திருட்டு
ஆர்த்தியை சந்தித்தபோது, இங்கே யாரும் வீடுகளைப் பூட்டுவதே கிடையாது. அப்படியே போட்டது போட்டபடி அலுவலகம் செல்கிறோம் என்றார். Upstate New York-ல் மலைப்பாங்கான கிராமம்.
முதன் முதலில் அமெரிக்கா வந்திறங்கியது நினைவுக்கு வந்தது. Baggage Claim Section-ல் நம்ம ஊர் ஜாக்கிரதை உணர்வோடு இடது கையில் ஒரு பெட்டியைப் பிடித்துக் கொண்டு வலது கையால் ஓடும் பெல்ட்டிலிருந்த இன்னொரு பெட்டியை எடுக்க முயன்ற போது, தோளைத் தட்டி சிரித்தார் ஒரு இந்திய அன்பர்.
” Hello, this is America. No one is going to steal your bags ! ”
அடுத்த பத்தாவது நிமிஷம் என்னுடன் வந்த நண்பர் பேயறைந்த முகத்தோடு என்னை உலுக்கினார்.
” Cart மேல வெச்சிருந்த Cabin Bag-ஐ பார்த்திங்களா ? ”
அதில்தான் அவருடைய பாஸ்போர்ட், விசா, பல்கலை சான்றிதழ்கள், வேலை அனுபவச் சான்றிதழ்கள் உள்ளிட்ட சகலமும் இருந்தன. அவர் ஒரு மிட்டாய்க் கடையைப் பார்த்துக் கொண்டிருந்த அவகாசத்தில் யாரோ பெட்டியை லவட்டி விட்டார்கள்.
போன வாரம் அமர் அலுவலக Cafeteria-வில் சாப்பிட்டு விட்டுத் திரும்பும்போது பர்சை தவற விட்டார். கண்டெடுத்த யாரோ அதை செக்யூரிட்டி டெஸ்க்கில் ஒப்படைத்திருக்க, பெற்றுக் கொள்ளும்படி போனில் சொன்னார்கள். பர்சிலிருந்த $300-ஐக் காணவில்லை. மொத்த சம்பவமும் ஐந்து நிமிஷங்களுக்குள் நடந்து முடிந்தது.
” இது தெருவில் நடந்திருந்தால் வருந்தியிருக்க மாட்டேன். Well educated and cultured people மட்டுமே இருக்கும் (அல்லது இருப்பதாக நம்பப்படும்) அலுவலகத்துக்குள் நடந்திருப்பது மிகவும் கவலையளிக்கிறது. ” என்றார் அமர்.
aruna 12:41 பிப on திசெம்பர் 25, 2007 நிரந்தர பந்தம் |
சில நிஜங்கள் யாராவது சொல்லும்போதுதான் வெளிச்சத்திற்கு வருகின்றது
நன்றி
அருணா
கலை அரசன் மார்த்தாண்டம் 1:14 பிப on திசெம்பர் 25, 2007 நிரந்தர பந்தம் |
வீட்டிற்கு வீடு வாசல்ப்படி தான் போங்கள்.
அறியத்தந்தமைக்கு நன்றி.
சித்ரன் 4:33 முப on திசெம்பர் 26, 2007 நிரந்தர பந்தம் |
/////அவர் ஒரு மிட்டாய்க் கடையைப் பார்த்துக் கொண்டிருந்த அவகாசத்தில் யாரோ பெட்டியை லவட்டி விட்டார்கள்.////
என்ன சொல்ல வர்ரிங்கன்னு புரியுது..
சத்யராஜ்குமார் 9:57 முப on ஜனவரி 1, 2008 நிரந்தர பந்தம் |
@aruna and @கலை அரசன் மார்த்தாண்டம்:
கருத்துக்கு நன்றி.
@சித்ரன்:
🙂