Updates from பிப்ரவரி, 2015 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • சத்யராஜ்குமார் 7:53 pm on February 13, 2015 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  காதலர் தினம் aka Valentine’s day 

  நியூஜெர்ஸி சிந்தனை வட்டம் பொறுப்பாளரும், நிறுவனருமான திரு. ஆனந்த் முருகானந்தம் பற்றி ஏற்கெனவே இங்கே எழுதியிருக்கிறேன். அவர் வேதியியல் ஆய்வாளர் என்றாலும், தமிழ் இலக்கியத்தின் மேல் தீராக் காதல் கொண்டு அலசி ஆய்ந்து வருபவர். பறவைகளை நேசிப்பவர். அவர் வீட்டுக்குப் போனால் புஷ்நெல் பினாகுலர் எடுத்து வைத்து, பின் கட்டுத் தோட்டத்தை நோக்கி நான் உட்கார்ந்து விடுவேன். மரங்களடர்ந்த தோட்டம் பறவைகள் சரணாலயம்.

  அவருடைய மின்னஞ்சல்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை. ஒரு புதுப் பார்வை தாங்கி வருபவை. இந்த வேலண்ட்டைன்ஸ் டே-யை ஒட்டி அவர் அனுப்பிய மின்னஞ்சலை அப்படியே கீழே தந்துள்ளேன்.

  காதலர் தின வாழ்த்துகள்!

   

  When Valentine Day is taken positively, it describes true love between partners. On this day, it is interesting to think about  a bird called “Andril” in Tamil. According to classical literature, it is believed that the male and female Andril birds live together for long time; for a life time. Which bird is it? Can we see it today? Yes,  but there are at least three species mentioned in the internet.
  1. Demoiselle Crane:
  In Rajasthan the bird is called Koonj. It is derived from Kraunch (sanskrit). There is a legend connecting Kraunch bird to Valmiki and origin of Ramayana. The bird is described in wikipedia-

  It is called “saras” in Hindi. In Gujarat, in some communities, newly wed couple are asked to see a pair of these birds as  part of their marriage ritual. The birds migrate in large number to Bharatpur Sanctuary in Rajasthan.

  There is an interesting video of the dance of this bird to attract the partner!
  3. Ibis:
  There are references in Tamil calling Ibis or Glossy Ibis(Vellai or Karuppu Arival Mookkan) as Andril.
  The wikipedia reference-
  The references in Tamil-
  So which one is really the Andril?  We may have to do some  research by studying  the behavior described in Tamil literature and compare with the ornithological data. Nevertheless it appears to be an apt bird for the occasion.
  – Anand Muruganandam, NJ
   
 • காஞ்சி ரகுராம் 6:37 am on October 18, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: அமேசான், அறிவியல், கண்டுபிடிப்பு, , காற்று, காற்றுபை, செல்ஃபோன், ஜெஃப் பெஜோஸ், மொபைல் ஃபோன், ஸ்மார்ட் ஃபோன்   

  காற்றடைத்த பையடா! 

  பேசும் வசதியுடன் மட்டும் பிறந்த செல்போன், இன்று பல வசதிகளைக் கொண்டு ஸ்மார்ட் ஃபோனாக வளர்ந்திருக்கிறது. ஆயிரங்கள் கொடுத்து வாங்கிய ஸ்மார்ட் போன் கீழே விழுந்து உடைந்தால் நம் மனதும் சுக்கு நூறாகாதா?

  கொஞ்சம் பழைய செய்திதான். என்றாலும் சொல்கிறேன். நம் ஸ்மார்ட் போனைப் பாதுகாக்க, அதில் காற்றுப் பைகளைப் பொருத்தலாம் என ஓர் அசாத்தியமான அல்லது அபத்தமான(!) யோசனையை மொழிந்து அதற்குக் காப்புரிமையையும் பெற்று விட்டார் அமேசான் நிறுவனத்தின் CEO ஜெஃப் பெஜோஸ்.

  இந்தப் பைகள் காரில் பொருத்தப்படும் ஸேஃப்டி ஏர் பேக் பொன்றவைதான். ஆனால் அவை நம்மைக் காக்கவே அன்றி காரைக் காக்க அல்ல. இவர் என்ன இதை உல்டா பண்ணியிருக்கிறார் என்று அந்தக் காப்புரிமையைப் படித்தால் மண்டை கிறுகிறுக்கிறது.

  கார் எதனுடனாவது மோதும் போது பைகளில் காற்றை நிரப்பி விடலாம். ஆனால் இங்கே போன் தரையில் மோதுவதற்கு முன்பே காற்றை நிரப்ப வேண்டும். அதற்கான வழிகளைப்  பட்டியலிடுகிறார்.

  கைரோஸ் கோப் (இதன் உதவியால்தான், iPhone போன்றவற்றை நாம் பக்கவாட்டில் திருப்பும் போது படங்களும் திரும்புகின்றன), கேமரா, புற ஊதா கதிர்கள், ராடார்… இவற்றில் ஓரிரண்டு அல்லது அனைத்தையும் பயன்படுத்தி, போனின் நகர்ச்சி, கோணம், பிற பொருள்களிடமிருந்து அதன் தூரம்… அனைத்தையும் கணக்கிட்டு “ஐயோ, நான் இப்போது விழுந்து கொண்டிருக்கிறேன்” என்று போனை உணரச் செய்ய வேண்டுமாம். (இப்பவே கண்ணைக் கட்டுதா?!)

  உடையப் போகும் போனைக் காக்க மூன்று வழிகளைக் குறிப்பிடுகிறார்.

  1. அழுத்தப்பட்ட காற்று அல்லது கார்பன் டையாக்சைடு மூலம் காற்றுப் பைகளை நிரப்பி மோதலைத் தவிர்க்கலாம்.

  2. ஸ்பிரிங்குகள் வெளிப்பட்டு போனுக்கு அடிபடாமல் காக்கலாம்.

  3. காஸ் ப்ரொபல்ஷன் மூலம் போனை மெதுவாக பத்திரமாக தரையிறங்க வைக்கலாம்.

  சில CEO-க்கள் பொழுது போகாமல் இது மாதிரி எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் HP-யின் CEO பர்சனல் கம்ப்யூட்டர் (PC)-களின் சகாப்தம் முடிந்து விட்டதாகவும் அதனால் தன் கம்பெனியில் அதன் தயாரிப்பை நிறுத்தப் போவதாகவும் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

  உலகெங்கும் தேவைக்கு அதிகமான PC-க்கள் ஏற்கனவே வாங்கப்பட்டு விட்ட நிலையில், மடிக் கணினிகளும் கணிசமாக சந்தையை ஆக்கிரமித்துவிட்ட நிலையில், இவர் கடையில் PC-க்களின் விற்பனை படுத்து விட்டது. அதனால் சகாப்தம் முடிந்து விட்டதாகக் கூறி, Tablet கம்ப்யூட்டர்களின் விற்பனையை முடுக்கி விடப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

  நாளை இந்த Tablet-களையும் காற்றுப் பைகள் கட்டிக் கொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  இவையெல்லாம் நம் கையிருப்பைக் கரைத்து, அவர்களின் கஜானாக்களை பத்மநாப ஸ்வாமி அறைகளாக்கும் தந்திரங்களின்றி வேறென்ன?

   
 • சத்யராஜ்குமார் 8:55 pm on August 28, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: கிரந்தம்   

  கிரந்தம் தவிர்! 

  சமீபத்தில் கிரந்தம் தவிர்த்து எழுதுவது குறித்த விவாதத்தை ட்விட்டரில் படிக்க நேர்ந்தது. ஒரு புனைவு எழுத்தாளனாக எழுத்தில் முற்றிலுமாக கிரந்தம் தவிர்ப்பது இயலாது என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதற்கு கிரந்த வார்த்தைகள் சொற்கள் முதலில் சமூகத்திலிருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும். இது ஒரு பிடி இருபத்தியிரண்டு நிலைமை.

  ஆனால், நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முந்தைய செய்தித்தாளில் சுருட்டித் தரப்பட்ட சுண்டலோ, பஜ்ஜியோ சாப்பிட நேர்ந்தால் – அப்போதிருந்த எத்தனையோ கிரந்தச் சொற்கள் இப்போது வழக்கொழிந்து போயிருப்பதை உணரலாம். எப்படி இது நிகழ்ந்தது? இது குறித்த ப்ரக்ஞை சிந்தனை மிகுந்தவர்கள் பேசும்போதும், எழுதும்போதும் வடிகட்டிய தமிழ் வார்த்தைகளை சொற்களை தொடர்ந்து உபயோகித்து பயன்படுத்தி வந்திருக்க வேண்டும்.

  ஆக முடிந்த வரை கிரந்தம் தவிர்ப்பதன் மூலம் ஓரளவு தமிழ் சுத்திகரிக்க்ப்படும் வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. ஆனால் கிரந்தம் தவிர்ப்பதில் உள்ள பிரதான தலையாய சிக்கல், தகுந்த மாற்றுச் சொற்களைப் பிரயோகித்து பயன்படுத்தி எழுதும் அளவு மொழி வளம் எல்லோருக்கும் இல்லை என்பதே ஆகும். அதற்குக் காரணம் மொழி அருவியாய்க் கொட்டும் சங்க இலக்கிய தமிழ் பொக்கிஷங்களை கருவூலங்களை ஆற அமர படித்து ரசிக்க தற்கால சந்ததியினர்க்கு பொறுமையில்லை அல்லது நேரமில்லை.

  இது தமிழ் படிக்க மட்டுமில்லை; எல்லா துறைகளுக்கும் பொருந்தும். அதனால்தான் இணையத்தில் இன்று எல்லாமே கூட்டு முயற்சியில் நடைபெறுகின்றன. எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன். உனக்குத் தெரிந்ததை நீ சொல்லு. இணைந்து அறிவு பெறுவோம். இணைந்து செயல்படுவோம்.

  அப்படித்தான் @kryes கிரந்தம் தவிர்க்க ட்விட்டரில் தினம் ஒரு சொல்லை இட ஆரம்பித்தார். படிக்க சுவாரஸ்யமாக ஆர்வமூட்டுவதாக இருந்தது. ஆனாலும் அவை ட்விட்டரின் நேரச் சுழலில் புதைந்து மறைந்து விடுவதைப் பார்த்து மெலிதான கவலை பிறந்தது.

  நினைத்த போது ஒரு கிரந்தச் சொல்லை உள்ளிட்டு அதற்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறியும் வசதி வேண்டும் என எண்ணினேன். அப்படி ஒன்று ஏற்கெனவே இருக்கிறதா என்று தேடிப்பார்த்துக் கிடைக்காததால், நாள்தோறும் அலுவலகத்துக்கு பஸ்ஸில் பேருந்தில் செல்லும் நேரத்தில் இந்த எளிய கருவியை உருவாக்கி – புல்வெளி.காம் தளத்தில் வெளியிட்டுள்ளேன்.

  @kryes இக்கருவி குறித்து பல யோசனைகளை சிந்தனைகளை வழங்கியுள்ளார். தினம் ஒரு சொல்லை இதில் இணைக்க தான் உதவ முடியுமென நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். @raghuji தளத்துக்கான தோற்றம், வடிவமைப்பில் தனது உதவிக்கரம் நீட்டினார்.

  தளத்தில் இதுகாறும் இல்லாத சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் உங்களுக்குத் தெரியுமெனில் அதை நீங்களே இணைக்கவும் வழியுண்டு. அடுத்த முறை நீங்கள் ஒரு பதிவு எழுதும்போது கிரந்த வார்த்தை உங்கள் எழுத்தில் வந்து விழுந்தால் அதற்கு மாற்று உண்டா என இங்கே ஒரு எட்டு வந்து பார்க்கலாம்.

   
  • TPKD / TBCD (@TPKD_) 10:03 பிப on ஓகஸ்ட் 28, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   அருமையான முயற்சி..பாராட்டுகள்…வாழ்த்துகள்.

   இது கிரந்தம் இல்லாத வடமொழிச்சொற்களுக்கும் நீட்டித்தால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன் :-))

  • amas32 10:43 பிப on ஓகஸ்ட் 28, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்!
   amas32

  • PADMANABAN 11:37 பிப on ஓகஸ்ட் 28, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நல்ல பதிவு சத்யா…பெயர்ச் சொல் தவிர மற்ற இடங்களில் கிரந்தம் தவிர்க்கலாம் …. முயற்சி திரு வினையாக்கும்… கிரந்தம் தாண்டி விடலாம் அடுத்து ஆங்கில கலப்புக்கு என்ன செய்வது…..

  • Ravi 12:03 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நல்ல முயற்சி. நானும் சில சொற்களைச் சேர்க்கத் தொடங்கி இருக்கிறேன்.

  • Balaraman 1:20 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   மிகவும் நல்ல முயற்சி! 🙂

   இந்தப் பதிவில் கீழ்க்கண்ட சொற்களையும் ‘அடித்து’ நொறுக்கவும்:

   ரசிக்க – விரும்ப
   யோசனைகளை – சிந்தனைகளை

   அப்புறம் ‘பஜ்ஜியோ’ என்பதை ‘பஃச்சியோ’ என்று எழுத ஊக்குவிக்கலாமா?!

   நானும் ‘புல்வெளி’யில் என்னால் முடிந்ததைச் செய்கிறேன், நன்றி!

  • சத்யராஜ்குமார் 6:08 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   @TPKD_ , amas32, PADMANABAN, Ravi, Balaraman உங்கள் ஆலோசனைகளுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

  • Kannabiran Ravi Shankar (KRS) 8:46 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   //ஒரு புனைவு எழுத்தாளனாக எழுத்தில் முற்றிலுமாக கிரந்தம் தவிர்ப்பது இயலாது என்பது எனது தனிப்பட்ட கருத்து//

   🙂
   ஓரளவு உண்மையே!
   முற்றிலும் தவிர்ப்பதற்குப் பதிலாக, இயன்ற வரை தவிர்க்க முனைவோம்! இதனால் நல்ல தமிழ்ச் சொற்கள் வழக்கொழியாமல் நிலைக்கும்!

   @ksrk & @raghuji – இந்தப் பணிக்கு என் மிகுந்த நன்றி!

   @TPKD_ , amas32, PADMANABAN, Ravi, Balaraman – உங்களால் இயன்ற அளவு சொற்களைச் சேருங்கள்! நண்பர்களிடையேயும் அறிமுகம் செய்யுங்கள்!

  • elavasam 9:27 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   சிந்தனை என்பதை யோசனை என்ற சொல்லின் மாற்றாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. சிந்தனை = thought, யோசனை = suggestion / idea இல்லையா?

   • சத்யராஜ்குமார் 10:07 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

    பலராமனின் பின்னூட்டத்துக்குப் பின் மாற்றினேன். யோசனைக்கு உரிய மாற்றுச் சொல் யாரேனும் வழங்க வேண்டும்.

   • Kannabiran Ravi Shankar (KRS) 10:55 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

    @elavasam
    யோசனை என்பதே தமிழ்ச் சொல் தான்! – ‘வழாமை ஓடி யோசனை நீண்டு மாலை வேய்ந்து’ என்பது மணிமேகலை!

    யோசிக்கிறேன் = thought! யோசனை சொல்=suggestion! works both ways!
    சிந்தனை= always, thought

   • C.R. Selvakumar 10:07 முப on நவம்பர் 27, 2013 நிரந்தர பந்தம் | மறுமொழி

    யோசனை என்பதற்கு ஈடாக கருத்து அல்லது கருத்தூட்டு என்று சொல்லலாம். ஒரு யோசனை வந்தது என்பதை ஒரு கருத்து தோன்றியது என்று சொல்லலாம். ஆ! அது நல்ல யோசனை என்பதை ஆ! அது நல்ல கருத்தாச்சே என்று சொல்லலாம். suggestion என்றால் பரிந்துரை, கருத்தூட்டு என்று சொல்லலாம். யோசனை என்பதையோ அது போன்ற சொற்களை நீக்கவேண்டும் என்பதையோ கருத்தாகக் கொள்ளவேண்டாம் என்பது என் தனிக்கருத்து. வாடிக்கை, அலமாரி முதலான சொற்களும் தமிழ் அல்ல. ஆனால் தமிழாக உள்வாங்கி ஆளலாம். மிக அதிகமாக வேற்றுமொழிச்சொற்கள் பெருகிப் போனால் தான் சிக்கல். ஆனாலும் ஈடான தமிழ்ச்சொற்களை ஆங்காங்கே ஆள்வதும் நல்லது. புனை கதைகள் வேறு கட்டுரை, புனைவிலா எழுத்துகள் வேறு.

  • ila 9:46 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   அருமையான முயற்சிங்க. சில வார்த்தைகளை சொற்களை இணைத்துள்ளேன். அதே மாதிரி அதை நிர்வகிக்கவும் ஒரு குழு அமைச்சிருங்க. டேமிளர்ஸ் ஆர் சோ கன்னிங் பெல்லோஸ் யூ நோ..

  • seenu 11:02 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்.நன்றியுடன்
   சீனு

  • இரா. செல்வராசு 6:57 பிப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நல்ல முயற்சி. தள வடிவமைப்பும் மிகவும் அழகாகவும் எளிமையாகவும் இருக்கிறது.

  • REKHA RAGHAVAN 5:07 முப on ஓகஸ்ட் 30, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

  • Bar-Code 11:55 முப on ஓகஸ்ட் 31, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சத்யா

  • blog.indian 1:25 பிப on திசெம்பர் 4, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   திரு. இராம.கி அவர்களின் வளவு பதிவில் உள்ள சொல்லாக்கங்களின் தொகுப்பு.

   http://thamizhchol.blogspot.com/

   • Kannabiran Ravi Shankar (KRS) 8:36 பிப on திசெம்பர் 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

    மிக்க நன்றி; இராம.கி ஐயாவின் செஞ்சொல்லாக்கங்களின் நனி மகிழ்நன் நான்! அவரை அறிந்தவனும் ஆதலால்…இத்தளம் கண்டு பெரிதும் மகிழ்ந்தேன்!

  • blog.indian 1:29 பிப on திசெம்பர் 4, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   ஹஸ்தம் = கைத்த(ல)ம் 

   சுவாரஸ்யம் = சுவையாரம் 

   புஸ்தகம் = பொத்தகம்

   ஜோடி = சோடி

  • Krishnan 11:56 பிப on நவம்பர் 13, 2013 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்..நானும் கிரந்த சொற்களை பயன்பாட்டில் இருந்து தவிர்க்க முயல்வேன்.

  • Krishnan 11:56 பிப on நவம்பர் 13, 2013 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Reblogged this on My Perspectives and commented:
   கிரந்தம் தவிர்.

  • C.R. Selvakumar 10:09 முப on நவம்பர் 27, 2013 நிரந்தர பந்தம் | மறுமொழி

   மிக நல்ல முயற்சி! நல்வாழ்த்துகள்!

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி