Tagged: லிட்டில் இந்தியா Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • சித்ரன் ரகுநாத் 6:47 am on April 29, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: , , செராங்கூன், நரஞ்சன் ஸ்டோர், முஸ்தபா, லிட்டில் இந்தியா   

  சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 3 

  லிட்டில் இந்தியா-வுக்குள் நுழைந்ததும் சிங்கப்பூரின் முகம் சரேலென்று மாறிவிடுகிறது. தென்னிந்திய உடைகள். கடைகள். தமிழில் பெயர் பலகைகள். சென்னையின் ஒரு பகுதிக்குள் நுழைந்ததுபோல் ஒரு nativity உணர்வு வந்துவிடுகிறது. வார நாட்களில் சோம்பலாய்க் காணப்படும் தெருக்கள், வார இறுதியில் திருவிழா மாதிரி ஆகிவிடுகிறது. சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள், அவர்களது Singaporeஉறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்க்க கூடுகிற கூட்டம்தான்.  Money Transfer அலுவலகங்களில் ஊருக்குப் பணம் அனுப்ப வரிசை நீளமாய்க் காத்திருக்கிறது. அர்ஜூனரு வில்லு அரிச்சந்த்ரன் சொல்லு.. என்று ஒலி பெருக்கியில் பாடல் முழங்குகிறது. சி. ஒ. சி. வி -2-ல் குறிப்பிட்டபடி நிறைய இந்திய உணவு விடுதிகள். அது தவிர துணிக்கடைகள், கலைப்பொருள்கள், அரிசி, பருப்பு, வெங்காயம், தக்காளி, கரம் மசாலா என்று எங்கும் இந்திய மயம். இந்திய மணம்.

  லிட்டில் இந்தியாவின் மிக முக்கிய அட்ராக்ஷன் செராங்கூன் ரோட்டிலுள்ள முஸ்தபா ப்ளாஸா. இது ஒரு 24 மணி நேர ஷாப்பிங் காம்ப்ளக்ஸ். எளிதில் புரிய வைக்க இதை சிங்கப்பூரின் சரவணா ஸ்டோர்ஸ் என்று சொன்னால் முதலாளி கோபித்துக்கொள்வாரா என்று தெரியவில்லை. ஆனால் அதைவிட 10 மடங்கு இருக்கிற இந்த மெகா ஸ்டோரில் சிங்கப்பூர் விசா தவிர மற்றவை எல்லாம் கிடைக்கும் என்று யாரோ சொன்னார்கள். இது தவிர முஸ்தபாவிலிருந்து பொடி நடை தூரத்தில் நரஞ்சன் ஸ்டோர் (எல்லோரும் ஏன் இதை நிரஞ்சன் என்று அழைக்கிறார்கள் என்று புரியவில்லை) என்று ஒரு சீக்கியரின் கடையில் கொஞ்சம் சல்லிசாக மொபைல் ஃபோன்கள், டிஜிட்டல் கேமராக்கள் இத்யாதிகளின் விற்பனை தூள் பறக்கிறது.

  ஆக லிட்டில் இந்தியா சிங்கப்பூரின் இந்திய இதயம்.

  சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 4
  சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 2
  சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 1

   
 • சித்ரன் ரகுநாத் 7:20 am on April 6, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: அஞ்சப்பர், கோமளவிலாஸ், சரவணபவன், , , ஜுராங், லிட்டில் இந்தியா, singapore   

  சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட்-2 

  Singaporeசிங்கப்பூரில் நாங்கள் தங்கிய வீடு ஜூராங்-மேற்கில் பதிமூன்றாவது மாடியில் இருந்ததால் அங்கிருந்து அதன் தொழிற்சாலைப் பகுதிகள், துறைமுகம் எல்லாம் ஒரு panoramic view-ல் காணக்கிடைத்தது. (எந்தக் கட்டிடத்திலும் மொட்டை மாடியியிருந்து வேடிக்கை பார்க்க யாருக்கும் அனுமதி கிடையாதாம்.)

  மரத்திலிருந்து ஒரு இலை உதிர்ந்தாலும் கூட பதறியடித்து ஒரு லாரி வந்து மெஷின் போட்டு உறிஞ்சி எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறது. ரோடுகள் அத்தனை சுத்தம். எங்கேயும் ஹோர்டிங்குகள், விளம்பரப் பலகைகள், அரசியல் கட் அவுட், சினிமா போஸ்டர்கள்  கிடையாது. எல்லா இடங்களிலும் தள்ளு முள்ளு இல்லாமல் மக்கள் பஸ்ஸுக்கும் டாக்ஸிக்கும் அநியாயத்துக்கு வரிசையில் காத்திருந்து ஏறுகிறார்கள்.

  ஆட்டோக்கள் இல்லாத சிங்கப்பூர் நகரம் மிகுந்த ஆறுதல். ஆனால் எங்கு போனாலும்  கால் வலிக்கிற அளவுக்கு எஸ்கலேட்டர்களில் ஏறி இறங்க வேண்டியிருந்தது. துரித ரயிலில் இடைவிடாது பயணிகளுக்கான தமிழ், ஆங்கில அறிவிப்புக் குரல்கள். நிரந்தரக் குடியுரிமை பெற்று தினசரி இதில் பயணிப்பவர்களுக்கு இந்தக் குரல்கள் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு இனிய அவஸ்தையாகிவிடும் என்று தோன்றுகிறது. முக்கியமான எல்லாப் பொது இடங்களிலும் லேசாய் நிமிர்ந்து பார்த்தால் “This area is under camera surveilance” என்று ஒரு சின்ன அறிவிப்பும் சில கண்காணிப்புக் கேமராக்களும் நம்மை முறைக்கின்றன. ஊருக்குத் திரும்பி வரும்வரை ஒன்றிரண்டு பேர்களைத் தவிர போலீஸ்காரர்கள் அதிகமாய் கண்ணில் படவில்லை. நகரில் பராமரிப்புப் பணிகள் நடக்கிற எல்லா இடங்களிலும் சுற்றிலும் மூடி மறைத்து, தமிழ் உட்பட நான்கு மொழிகளில் சீராக ஒரே மாதிரி அபாய அறிவிப்புப் பலகை வைக்கிறார்கள்.

  ரெஸ்டாரன்டில் காபி, டீ கேட்டால் அரை அடி உயர தம்ளரில் ஸ்ட்ராவுடன் தருகிறார்கள். குறைந்தது ஒரு மணி நேரம் குடிக்கலாம். பரவலாய்க் காணப்படும் food court-களில் வறுத்துத் தொங்கவிடப்பட்ட பிராணிகளின் லிஸ்டையும் (அதில் ஓணான் சாயலில் ஒரு வஸ்து காணப்பட்டது), மூக்கைத் துளைக்கும் வாடையையும் தவிர்த்து மக்டொனால்டில் பன் ரொட்டி வகையறாக்களை சாப்பிட்டுத் தொலைக்கவேண்டியிருந்தது. மற்றபடி Nativity-யுடன் சாப்பிட விரும்புபவர்களுக்கு சரவணபவன், கோமளவிலாஸ், ஆனந்தபவன், அஞ்சப்பர் என்று ரவுண்டு கட்டி ஹோட்டல்கள் உள்ளன – லிட்டில் இந்தியா என்கிற இடத்தில்.

  சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 4
  சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 3
  சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 1

   
  • வடுவூர் குமார் 8:31 முப on ஏப்ரல் 6, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   கால் வலிக்கிற அளவுக்கு எஸ்கலேட்டர்களில் ஏறி இறங்க வேண்டியிருந்தது

   இதானா வேண்டாம் என்கிறது….எதுக்கு நகரும் படியில் ஏறவேண்டும்.
   நின்று அழகை ரசிக்கலாமே!!!
   :-))

  • Kalaiyarasan 4:15 பிப on ஏப்ரல் 6, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Interesting to read.
   நீங்கள் பார்த்து வியந்தவை பற்றி இன்னும் எழுதுங்கள். இணையத்தில் பயணக் கட்டுரைகள் எழுதுவோர் பெருக வேண்டும்.

   Greetings from,

   Kalaiyagam
   http://kalaiy.blogspot.com

  • kalyanakamala 10:45 பிப on ஏப்ரல் 29, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   காப்பி டீ அளவு என்னையும் பிரமிக்கவைத்தது!முதல் நாள் வெறுவழியில்லாமல் குடித்தோம். இரண்டாம் நாள் ஒரு காப்பி ஆர்டெர் கொடுத்து நானும் என் கணவரும் பகிர்ந்து கொண்டோம்!
   அன்புடன்
   கமலா

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி