Updates from ஒக்ரோபர், 2007 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • சத்யராஜ்குமார் 11:13 am on October 3, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  திரை 

  Brambleton சினிப்ளெக்ஸ் தியேட்டர் ஒன்றில் இப்போதுதான் சிவாஜி பார்த்த மாதிரி இருக்கிறது. அதற்குள் DVD வந்து விட்டது. நேற்று நந்தா என்னுடைய LCD ப்ரொஜெக்டரில் பார்க்க வேண்டுமென்று இந்திய அங்காடியிலிருந்து வாடகைக்கு எடுத்து வந்திருந்தார்.

  சிவாஜி, மனிதன் இரண்டு படங்களும் ஒரே DVD-யில்! மெனு திரையில் மனிதன் ரஜினியின் முகத்தையும், சிவாஜி ரஜினியின் முகத்தையும் க்ளோஸப்பில் பக்கம் பக்கம் போட்டிருந்தார்கள். ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க முயன்று என்னால் ஒன்று மட்டுமே பிடிக்க முடிந்தது.

  இந்தச் சமயத்தில் ப்ரொஜெக்டர் பற்றி சிறு குறிப்பு. நண்பர்கள் நாற்பது இன்ச் குறுக்களவில் HDTV-களை நிறைய விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்க, அதில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான விலையில் HDTV சிக்னலுடன் ஒத்துப் போகிற LCD ப்ரொஜெக்டர் வாங்கினேன். ஏதாவது ஒரு குட்டிச்சுவரில் 100 இன்ச் அகலத்துக்கு படு தாராளமாய்ப் படம் பார்க்கலாம். ஏற்கெனவே வைத்திருந்த BOSE இசை வழங்கியுடன் சேர்ந்து தியேட்டர் அனுபவம் அப்படியே கிடைக்கிறது.

  வரவேற்பறையை பந்தாவாகக் காட்ட முடியாதென்பதைத் தவிர வேறெந்த அசௌகரியமும் இதனிடம் இல்லை.

   
  • மங்களூர் சிவா 1:35 பிப on ஒக்ரோபர் 3, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   //
   மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான விலையில் HDTV சிக்னலுடன் ஒத்துப் போகிற LCD ப்ரொஜெக்டர் வாங்கினேன். ஏதாவது ஒரு குட்டிச்சுவரில் 100 இன்ச் அகலத்துக்கு படு தாராளமாய்ப் படம் பார்க்கலாம்
   //

   புரொஜக்டர்க்கு லைப் ரொம்ப கம்மி என ஒரு பேச்சு இருக்கிறதே உண்மையா?

   சிவாஜி டிவிடி ப்ரிண்ட் நன்றாக இருக்கிறதா?

  • சத்யராஜ்குமார் 2:03 பிப on ஒக்ரோபர் 3, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   சிவா,
   ப்ரொஜெக்டர் பல்புக்கு ஆயுள் காலம் உள்ளது. ஆயுள் முடிந்ததும் மாற்ற வேண்டும். ஆனால் இது Back Projection Big Screen TV-க்களுக்கும் பொருந்தும்.

   சிவாஜி DVD ப்ரிண்ட் சும்மா அதிருதுங்க.

  • T.V.Radhakrishnan(raki) 5:24 பிப on நவம்பர் 23, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Brambletonil Ungalukku yaar irukkirargal.,enadhu magal Irukkiral,. Naan ippodhu anguthan march 3 varai iruppen.
   T.V.Radhakrishnan

  • சத்யராஜ்குமார் 10:03 முப on திசெம்பர் 5, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   @raki: Did you get my email ?

 • சித்ரன் ரகுநாத் 6:25 am on September 18, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  ஜவ்வு 

  மன தைரியம் நிரம்பப் பெற்ற ஒரு ஹீரோயின், கடைந்தெடுத்த அயோக்கியனான வில்லன். இவர்களிக்கிடையே எப்போதும் கடும் பிஸினஸ் போட்டி நிலவுகிறது. இதன் பொருட்டு 24 மணி நேரமும் சதித்திட்டம் தீட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆட்டோவில் யாராவது ஒருவர் எந்நேரமும் அவசரமாய் ‘சீக்கிரமாப் போ” என்றபடி பயணித்துக் கொண்டேயிருக்கிறார்கள். சென்னை ECR ரோட்டில் கதாநாயகியை தாதா கும்பல் நான்கு நாளைக்கு தொடர்ந்து துரத்துகிறது. செல்போன்கள் ஒலித்துக் கொண்டேயிருக்க, யாராவது யாருடனாவது பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். வெட்டவெளியில் அவரவர் அடியாட்கள் சுற்றிலும் நிற்க கூலிங்கிளாஸ் முகத்துடன் வில்லனும் கதாநாயகியும் நேருக்கு நேர் சூடான சவால் விடுகிறார்கள். போலீஸூக்கும், வில்லனுக்கும் தெரியாமல் நல்லவர்கள் பாழடைந்த பங்களாவில் தலைமறைவாயிருக்கிறார்கள்.

  குடும்பத்தில் வாரத்துக்கு ஒருத்தர் வீதம் யாரையாவது போலீஸ் கைது செய்து இழுத்துப் போகிறது. கோர்ட்டில் வைத்து சாட்சிகள் கொலை செய்யப்படுகிறார்கள். பழி நல்லவர்கள் மேல் தவறாமல் விழுகிறது. குழந்தை கடத்தப்பட்டு மீட்கப்படுகிறது. தியாக உள்ளம் கொண்டவர்களுக்கு சோதனை மேல் சோதனை வந்து வாழ்க்கை நகருகிறது. திட்டமிட்டு என்கெளன்டர்கள் நடக்கின்றன. வில்லனின் குடும்பத்தில் இருக்கும் நல்லவன்(ள்) இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கிறான்(ள்). புதிய கேரக்டர்கள் வந்து கொஞ்சகாலம் காலந்தள்ளிவிட்டு சட்டென மறைந்து விடுகிறார்கள். எப்போதுமே யாராவது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்க வெளியே பதட்டத்துடன் ஒரு கும்பல் காத்திருக்கிறது. இக்கட்டான நேரத்தில் காட்சியை ஸ்டில் பண்ணி ‘தொடரும்’ போடுகிறார்கள்.

  இப்போதைக்கு இதுதான் 500 வாரம் ஓடும் மெகா ஸீரியல்களின் Trend. அழுகாச்சி ஸீரியல்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அட்வென்சர் ஸீரியல்களாக மாறி வருகின்றன என்று தெரிகிறது. தொடர்ந்து பார்த்து வந்தால் மன தைரியமும் பொறுமையும் நிச்சயம் வளரும்.

   
  • bsubra 11:18 முப on செப்ரெம்பர் 18, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Coetzee’இன் Disgrace-ல் படித்தது: Signs of old age are: equanimity, patience and kindness.

   அதுதான் டார்கெட் ஆடியன்ஸ் 😉

  • gowtham 12:15 முப on செப்ரெம்பர் 19, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   You’ve completed the story line so nicely without sketch board.You can predict the end of the story also. 🙂

  • சித்ரன் 7:48 முப on செப்ரெம்பர் 19, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Bala, You are right. ஆனால் இப்பெல்லாம் சின்னக் குழந்தைகள்தான் ஸீரியல் பார்த்து அம்மாக்களுக்கு கதை சொல்கின்றன.

   Gowtham, நல்லவர்கள் வாழ்வார்கள் என்பதுதானே எல்லா ஸீரியல்களின் முடிவும்!! Thanks for your comment!

  • ஆரியவர்தன் 6:49 முப on ஓகஸ்ட் 10, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   குட்டியாய் இரண்டேகால் பாராவில் மெகா சீரியல்களின் சாரம்ஸத்தை அடக்கிவிட்டீர்கள், அருமை

 • சித்ரன் ரகுநாத் 6:05 am on September 13, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  டோரா 

  சுட்டி டிவி யில் வரும் டோராவின் பயணங்கள் (Dora the Explorer) PreKG குழந்தைகளுக்கானது என்றாலும் நானும் என் 2ஆம் வகுப்பு படிக்கும் மகனுடன் உட்கார்ந்து பார்க்கிறேன். பெரிய கண்களையுடைய டோரா தன் ஒவ்வொரு பயணத்தின் மூலமும் குழந்தைகளுக்கு Interactivity என்பதை மிக எளிமையாய் கற்றுக்கொடுத்துவிடுகிறது. டோரா கேட்கிற கேள்விகளுக்கு என் மகனோ அல்லது டி.வி பார்க்கிற வேறு குழந்தைகளோ தன்னை அறியாமல் வாய்விட்டு பதில் சொல்லிக்கொண்டிருப்பதே இந்த ஷோவின் பெரிய வெற்றி எனலாம். டோராவுக்கு தமிழ் டப்பிங் குரல் கொடுக்கிற சிறுமியின் உற்சாகம் இன்னொரு ஈர்ப்பு.

  ஒரு காரியத்தை செய்து முடிக்க எப்படி திட்டமிடுவது, இடையில் எதிர்படுகிற சவால்களை எப்படி முறியடிப்பது, இலக்கை அடைந்தபின் அதை எப்படி கொண்டாடுவது என்று பல பெரிய விஷயங்களை டோரா போகிற போக்கில் சுட்டிகளுக்கு சொல்லித்தருகிறது.

  ஏழு கழுதை வயதானாலும் இந்த ப்ரோக்ராமை பார்க்கும்போது ஏனோ ஒரு சந்தோஷம் தொற்றிக்கொள்கிறது.

  Tom and Jerry – க்கு அடுத்தபடியாக.

   
  • muthulakshmi 7:43 முப on செப்ரெம்பர் 13, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   இது ஆங்கிலத்தில் nick டிவியில் வரும்போது ஸ்பானிஷ் சொல்லிக்கொடுப்பார்கள்…ஒன்று இரண்டு என்று எண்ணவேண்டிய இடம் மற்றும் எதிர்பதங்கள் வண்ணங்கள் என்று எளிமையாக ஸ்பானிஷ் வந்தது…நானும் என் மகளும் சேர்ந்து கத்துக்கொண்டிருந்தோம். 🙂

  • v.sudharson 3:49 முப on ஓகஸ்ட் 5, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   I like DORA very much.
   I seeing DORA with my father and mother.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி