Updates from ஒக்ரோபர், 2007 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • சத்யராஜ்குமார் 8:56 am on October 12, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  எச்சரிக்கை 

  (மேல்) நாட்டு வைத்தியம் பதிவில் குழந்தைகளுக்கான இருமல் மருந்து குறித்த விவாதம் எழுந்தது. மருத்துவர் பரிந்துரை இல்லாமல் கடைகளில் வினியோகிக்கப்படும் பல இருமல் மருந்துகளின் அபாயம் குறித்து பத்மா அர்விந்த் நிறைய தகவல்கள் அளித்திருந்தார்.

  FDA எச்சரிக்கையைத் தொடர்ந்து,  அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் நேற்று தாமாகவே முன்வந்து மேற்படி மருந்துகளை கடைகளில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டன.

  ஏற்கெனவே இம்மருந்துகளை நீங்கள் வீட்டில் வைத்திருந்தால் அவற்றைத் திருப்பிக் கொடுக்கவோ குப்பைத் தொட்டியில் வீசவோ முயற்சிக்கலாம்.

   
 • சத்யராஜ்குமார் 6:20 am on September 21, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  (மேல்) நாட்டு வைத்தியம் 

  உடம்புக்கு முடியவில்லை என்று வெள்ளிக்கிழமை மதியம் அகில் கூப்பிட்டான். எல்லா பள்ளியிலும் ஒரு க்ளினிக் உள்ளது. லேசாக இரண்டு இருமு இருமினால் உடனே க்ளினிக்கில் படுக்க வைத்து விடுவார்கள். நர்ஸ் போனில் கூப்பிடுவார். ஒரு மணி நேரத்துக்குள் யாராவது போய் கூட்டிக் கொண்டு வந்து விட வேண்டும்.

  சாயந்தரம் அவசர அப்பாய்ன்மென்ட் வாங்கி டாக்டரிடம் கூட்டிப் போனேன். ஒவ்வொரு டாக்டர் விசிட்டின்போதும் இன்ஷ்யூரன்ஸ் படிவங்களை நிரப்பி நிரப்பி உண்டான நரம்புச் சுளுக்குக்கு தனியாய் ஒரு தரம் நரம்பியல் நிபுணரைப் பார்க்க வேண்டும்.

  தெர்மாமீட்டர் 101 காண்பித்தது. டாக்டர் முன்னால் இரண்டு தடவை இருமியும், மூன்று முறை தும்மியும் காண்பித்தான் அகில். Strep Test எடுத்தார்கள். ரிசல்ட் நெகட்டிவ். தொண்டையில் டார்ச் அடித்துப் பார்த்து விட்டு, ” என்னால பாதிப்பு எதையும் பார்க்க முடியலை. ரெஸ்பிரேட்டரி ஸிஸ்டம் கிட்டே கொஞ்சமா இன்ஃபெக்ட் ஆகியிருக்கலாம். இதுக்கெல்லாம் மருந்து எழுதித் தர மாட்டேன். மின்ட்டை வாயில் போட்டுட்டு ஓய்வெடுக்கச் சொல்லுங்க. ” என்றார் டாக்டர்.

  இரண்டு நாளாகியும் இருமல் குறையவில்லை. ராத்திரி மூக்கில் ரத்தம் கொட கொடவென்று கொட்டியது. பதறிப் போய் டாக்டரை மறுபடி தொலைபேசியில் அழைக்க, ” இது வைரல் இன்பெக்’ஷன்தான். இதுக்காக மெனக்கெட்டு ஆஸ்பத்திரிக்கு வர வேண்டாம். பத்து நாள்ல தானா சரியாய்டும். ” என்றார்.

  பாலில் மஞ்சள்ப் பொடியும், சுக்கும் போட்டு குடித்துக் கொண்டிருக்கிறான். தானாகவே சரியாகிக் கொண்டிருக்கிறது,

   
  • R. Selvaraj 8:33 முப on செப்ரெம்பர் 21, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Why fill out insurance forms every time? Isn’t it sufficient to fill out just the first time?

   My daughter also has cough for the past few days. Our house medicine is honey and pepper. However, seeing her suffer, I went out and bought Dimetapp DM yesterday.

  • சத்யராஜ்குமார் 9:19 முப on செப்ரெம்பர் 21, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   //Why fill out insurance forms every time? Isn’t it sufficient to fill out just the first time?//

   When we have to visit different Doctors for diffrent reasons !!

  • பத்மா அர்விந்த் 2:16 பிப on செப்ரெம்பர் 21, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Please make sure the humidity in the house is fine or have a humidifer in your son’s room. Most of the time children have cappilary breaks in nose due to dryness in the house.

   Home medication is just fine as long as there is no fever.

   Selvaraj
   I thought cough medicines are to be kept under lock and key these days and you need pharmacysts permission to get(at least in NJ). wish both kids to get better.

  • சத்யராஜ்குமார் 2:29 பிப on செப்ரெம்பர் 21, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   @பத்மா அர்விந்த்:
   You are right, on that particular day we felt little bit of cold and turned on the heater. Thanks for your advice and wish.

  • செல்வராஜ் 10:46 பிப on செப்ரெம்பர் 21, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   >>I thought cough medicines are to be kept under lock and key these days and you need pharmacysts permission>>

   Not really. It is freely available in the shelves. Although I read about a hoax (true but outdated) info about one of the ingredients (PPA?)

  • பத்மா அர்விந்த் 6:30 முப on செப்ரெம்பர் 22, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Selvaraj
   It is a big nightmare among children to get high using cough medicine. Millions of kids (minimum 4 so far) who do that, and also learn to get (prepare) Met from Sudafed. It is a federal regulation to keep all these under locks. I might find out why some pharmacies are not following this. Last year alone 50,000 kids died due to overdosing while trying to get high. It is like Marphine or any “drugs” and they don’t get caught by cops. We have a new law in NJ called Jasons law after the kid who died overdosing, and that prohibits selling these medicine. I am a strong advocate on this over the counter medication abuse, and had held town hall meetings to alert parents to keep drugs(both prescription and OTC) under locks. In India children use Eucalptus oil smell to get high. Each cough medicine (left over)can be sold out anywhere between 50-100$ in schools!!!Unfilled prescription for codine, Vcodine can be sold for hundreds of $ in schools, and each unused V codin (Dentist usually prescribe for rootcanal, wisdom teeth extraction) for 100$. Unused ones need to be carefully discarded as any one can pick up from garbage, and that will have prescriber name and might lead to complications.

  • Senthil Kumar 3:26 முப on செப்ரெம்பர் 24, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Sathyaraaj, unga site ellam konjam naala padichitu varen, though this is my first comment. unga valai pathivu romba nalla iruku.

   Developed America vaazhkaila, oru dr visit romba kashtam thaan pola iruke.. nenaitha nerathil naam dr paarka mudiyaatha… sila vishayangalil india la irupathe romba vasathiyaa thonuthu….

   Hope your kid is better now…

  • Senthil Kumar 3:29 முப on செப்ரெம்பர் 24, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Ennum technology & exposure valara valara, i guess kids upbringing will become even more difficult…. Padma unga mail padichitu i am really worried where we are heading nu… and naam valarntha oru nalla environment namma pasagaluku kuduka mudiyaathu pola..

  • சத்யராஜ்குமார் 6:20 முப on செப்ரெம்பர் 24, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   @Senthil Kumar:
   நினைத்த நேரத்தில் டாக்்டரைப் பார்க்க முடியும். அதற்கு என்று Urgent Care, Emergency Centers போன்ற சில இடங்கள் உள்ளன. ஆனால் ‘நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்’ என்ற நம் பழிமொழி செவிட்டில் அடிக்கும் அளவுக்கு மருத்துவம் இங்கே காஸ்ட்லியான சமாசாரம். அதை சமாளிக்க நீங்கள் மாதா மாதம் உடல்நலக் காப்பீடுக்கென பெரும் தொகை கட்டிக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் சொல்வது சரிதான். பல விஷயங்களில் இந்தியாவில் இருப்பது இந்தியர்களுக்கு வசதியே !

  • சத்யராஜ்குமார் 11:50 முப on ஒக்ரோபர் 11, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Makers pull cold medicines sold for infants

   http://www.cnn.com/2007/HEALTH/10/11/infant.drugs/

  • பத்மா அர்விந்த் 8:37 முப on ஒக்ரோபர் 12, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

   All drugs containingPHENYLPROPANOLAMINE are being recalled. The FDA has advised that consumers go through their medicine cabinets, paying special attention to cold remedies and diet aids, and discard any medications that list Phenylpropanolamine (PPA) as one of their ingredients.
   STOP TAKING anything containing this ingredient. It has been linked to increased hemorrhagic stroke(bleeding in brain) among women ages 18-49 in the three days after starting use of medication. Problems were not found in men, but the FDA recommended that everyone (even children) seek alternative medicine.

   The following medications contain Phenylpropanolamine:

   Acutrim Diet Gum Appetite Suppressant
   Acutrim Plus Dietary Supplements
   Acutrim Maximum Strength Appetite Control Alka-Seltzer Plus Children’s Cold Medi cine Effervescent Alka-Seltzer Plus Cold medicine (cherry or or ange) Alka-Seltzer Plus Cold Medicine Original Alka-Seltzer Plus Cold &Cough Medicine Effervescent Alka-Seltzer Plus Cold &Flu Medicine Alka-Seltzer Plus Cold &Sinus Effervescent Alka Seltzer Plus Night-Time Cold Medicine BC Allergy Sinus Cold Powder BC S inus Cold Powder Comtrex Flu Therapy &Fever Relief Day &Night Contac 12-Hour Cold Capsules Contac 12 Hour Caplets Co ricidin D Cold, Flu &Sinus Dexatrim Caffeine Free Dexatrim Extended Duration Dexatrim Gelcaps Dexatrim Vitamin C/Caffeine Free Dimetapp Cold &Allergy Chewable Tablets Dimetapp Cold &Cough Liqui-Gels Dimetapp DM Cold &Cough Elixir Dimetapp Elixir Dimetapp 4 Hour Liquid Gels Dimetapp 4 Hour Tablets Dimetapp 12 Hour Extentabs Tablets Naldecon DX Pediatric Drops Permathene Mega-16 Robitussin CF Tavist-D 12 Hour Relief of Sinus &Nasal Congestion Triaminic DM Cough Rel! ief Triaminic Expectorant Chest &Head Triaminic Syrup ! ! Cold &am p; Allergy Triaminic Triaminicol Cold &Cough

   I just found out and called the 800# on the container forTriaminicand they informed me that they are voluntarily recalling the following medicines because of a certain ingredient that is causing strokes and seizures in children

   Orange 3D Cold &Allergy Cherry (Pink)
   3D Cold &Cough Berry
   3D Cough Relief Yellow 3D Expectorant

   They are asking you to call them at 800-548-3708 with the lot number on the box so they can send you postage for you to send it back to them, and they will also issue you a refund. If you know of anyone else with small children, PLEASE PASS THIS ON . THIS IS SERIOUS STUFF!

   DO PASS ALONG TO ALL ON YOUR MAILING LIST so people are informed. They can then pass it along to their families… making sure not to forget anyone in the fam who is “expecting” at this time

   To confirm these findings please take time to check the
   following:
   http://www.fda.gov/cder/drug/infopage/ppa/

   PLEASE PASS THIS ON TO YOUR CHILDREN IN CASE THEY GIVE IT TO THEIR
   CHILDREN OR TO FRIENDS WHO HAVE CHILDREN AND GRANDCHILDREN

 • சித்ரன் ரகுநாத் 7:29 am on September 15, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  திண்ணைகளும் பாட்டிகளும் 

  தண்டாசனம் சொல்லிக் கொடுக்கும்போது திரு.அருள் சரவணன், அந்தக் காலத்துப் பாட்டிகள் எல்லாம் அநாயாசமாக நூறு வயது வரை எப்படி வாழ்ந்தார்கள் என்பதை சற்றே விளக்கினார். பாட்டிகள் திண்ணையில் ரெண்டு காலையும் நீட்டி நிமிர்ந்து சும்மா உட்காருகிற விதமே இந்த தண்டாசனம்தான் என்றார். முதுகுத் தசைகளை வலுப்படுத்தி, மார்பு மற்றும் தோள்களை விரிவடையச் செய்வதுடன், கண்பார்வையை கூர்மையாக்கும் இந்த முக்கிய ஆசனத்தை தன்னையறியாமலோ அறிந்தோ பாட்டிகள் நாள் தவறாமல் செய்து கொண்டிருப்பதே நீண்ட ஆயுசுக்குக் காரணமாம். அது தவிர பாட்டிகள் சதா எதையோ இடித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்களே – வெற்றிலை (கிருமிநாசினி, ஜீரண சக்தி அதிகரிப்பு), பாக்கு (இரத்த சுத்திகரிப்பு), சுண்ணாம்பு (கால்சியம்). இந்தக் கலவை ஒரு அருமையான ஆரோக்கிய மருந்தாக செயல்படுகிறதாம். 80 வயதிலும் முதுகில் மூட்டை சுமக்கிற தெம்புடன் தூரத்தில் வருகிற பேராண்டியை தெளிந்த பார்வையுடன் கண்டுகொள்ளும் பாட்டிகள் அந்தக் காலத்தில் இருந்தார்கள். இன்னும் கூட இருக்கிறார்கள் என்றால் அவர்கள் வாழ்க்கை முறை ஒரு முக்கியக் காரணம் என்றார்.

  சும்மா டிவி பார்க்கும்போதோ, குமுதம் ஹிண்டு படிக்கும்போதோ தரையில் வஜ்ராசனமோ, பத்மாசனமோ போட்டு உட்கார்ந்து கொண்டால் உடம்பு உறுதிபடும் என்கிறார் யோகா மாஸ்டர். திண்ணைகளில்லாத நகர வீடுகளில் ஆரோக்கியம் வளர்க்க நல்ல ஐடியாதான்.

   
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி