சிறுகதை. சிக்கல்கள். [4]
விஷயம் ரெடி. அடுத்தது என்ன?
பாத்திரத் தேர்வு!
எடுத்துக் கொண்ட விஷயத்தை எந்த மாதிரியான பாத்திரங்கள் மூலமாக கொண்டு செல்வது? பல சமயம் விஷயமே ஒரு சில கதாபாத்திரங்களை தீர்மானித்து விடும்.
உரையாடல் சிறுகதைப் போட்டியில் தேர்வாகிய மைய விலக்கு என்ற சிறுகதையை எடுத்துக் கொண்டால், அமெரிக்க வாழ்க்கைக்கு ஒட்டாத பெரியவர்கள்தான் கதையின் விஷயம்.
ஆக கதைக்கு ஒரு வயதான கேரக்டர் நிச்சயம் தேவை. அது அப்பாவா, அம்மாவா என்பது இந்தப் பின்னணியில் என்ன மாதிரி கதை எழுதப் போகிறேன் என்பதைப் பொறுத்து முடிவு செய்யப்படும்.

சில சமயம் பாத்திரத் தேர்வுக்காக யோசிக்கும்போதே அழகான கதையும் தட்டுப்படும்.
அப்படித்தான் மைய விலக்கு கதைக்காக சென்னை அப்பாவையும், அமெரிக்கா மகனையும் பாத்திரங்களாக முடிவு செய்த போது, அந்தப் பிரச்சனைக்கான புதிய கோணம் தட்டுப்பட்டது.
பாத்திரங்கள் முடிந்த அளவு குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்வேன்.
தேவைக்கு அதிகமான கதாபாத்திரங்கள் சிறுகதையில் இருந்தால் குழப்பமும், அலுப்பும் மிஞ்சுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சில சமயம் துணை கதாபாத்திரங்கள் கதையின் போக்கிற்காகத் தேவைப்படலாம்.
உதாரணமாக மைய விலக்கு கதையில் அவனின் மனைவியும், குழந்தைகளும்.
இந்த கதாபாத்திரங்கள் சம்பந்தமாய் நான் கையாளும் இன்னொரு முக்கியமான நுட்பம் பற்றி அவசியம் சொல்ல வேண்டும்.
(தொடரும்)
அனைத்து பகுதிகளையும் இங்கே படிக்கலாம்.
ப.செல்வக்குமார் 5:32 முப on மார்ச் 4, 2011 நிரந்தர பந்தம் |
உங்களின் நான்கு பதிவுகளையும் படித்தேன் அண்ணா. எனக்குப் பயனுள்ளதாக இருக்கிறது .. அடுத்த பதிவிற்காகக் காத்திருக்கிறேன்..
http://www.selvakathaikal.blogspot.com
சத்யராஜ்குமார் 9:32 முப on மார்ச் 11, 2011 நிரந்தர பந்தம் |
நன்றி!