகிறேன் பேர்வழி என்று சிம்பு அடிக்கும் கொட்டம்; ஒரு ஜோடியிடம் இன்னொரு ஜோடி பற்றி கருத்து கேட்டு சங்கடப்படுத்தி ரசிக்கும் மனோபாவம் – எல்லாமே சிறுபிள்ளைத்தனம்.

   –“இப்பொதெல்லாம், வித்தியாசப் படுத்துகிறோம் என்கிற பெயரில், நிகழ்ச்சியின் இடையில் இம்மாதிரி behind the stage நிகழ்ச்சிகளையும் ஒரு செட்டப்பாகவோ, அல்லது நிஜத்தில் நடந்ததாகவோ காட்டி பார்வையாளர்களை தங்கள் பக்கம் இழுப்பதை டி.வி சேனல்களில் ஒரு ட்ரெண்ட் ஆக மாறிக் கொண்டிருப்பதை அவ்வப்போது கண்ணுற முடிகிறது” —

   நிஜம்.

  • சித்ரன் 10:45 முப on ஒக்ரோபர் 7, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   ராமு, ராஜா,
   நீங்கள் சொல்வது சரியே. ‘எனக்குப் பிடிக்கல’ என்று முகத்தில் அடித்தார்போல் தீர்ப்பு சொல்வதேகூட ஒரு நல்ல நடுவருக்கு அழகில்லை. நாகரிகமும் இல்லை என்பது என் கருத்து. அப்படிச் சொல்வது ஒரு Audience attitude என்றே கருதுகிறேன். சிம்பு அதைத்தான் செய்கிறார்.

  • சத்யராஜ்குமார் 10:46 முப on ஒக்ரோபர் 7, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   பல வருடங்களுக்கு முன்பே யாகவா முனிவரையும், சிவஷங்கர் பாபாவையும் வைத்து ஏதோ ஒரு டிவியில் இந்த மாதிரி ட்ரையல் பார்த்தார்கள் என்று நினைக்கிறேன்.

  • சித்ரன் 10:50 முப on ஒக்ரோபர் 7, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   சத்யராஜ்குமார்.. எங்கேயோ போயிட்டீங்க..!

  • LORDLABAKKU 10:51 முப on ஒக்ரோபர் 7, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   ithu ellam pre-planned thaan… since too many channels showing the same kind of dance show, seems vijay tv is making some gimmicks…

  • Prakash 11:16 முப on ஒக்ரோபர் 7, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   எல்லாமே செட்டப் மாதிரிதான் எனக்குத் தோணுச்சு

  • bsubra 11:21 முப on ஒக்ரோபர் 7, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   எந்த மாதிரி ஆடியன்ஸ் வேணும் என்று எண்ணுவதில்தான் இருக்கிறது.

   ஷில்பா ஷெட்டி கலந்து கொண்ட பிக் பிரதர், அமெரிக்க எம்.டிவியின் நிஜ நாடகங்களில், இந்த ‘ரியாலிடி’யை சிறப்பாகவே அரங்கேற்றுகிறார்கள். பதின்ம வயதினரையும் கட்டிப்போட்டு பார்க்க வைக்கிறது.

   சன்/விஜய்- கள் இன்னும் இந்த ஒத்திகை பார்க்கப்பட ‘அதிரடி நிஜ’ நிகழ்வுகளை எடிட் செய்வதில் தேறவில்லை. சினிமா வெளியாகும் முன் எஸ்.ஜே சூர்யாவிற்கும் மீரா ஜாஸ்மினுக்கும் திருமணம் போன்ற வதந்திகளைக் கிளப்பி விருவது போல், டிவி கிசுகிசுக்களில் ப்ரொஃபஷனலிஸம் போதவில்லை.

  • என்னத்த கண்ணைய்யா 11:22 முப on ஒக்ரோபர் 7, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   பப்லுவை திரையுலகில் ஒரு தாயின் சபதம் படத்தில் டான்சராக அறிமுகம் செய்து வைத்தவர் டி ராஜேந்தர்.

   முன்று நடுவர்கள் இருந்தால் எல்லோருமே ஒரே கருத்தைக் கொண்டிருப்பார்கள் என்பது ஏற்கத்தக்கதல்ல. சிம்பு வெளிப்படையாக பேசி இருக்கக் கூடாது என்று தான் பலரும் சொல்கிறார்கள். சிம்பு பாயிண்டும் சரியாக இருக்கும் முந்தய நிகழ்ச்சியில் கட்டிப்பிடித்து வாழ்த்தி இருக்கிறார் என்பதையும் கவனம் கொள்ள வேண்டி இருக்கிறது.

  • சித்ரன் 11:25 முப on ஒக்ரோபர் 7, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   இருக்கலாம் பிரகாஷ்,
   இந்த நிகழ்வு ஒன்றை மட்டுமே இந்த தொடருக்கான விளம்பரங்களில் ஒரு வாரமாய் காட்டி காட்டி நிகழ்ச்சி அன்று நிறைய viewership-ஐ ஈட்டிக்கொண்டார்கள்.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி