Updates from ஜனவரி, 2011 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • சத்யராஜ்குமார் 10:15 pm on January 23, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  சிறுகதை. சிக்கல்கள். [1] 

  சிறுகதைகள் எழுதுவது கஷ்டம் என்று எழுத்தாளர் சுஜாதா முதல் எழுத்தாளர் சாதா வரை எல்லோரும் சொல்லி விட்டார்கள். உண்மையில் கஷ்டமா என்றால் இல்லை, ஓரளவு சுலபம். நல்ல சிறுகதைகள் எழுதுவது மட்டுமே கஷ்டம்.

  எழுதுவது எப்படி என்று ஏராளமான கட்டுரைகள் வந்து விட்டன. வலைப்பதிவுகளிலும், வலைத்தளங்களிலும் பலரும் அவற்றைத் தொகுத்தும், சமைத்தும் போட்டு விட்டனர்.

  எல்லாம் படித்த பின்னும் குழப்பமாயிருக்கிறதென்று எனக்கு எப்போதாவது வரும் ஒரு சில மின்னஞ்சல்கள் சொல்கின்றன. எப்படி சிறுகதை எழுதுவதென்று அரைத்த மாவை அரைக்க இந்தக் கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கவில்லை.

  சென்ற வருடம் எழுத்தாளர் திரு. ஜெயமோகன் வாஷிங்டன் டி.சி வந்த போது அவர் கதை எழுதும் முறை குறித்து சுருக்கமாய் சில நிமிஷம் பேசி அறிந்து கொள்ள முடிந்தது.

  அதற்கும் நான் எழுதும் முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. அவருடைய தளம் வேறு, வீச்சு வேறு, பிராபல்யம் வேறு, இலக்குகள் வேறு என்பது வேறு விஷயம். ஆனால் அந்த சில நிமிஷ உரையாடல் இதை எழுதுவதற்கான யோசனையை அளித்தது.

  அதாவது பத்திருபது ஆண்டுகளுக்கு முன்னால் குமுதம், விகடன், கல்கி போன்ற பிரபல பத்திரிகைகளில் சுமார் இருநூறு சிறுகதைகள் எழுத நான் பயன்படுத்திய நுட்பங்கள், வழிமுறைகள். கதைகளுக்கான என்னுடைய இண்ட்டர்னல் பிராசசிங் ப்ளோ பற்றி விலாவாரியாக எழுத உத்தேசம்.

  இலக்கியத்தில் கரை கண்டவர்கள் நிரம்பி வழியும் இணையம் இது. அவர்களைப் போன்ற விற்பன்னர்களுக்கான கட்டுரை அல்ல. சிறுகதை என்னும் வடிவம் தமிழில் இறந்து விட்டதாக சொல்பவர்களும் உள்ளனர். அவர்களுக்கானதும் அல்ல.

  அவ்வப்போது இணையத்தில் சிறுகதைப் போட்டிகள் அறிவிக்கப்படும்போது ஒரு கூட்டம் உற்சாகத்தோடு கை தட்டி வரவேற்கிறது. எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடன் பங்கு பெறுகிறது. ஐம்பது, நூறு சிறுகதைகளை ஆவலுடன் படித்து விமர்சனம் எழுதவும் சிலரால் முடிகிறது.

  இந்த தமிழ் பாப் சிறுகதை வடிவம் உச்சந்தலையில் சுடப்பட்டும் எப்படியோ தப்பிப் பிழைத்து சற்றே சுவாசித்துக் கொண்டிருக்கிறது. இன்னமும் அதற்கு பிராணவாயு அளிப்பவர்களுக்காக இதை எழுதுகிறேன்.

  பல எழுத்தாளர்களின் சின்னச் சின்ன அனுபவங்களை பேட்டிகளாய், துணுக்குகளாய் படித்த போதுதான் எனக்குள் சில கற்பனை சுவிட்சுகள் தட்டி விடப்பட்டன.

  அதே மாதிரி இந்த மின்னல் குறிப்புகள் ஆர்வமுள்ள சொற்பம் பேரிடம் சில சுவிட்சுகளைத் தட்டி விடக் கூடும்.

  [ தொடரும் ]


  அனைத்து பகுதிகளையும் இங்கே படிக்கலாம்.


   
 • சத்யராஜ்குமார் 9:38 pm on October 21, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: கல்கி, kalki   

  கல்கி 24.10.2010 தேதியிட்ட இதழில் வெளியா… 

  கல்கி 24.10.2010 தேதியிட்ட இதழில் வெளியான எனது ராட்சஸம் சிறுகதை குறித்து ஹொசூரிலிருந்து பாலுசாமி எழுதிய கடிதம்…

  “ராட்சஸம்” படித்தேன். கதையின் எந்த அம்சத்தை முதலில் எடுத்துக்கொண்டு பேசுவது என்று தெரியவில்லை. அத்தனையும் உயிரோட்டமான பதிவுகள். இல்லை இல்லை நிகழ்வுகள். எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் மெசேஜின் சமூக நாட்டம், அதை சொல்லியிருக்கும் இயங்கியல் நடை, ஆங்காங்கே சில மருத்துவக் குறிப்புகள், உழைக்கும் வர்க்கத்திற்கே உரிய அடையாளமாய் அந்த பொன்னம்மாக் கிழவியின் உயர்ந்த பண்பை மிக இயல்பாய் சொல்லியிருப்பது, வால் மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் இயங்கு முறை பிசகாமல் கண் முன்னால் கொண்டு வந்தது, எல்லாவற்றிற்கும் மேலாக பொன்னாம்மா போன்ற கோடிக்கணக்கானவர்களின் சிறு தொழிலை விழுங்கி மேலாதிக்கம் செய்யும் ராட்சஸ பன்னாட்டு நிறுவனங்களை தோலுரித்திருப்பது என, இது ஒரு சிறுகதை வடிவமாக இருந்தாலும் ஒரு தலைமுறை நிகழ் போக்காகவும், படிப்பவரை அந்தச் சூழலோடும், கதைக்கு அப்பால் சொல்லி வரும் சம்பவங்களில் மூழ்கடித்து வெளி வர வைத்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் இதுதான் உழைக்கும் மக்களின் குரல். வாழ்த்துக்கள்!

  ராட்சஸம் படிக்க…
  http://kalkionline.com-ல் இலவசமாக பதிவு செய்து கொண்டு –
  http://kalkionline.com/kalki/2010/oct/24102010/kalki0902.php என்னும்
  சுட்டிக்கு செல்லவும்.

  பின் இணைப்பு: கல்கி ஆன் லைனில் சென்று படிக்க இயலவில்லை என சில நண்பர்கள் தெரிவித்தனர். என்னுடைய தளத்திலும் இக்கதை படிக்கக் கிடைக்கும். சுட்டி: http://www.sathyarajkumar.com/monopoly

  சத்யராஜ்குமார்

   
  • BALAJI 10:43 பிப on ஒக்ரோபர் 21, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   உங்கள் கதை மிக அருமை இப்படியும் நடக்குமா என அதிர்ந்தேன்
   வாழ்த்துக்கள்

  • Venkat 6:43 முப on ஒக்ரோபர் 23, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   மனதைக் குலுக்கிப் போட்டது இக்கதை. பாவம் பொன்னம்மா பாட்டி. சாப்பிடும் கற்காய்களைக் கூட விட்டு வைக்கவில்லை இவர்கள். தில்லியில் கூட தர்பூசணி பழங்களுக்கு சிவப்பு திரவங்களை இன்ஜெக்க்ஷன் மூலம் செலுத்தி மேலும் சிவப்பாக்குகிறார்கள்.

  • REKHA RAGHAVAN 6:51 முப on ஒக்ரோபர் 23, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அருமையான கதைக் களம். சரளமான நடை. மொத்தத்தில் சுபர்ப்.

   ரேகா ராகவன்

  • பத்மா அர்விந்த் 7:42 முப on ஒக்ரோபர் 23, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   அருமை. ஆனால் முடிவு ரொம்பவே சினிமாத்தனமாக இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு தொகையை கொடுத்து வாங்கிவிடுவதாக சொல்லி இருந்தால் நடைமுறையை ஒத்து இருக்குமோ என்னவோ.

   • சத்யராஜ்குமார் 7:26 முப on ஒக்ரோபர் 24, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

    நன்றி. இங்கே அமெரிக்காவில் கூட ஜிஎம்ஓ விதைகள் சேகரிக்கப்படாமல் கண்காணிக்க உளவு ஏஜண்ட்கள் நியமிக்கப்பட்டு, விவசாயிகள் நிறுவனங்களால் சட்டரீதியான மிரட்டலுக்கு உட்படுத்தப்படுவதாகப் படித்தேன். அதனடிப்படையிலேயே இது போன்ற நிகழ்ச்சி அமைத்தேன்.

    • சுப இராமனாதன் 4:30 முப on ஒக்ரோபர் 27, 2010 நிரந்தர பந்தம்

     Food Inc என்ற 2008 ஆவணப்படத்தில் Monsanto போன்ற நிறுவனங்கள் செய்யும் அடாவடித்தனங்கள் நன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

     சில வருடங்களுக்கு முன் நம்மூர் வேப்பமரம் சார் பொருட்களுக்கும், மஞ்சளுக்கும் இதே Monsanto காப்புரிமை பெற முயன்றது குறிப்பிடத்தக்கது.

     நாம் கவனிக்கும் ஒன்றை (கவனித்து, எளிதில் மறக்கும் ஒன்றை), குறிப்பெடுத்து, கதையாக்கம் செய்வதில் சத்யராஜ்குமாருக்கு நிகரிலர்!

     All-Mart பெயர் – நல்ல தேர்வு.

     நல்லதொரு கதை எழுதியமைக்கும், அது பிரசுரம் ஆகியதற்கும் வாழ்த்துகள்.

  • Vijay 8:50 முப on ஒக்ரோபர் 23, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நெஞ்சை தொட்ட கதை.

  • செந்தில் 7:40 பிப on ஒக்ரோபர் 23, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   வாழ்த்துக்கள் சத்யா. சுட்டியில் சென்று படிக்க முடியவில்லை (story link promting for login, though already logged in). படிக்க ஆவல், உதவி தேவை.

  • பத்மா அர்விந்த் 10:37 முப on ஒக்ரோபர் 24, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Saccharin பற்றீய வழக்கை சொல்கிறீர்களா? வருடங்கள் பல கடந்து விவசாயிக்கு சாதகமாகவே முடிந்தது. நிறைய பணபல நிறுவனங்கள் தோற்றன. நடட் ஈடு கொடுக்க வழக்கின் செலவு உட்பட தீர்ப்பாயிற்று.

 • சத்யராஜ்குமார் 9:18 pm on October 7, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  வெற்றிடம் 

  சென்ற பதிவில் வாக்களித்தபடி கடந்த வாரம் குமுதத்தில் வெளியான சிறுகதையை எனது தளத்தில் வெளியிட்டுள்ளேன்.

  ஓரிரு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கா வந்திருந்த என் நண்பரின் விவசாயி அப்பா அதிகம் படித்திரா விட்டாலும் – தன்னம்பிக்கை மிகுந்த, தனக்கென தீவிர கருத்துக்களைக் கொண்டிருந்த மிக சுவாரஸ்யமான மனிதராக இருந்தார். அப்போதே அவரை மையமாக வைத்து ஒரு சிறுகதை எழுத வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்.

  சென்ற மாதம் இந்தியா சென்றிருந்தபோது குமுதத்தில் கிராமம் சார்ந்த கதைகள் வந்து கொண்டிருக்கவே, முன்னர் நான் மனதுக்குள் யோசித்து வைத்திருந்த இக்கதை எழுத்து வடிவம் பெற்று அச்சாகும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

  கதையைப் படிக்க இங்கே செல்லவும்.

   
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி