பிலிம் காட்டுதல் 

தினம் அலுவலகத்துக்கு வந்தோம். வேலை செய்தோம். வீட்டுக்குப் போனோம் என்றில்லாமல் வார இறுதியில் சக ஊழியர்களுக்கு ஒரு திரைப்படம் காட்டினேன். ஒரு சின்ன ஏ.ஸி அறையில் சாதாரண CRT மானிட்டர், External DVD writer, டெஸ்க் டாப் ஸ்பீக்கர்கள் உபயத்தில் படம் திரையிடப்பட்டு வெள்ளிக் கிழமையின் மாலை உற்சாகமாய் இருந்தது.

காண்பிக்கப்பட்ட படம் 1971-ல் வெளிவந்த ஸ்பீல்பெர்க்கின் “Duel“. அமெரிக்காவின் ஏதோ ஒரு மலைப்பாதையில் தனியாக காரில் பயணிக்கும் ஒரு நடுத்தர வயது ஆசாமியை ஒரு ஹைவே சைக்கோ என்ன பாடு படுத்தினான் என்பதுதான் இருக்கை நுனியில் அமரவைக்கும் கதைக் கரு. இதை 17 பேர் ஆர்வமாய் அங்கே இங்கே நகராமல் பார்த்தார்கள்.

“பிலிம் காட்டுபவன்” என்கிற பெயர் அலுவலகத்தில் எனக்கு கிடைத்திருக்கிறது இப்போது.