Updates from பிப்ரவரி, 2011 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • சத்யராஜ்குமார் 6:41 pm on February 8, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  சிறுகதை. சிக்கல்கள். [3] 

  சிறுகதை ஒன்று எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் நூலகத்தில் புத்தகம் தேடுவதைப் போல நினைவடுக்குகளைப் புரட்டிப் போட்டு ஞாபக மிச்சங்களைத் தேடுவதே என் வழக்கம்.

  அடுத்து எழுதப் போகும் கதை காலையில் பார்த்த சுவாரஸ்யமான நிகழ்ச்சியாகவும் இருக்கலாம், அல்லது போன அத்தியாயத்தில் குறிப்பிட்ட நாய்க்குட்டி சம்பவம் போல முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் நடந்ததாகவும் இருக்கலாம்.

  சில விஷயங்களில் சுவாரஸ்யம் மட்டுமே இருக்கும். அதைச் சுற்றி கதையைப் பின்ன கொஞ்ச நேரம் தேவைப்படும்.

  ஆனால், வேறு சில சம்பவங்களோ அப்படியே சிறுகதையாகவே மனசுக்குள் ஒட்டிக் கொண்டிருக்கும். அப்படி ஒட்டிக் கொண்ட கதைகளுக்கு என்றுமே வீரியம் ஜாஸ்தி.

  குமுதத்தில் எழுதிய ‘காதல்’ என்ற சின்னஞ்சிறிய கதை என் மனசுக்குள் சிறுகதையாகவே போய் பதிந்து கொண்ட ஒன்றாகும்.

  ஒரு முறை வாகனத்துக்கு பெட்ரோல் போட்டு விட்டு காசு கொடுத்தபோது, பாக்கியாகக் கிடைத்த ரூபாய் நோட்டில் ‘சாந்தி ஐ லவ் யூ’ என்று கிறுக்கியிருந்தது.

  அந்தக் கிறுக்கலைப் பார்த்த கணமே ‘காதல்’ சிறுகதை மனதில் உதித்து, அப்படியே சிறுகதை வடிவிலேயே அந்த ரூபாய் நோட்டு என் மனசுக்குள் பதிவாகிக் கொண்டது.

  இது மாதிரி கதைகள் உடனே எழுதி விட வேண்டும் என்ற உந்துதலைத் தருபவை.

  அவசரமாய் யாராவது கதை கேட்டால் இப்படி சிறுகதையாகவே பதிந்த நிகழ்ச்சியைத் தேர்ந்தெடுத்து உடனே எழுதிக் கொடுத்து விடலாம். அவகாசம் நிறைய இருப்பின் சுவாரஸ்யம் என்று குறித்து வைக்கப்பட்ட சம்பவங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சாவகாசமாய் அதைச் சுற்றி கதை ஒன்று பின்னலாம்.

  மனசு வடிகட்டி வைத்திருக்கும் விஷயம் என்பதால் சந்தேகமில்லாமல் அது பிறரால் விரும்பிப் படிக்கப்படும்.

  போன பாராவுக்கு முந்தைய பாராவில் குறிப்பிட்ட ‘கதை பின்னுகிற’ சமாசாரம் பற்றி இனி சொல்கிறேன்.

  (தொடரும்)


  அனைத்து பகுதிகளையும் இங்கே படிக்கலாம்.


   
  • காஞ்சி ரகுராம் 12:19 முப on பிப்ரவரி 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   இந்தக் காதலை நான் முன்பே படித்திருந்தாலும், அதன் துருப்புச் சீட்டு இந்த நோட்டுச் சீட்டு என்பது சுவாரஸ்யம். (ஆமா, அந்த நோட்ட இன்னமும் பத்திரமா வெச்சிருக்கீங்களானா? 🙂

  • பத்மநாபன் 2:56 முப on பிப்ரவரி 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   அஹா சத்யா .. ருபாய் நோட்டில் உள்ளதை வைத்து கதைக்கு கரு பிடித்ததே சுவாரஸ்யம் … இந்த தொடர் முடிவதற்குள் நாங்களும் கதை எழுதிவிடுவோம் எனும் நம்பிக்கை வந்துள்ளது …

  • Navanithan 4:35 முப on மே 27, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   ungalin kadal sirukadai paditen. Miga miga arumai.

   anbudan
   Navani

  • திருவாரூர் பாபு 7:59 முப on திசெம்பர் 12, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   சத்யராஜ்குமார் வணக்கம். சரசுராம் தங்களைப் பற்றி சிலாகித்திருக்கிறார். இன்று அறிமுகமாகி இருக்கிறேன். இ நூல் முயற்சிக்கு வாழ்த்துக்கள். எனது சிறுகதை சுவர் பார்வைக்கு வைத்திருக்கிறீர்கள். நன்றி. இதைப் படிக்கும்போது அந்த கதையைநான் எழுதிய காலகட்டம் இனிமையாக மனதுக்குள் படர்கிறது. அநேகமாக 15 வருடங்கள் இருக்குமென்று நினைக்கிறேன். கல்கியில் பிரசுரமான சிறுகதை அது. கதை வெளியான சில நாட்களில் கல்கி இதழிலிருந்து எனக்கு ஒரு பிரம்மாண்ட கவர். பிரித்தால் உள்ளே கதையைப் பாராட்டி வாசக அன்பர்கள் எழுதியிருந்த விமர்சன கடிதங்கள் ஆசிரியர் திரு சீதா ரவி அவர்களின் வாழ்த்துக்களோடு. அன்று முழுவீச்சுடன் தொடங்கிய சிறுகதை போராட்டம் 960 சிறுகதைகள் – இன்று குங்குமத்தில் பிரசுரமாகி இருக்கும் அலை சிறுகதை 961 – கடந்து ஆயிரம் நோக்கி முழு வேகத்துடன் சென்று கொண்டிருக்கிறது. என்ன… அன்று வாரத்திற்கு பல்வேறு இதழ்களில் 50 சிறுகதைகள் பிரசுரமாகிக் கொண்டிருந்தன. இன்று அவை சுருங்கி ஐந்து அல்லது 6 என்கிற இலக்கத்துக்கு வந்து விட்டது வருந்தத்தக்கது. சிறுகதை என்று பார்த்தாலே மனசு பரபரக்கிறது. அந்த அற்புத வடிவம்தான் எனது கலை இலக்கியத்தை வளர்த்தது. என்னை நிருபராக்கியது. உதவி இயக்குநராக்கியது. விரைவில் வெளியாகவிருக்கும் கந்தா திரைப்படத்தின் இயக்குநராக்கியது. இந்தத் தலைமுறைக்கு சிறுகதை இலக்கியத்தின் வடிவத்தையும், சமுகத்தில் அதன் பங்களிப்பையும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். 2012ல் ஆயிரம் சிறுகதை என்கிற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். நண்பர்களின் வாழ்த்துக்களோடும், உந்துதலோடும்.அடிக்கடி பகிர்கிறேன். நன்றி. 94440 67427

   • சத்யராஜ்குமார் 7:47 பிப on திசெம்பர் 12, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

    திருவாரூர் பாபு, வணக்கம். உங்களை இணையத்தில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் விரைவில் ஆயிரம் சிறுகதைகளை (மூச்சிறைக்கிறது எனக்கு!) தொட்டு சாதனை புரிய வாழ்த்துக்கள். உங்கள் திரைப்படம் கந்தா வெற்றி பெறவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறுகதைகள் பத்திரிகைகளில் குறைந்திருந்தாலும், எழுதுவதிலும், படிப்பதிலும் ஆர்வமுள்ள ஏராளமானோர் இணையத்தில் இருக்கவே செய்கிறார்கள். என்னுடைய எழுத்து அனுபவங்களை கடந்த எட்டு வருடங்களாக பல்வேறு ரூபங்களில் இணையத்தில் பகிர்ந்து வந்துள்ளேன்.

 • சத்யராஜ்குமார் 7:59 pm on January 28, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  சிறுகதை. சிக்கல்கள். [2] 

  ஒரு சிறுகதை எழுத பேனா, பேப்பரை விட எனக்கு முதலில் தேவைப்படுவது விஷயம்.

  அதாவது எதைப் பற்றி எழுதப் போகிறோம் என்கிற தெளிவு.

  கதை எழுத வழி காட்டும் புத்தகங்களாகட்டும், எழுத்தாளர்களாகட்டும் கண்ணில் படும் சிறுகதைக்கான விஷயங்களை ஒரு டயரியில் குறித்து வைக்கச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள்.

  இல்லா விட்டால் அவை மறந்து போகும் என்பதே அந்த அறிவுரைக்கான காரணம்.

  எனக்கு அந்தப் பழக்கமே இல்லை.

  நான் மறந்து போகும் விஷயங்கள் கதைக்கு உதவாத விஷயங்களாகத்தான் இருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. சுவாரஸ்யமான விஷயங்களை எத்தனை நாளானாலும் என்னால் மறக்க முடியாது.

  நான் மூன்றாங்கிளாஸ் படிக்கையில் பள்ளியின் வேலிக்கருகில் அநாதையாய் விடப்பட்டிருந்த நாய்க்குட்டியை வகுப்பறைக்கு எடுத்து வந்து விட்டேன்.

  பெஞ்ச்சில் அதை என் பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்ள பேபி டீச்சர் அனுமதித்ததும், திருதிருவென விழித்துக் கொண்டு அந்த நாய்க்குட்டி வகுப்பறையையும், நாங்கள் அந்த நாய்க்குட்டியையும் வேடிக்கை பார்த்த காட்சியை இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை.

  அதில் ஒரு சிறுகதைக்கான சுவாரஸ்யம் நிச்சயம் இருக்கிறது.

  ஆகவே சிறுகதைக்கான விஷயத்தைத் தேடி நான் எங்கும் போவதில்லை. வருடக் கணக்காய் அவை மனதுக்குள் தூங்கிக் கொண்டிருக்கின்றன.

  (தொடரும்)


  அனைத்து பகுதிகளையும் இங்கே படிக்கலாம்.


   
  • செந்தில் 12:25 பிப on ஜனவரி 30, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   ஆழம்மான்ன கருத்து, அமர்க்கலமான ஆரம்பம்.

  • காஞ்சி ரகுராம் 12:13 முப on ஜனவரி 31, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   குறிப்பெடுக்கத் தேவையில்லை என்பது முற்றிலும் உண்மை. சுவாரஸ்ய நிகழ்ச்சியின் நீள அகல ஆழங்கள் மனதில் அப்படியே பதிந்துவிடும். அதிலும் ஒரு எழுதும் மனதிற்கு ப்ளூ-ப்ரிண்டாகவே பதிந்துவிடும். அவற்றை நெஞ்சம் ஒருகாலும் மறப்பதில்லை. ஆனால் இன்றைய அவசர வாழ்வில், அப்படிப் பதிந்திருப்பதையே நாம் மறக்கிறோம். அதற்காகவாவது, நிகழ்ச்சியின் தலைப்பையாவது குறிப்பெடுக்க வேண்டியிருக்கிறது என நான் நினைக்கிறேன்.

   • சத்யராஜ்குமார் 11:42 முப on ஜனவரி 31, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

    ரகுராம், ஏற்கெனவே குறிப்பிட்டபடி எழுத்தைப் பொறுத்தவரை என்னுடைய இயங்குமுறையைப் பற்றி எழுதுவதே நோக்கம். இது சரியா, தவறா என்பதல்ல. சம்பவங்களைப் பார்த்து நான் எழுத உட்காருவதில்லை. எழுத உட்காரும்போது சம்பவங்களை அசை போடுகிறேன். 🙂 

    • காஞ்சி ரகுராம் 12:23 முப on பிப்ரவரி 1, 2011 நிரந்தர பந்தம்

     ஹஹ்ஹா… நீங்கள் குறிப்பெடுக்காததையும், இதை எழுத அமர்ந்தபின்தான் அசை போட்டுக் குறிக்கிறீர்கள், இல்லையா? :). நல்ல சுவை. தொடருங்கள். நல்ல பின்னூட்டங்களும் தொடரும். அலசல்களும் வளரும். எழுதும் ஆசையும் ஊற்றெடுக்கும் 🙂

  • PADMANABAN 1:12 முப on ஜனவரி 31, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நிண்ட நாட்களாகி விட்டது …புத்தாண்டு தொடங்கி அனைத்து சிறப்பு நாட்களுக்கும் வாழ்த்துகள் சத்யா ….

   எவ்வளவு கதை படித்தாலும் ..ஓரு கதை எழுதுவது மிக கடினமான விஷயமாகவே இருக்கிறது …கரு தேர்ந்து எடுத்து , முன் வரி அமைத்து ..நடை கொடுத்து, முடித்து . தலைப்பிட்டு அனுப்புவது என்பது ஓரு பிரசவ உணர்வு ஆகிவிடுகிறது …. அதற்க்கெல்லாம் தனியாக ஓரு சுழி வேண்டும் என ஒதுங்கியாயிற்று…

   நீங்கள் எழுதப்போகும் அனுபவப்பாடம், கதை எழுதுவதற்கான மீண்டும் ஆவலைத் தூண்டுகிறது .. நன்றி …தொடருங்கள்…

   • சத்யராஜ்குமார் 11:43 முப on ஜனவரி 31, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

    நன்றி பத்மனாபன். உங்களூக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.

    //அதற்கெல்லாம் தனியாக ஓரு சுழி வேண்டும் என ஒதுங்கியாயிற்று…//

    அப்படியெல்லாம் இல்லைங்க. எல்லாமே பயிற்சிதான்.

  • ila 9:21 முப on ஜனவரி 31, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   குறிப்பெடுத்துக்குறது நல்லதுன்னு நினைக்கிறேங்க. நிறைய சுவாரஸ்யமான விசயங்களை சிலவற்றை மறந்து போயிருவோம். மறந்து போறது மனுச இயல்புதானுங்களே. அப்படி மறந்து போனதிலேயிருந்தும் கூட நல்ல கதைகள் கிடைக்கலாமே 🙂

   • சத்யராஜ்குமார் 11:50 முப on ஜனவரி 31, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

    இளா, கருத்துக்கு நன்றி. உங்களுக்கும் ரகுராமிற்கு சொன்ன பதில்தான். இன்னொரு கோணத்தையும் பாருங்கள். மேலே நான் குறிப்பிட்ட மூணாங்கிளாஸ் நாய்க்குட்டி விஷயத்தை மனதைத்தவிர வேறு எங்கே குறித்து வைத்திருக்க முடியும்? ஆகவே நான் அதை செய்வதில்லை. இது போன்ற ஒப்பீடுகள் பின்னூட்டங்களில் எழ வேண்டும் என விரும்பினேன். எழுப்பியதற்கு நன்றி! 🙂

 • சத்யராஜ்குமார் 5:06 pm on July 6, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: , e-Zine, , short stories,   

  ஐ போனும், குமுதமும் 

  எண்பதுகளில் எழுத ஆரம்பித்த போது பத்திரிகைகளுக்கு கதை அனுப்பி விட்டு காத்திருந்ததுதான் ஞாபகம் வந்தது.

  ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் அப்ளிகேஷன் ஸ்டோரும் கிட்டத்தட்ட குமுதம், விகடன் மாதிரி ஒரு பத்திரிகை ஆபிஸ்தான். உங்கள் படைப்புத் திறமையை காட்ட முயலும் அதே சமயத்தில் நிறுவனத்தின் எழுதப்படாத சட்ட திட்டங்களுக்குள் அவை அடங்கும் வண்ணம் உங்கள் படைப்பை ஒரு கட்டுக்குள் வடிவமைக்க வேண்டிய கட்டாயமும் உண்டு.

  இல்லையேல் பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம் என்பது போல் “Application Rejected” என்று படாரென்று திருப்பியடிக்கும் சாத்தியங்கள் நிறையவே உண்டு.

  eNool-ஐ போன வாரம் ஆப்பிள் ஸ்டோரில் சமர்ப்பித்து விட்டு காத்திருந்த போது – முதல் முதலாய் குமுதத்துக்கு ஒரு சிறுகதை எழுதி அனுப்பியது போலத்தான் மனசுக்குள் ஒரு குறுகுறுப்பு இருந்தது. குமுதம் திருப்பி அனுப்பியது போல இங்கு நிகழவில்லை. eNool அங்கீகரிக்கப்பட்டு விட்டது. ஆப்பிள் ஸ்டோரில் இன்று முதல் கிடைக்கும்.

  ஆப்பிள் ஒரு ஐபோன் அப்ளிகேஷனை நிராகரிக்கும் சாத்தியங்கள் என்னென்னெ? பல அறிந்த காரணங்களும், சிற்சில அறியாத காரணங்களும் உள்ளன.

  நானறிந்த மூன்று முக்கிய காரணங்கள் கீழே.

  • HIG எனப்படும் ஹ்யூமன் இண்டர்பேஸ் கைடன்ஸ்-ஐ மீறி எழுதப்படும் அப்ப்ளிகேஷன்கள்தான் நிராகரிப்புக்கு தலையாய காரணம் என சொல்லப்படுகிறது. ஒரு முறை என் சுவேகா டீலக்ஸ் மொபெட்டில் ஆக்ஸிலேட்டர் கேபிள் அறுந்து போய் விட, மெக்கானிக்கிடம் போக சோம்பல் பட்டு முன் பக்க ப்ரேக்கின் கேபிள் ஒயரை கார்ப்புரேட்டரில் மாட்டி விட்டு ஓட்டிச் செல்ல ஆரம்பித்தேன். முன் பிரேக் பிடித்தால் வண்டி ஓடும். பின் பக்க பிரேக்கை பிடித்தால் நிற்கும். இது பக்கா HIG அத்து மீறல். புதிதாய் யாராவது அந்த மொபெட்டை எடுத்து ஓட்டினால் பரலோகப் ப்ராப்தி நிச்சயம். ஆகவே ஐபோனில் நீங்கள் அப்ளிகேஷன் எழுதும்போது, கேன்சல் செய்வதற்காக ஆப்பிள் உருவாக்கிய இந்த உருவத்தை ஒரு படத்தையோ, கோப்பையோ அழிப்பதற்கான பட்டனில் வைத்தால் நிராகரிப்பு நிச்சயம். டெலிட் செய்வதற்கான அடையாளப்படம் இதுவாகும்.
  • அதற்கடுத்தபடியாக சரியான பிழை செய்தி தராத அப்ளிகேஷன்களும் வெகுவாக நிராகரிக்கப்படுகிறது. உதாரணமாக, உங்கள் அப்ளிகேஷன் செயல்பட இணைய இணைப்பு தேவைப்படும் பட்சத்தில், இணைய இணைப்பு இல்லாத இடங்களில் பிழை செய்தி தர வேண்டும் என ஆப்பிள் எதிர்பார்க்கிறது.
  • “நான் சொல்றதைத்தான் செய்வேன். செய்றதைத்தான் சொல்லுவேன்” என்ற ரஜினிகாந்த் பன்ச் டயலாக் ஒவ்வொரு ஐபோன் டெவெலப்பரும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். அப்ளிகேஷன் என்ன செய்யும் என்பதை நீங்கள் விவரித்திருக்கிற படியே அது செயல் பட வேண்டும். டிஸ்க்ரிப்ஷனோடு ஒத்துப் போகாத அப்ளிகேஷன்களும் பெருமளவில் நிராகரிப்புக்கு இலக்காகின்றன.

  போகப் போக இன்னும் பல அனுபவங்கள் கிடைக்குமென நினைக்கிறேன். எப்படி என் சிறுகதை அனுபவங்களை பல இடங்களிலும் பகிர்ந்து வந்தேனோ, அப்படியே இதையும் அவ்வப்போது அவசியம் பகிர்வேன்.

   
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி