தமிழின் முதல் மொபைல் நூல்


1996-97 வாக்கில் சொந்த இணைய தளம் வைத்திருந்தேன். குமுதம், விகடன் போன்ற வாராந்திரிகளில் வெளியான எனது சிறுகதைகள் சிலவற்றை அதில் தொகுத்திருந்தேன். இணையம் அதிகம் பரவலாகியிருக்காத நிலையில் ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் எனக்கு எப்படி அதை பலருக்கும் எடுத்துச் செல்வது என்பது அப்போது தெரியவில்லை.

அது போலவே இன்னும் செல்பேசி தளத்தில் தமிழ் படைப்புகள் பரவலாகியிருக்காத இத்தருணத்தில் இப்போது Android Mobile-ல் முதல் முறையாக தமிழில் ஒரு மின்னூல் கொண்டு வந்துள்ளேன். முழுக்க முழுக்க இது ஒரு பரிசோதனை முயற்சி. இதை ஒரு பீரியாடிக் போல செயல் பட வைக்க உத்தேசம். ஆன்ட்’ராய்ட் போன் அளிக்கும் மென்பொருள் இற்றைப்படுத்தும் வசதி மூலமாக எனக்கு நேரம் வாய்க்கும் போதெல்லாம் புது கதை அல்லது கட்டுரை தொகுப்புகள் வாசகருக்குக் கிடைக்கும்.

விரைவில் ஐ போனிலும் இதை அறிமுகப்படுத்த உள்ளேன். ஆப்பிள் நிறுவனம் அனுமதி வழங்கும் பட்சத்தில்.

இப்போதைக்கு ஆண்ட்’ராய்ட் போன் உபயோகிக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் eNool என்னும் இந்த இலவச மென்பொருளை தரவிறக்கி படித்து மகிழ அன்புடன் அழைக்கிறேன்.

Android Market Place-ல் eNool அல்லது tamil என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.


UPDATE: eNool ஐபோனிலும் இப்போது கிடைக்கும்.