Updates from பிப்ரவரி, 2008 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • சித்ரன் ரகுநாத் 3:33 am on February 28, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: சுஜாதா, Sujatha   

  சுஜாதா 


   sujatha - வருந்துகிறோம்

  எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுச் செய்தி மிக வருத்தத்தைத் தருகிறது. சிறு வயதிலிருந்தே சுஜாதாவின் எழுத்து வசீகரத்தால் ஈர்க்கப்பட்ட நான் பிற்பாடு சிறுகதை எழுத்தாளனாகவும் ஆனதில் அவரின் தாக்கம் லேசாய் இருக்கத்தான் செய்கிறது.
   
  எழுத்துலகில் அவர் விட்டுச் செல்கிற இடம் அவ்வளவு எளிதில் யாராலும் நிரப்பப்பட முடியாதது என்பதில் சந்தேகமில்லை. ஒரு நினைவுகூறலுக்காக, சுஜாதா குறித்து ரொம்ப நாட்களுக்கு முன் நான் எழுதிய ஒரு பதிவின் சுட்டி இதோ:
   

   
   
 • சத்யராஜ்குமார் 8:59 am on February 17, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  உமேஷ் கோபிநாத் Cleartrip தளம் பற்றி அடிக்கடி எழுதவே அங்கே சென்று பார்க்கும் ஆவல்… 

  உமேஷ் கோபிநாத் Cleartrip தளம் பற்றி அடிக்கடி எழுதவே அங்கே சென்று பார்க்கும் ஆவல் எழுந்தது. இங்கே Expedia அல்லது SideStep தளங்களைப் போலவே இத்தளம் இந்தியாவின் வெவ்வேறு விமான நிறுவனங்களின் பயண விலையை தேடி தொகுத்துக் கொடுக்கிறது. அவர்கள் சேவையும் சிறப்பாகவே இருப்பதாக உமேஷின் வாசகர்கள் தரும் பின்னூட்டங்களின் வாயிலாக அறிய முடிகிறது.

  கூடுதலாக Small World என்ற பகுதியையும் இத்தளம் நிர்வகிக்கிறது.  நீங்கள் பயணிக்க இருக்கும் இந்தியாவின் பல்வேறு நகரங்கள் பற்றிய சிறு விபரங்களை இதன் மூலம் அறிந்து கொள்ள இயலும்.  அதில் சென்னை பற்றிய குறிப்பைப் பார்த்து சற்றே துணுக்குற்றேன்.

  People in Chennai are generally averse to speaking in Hindi which makes it difficult to converse with the locals, especially if they are not conversant in English either.           

  சென்னைக்கு பயணிப்பவர்களுக்கான உபயோகமான தகவல்தானே என்று தோன்றுகிறதா ? பிரச்சனை தகவல் குறித்து அல்ல.Cleartrip Annoyanceஅது தொகுக்கப்பட்டிருக்கும் இடம். சென்னை நகரத்தின் எரிச்சலூட்டும் அல்லது அசவுகர்யம் தரும் விஷயங்களில் ஒன்றாக இதைக் குறிப்பிட்டிருக்கிறது இந்த மும்பை நிறுவனம். ஒரு பகுதி மக்கள் அவர்கள் தாய்மொழியில் பேசிக்கொள்வதை எப்படி அசௌகர்யம் என்று கருதலாம் ? 

  இது போன்ற தகவல்களை கருத்தாக்கமாகத் தராமல்  புள்ளி விபரங்களாகத் தருவது வியாபார நிறுவனங்களுக்கு நல்லது. 

  UPDATE: UPDATE: Looks like ClearTrip has changed the page and text. Now I see the following paragraph under Chennai:

  “The preferred language of communication amongst the local population is Tamil. However, English is widely spoken as the language of commerce and English speaking visitors should have no problem getting around. The city also has a fair number of people that speak Telugu, Malayalam and Hindi.”

  Thank you ClearTrip, for making this change!

   
  • மூக்கு சுந்தர் 8:54 பிப on பிப்ரவரி 17, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   இதே விதமான கருத்து பெரும்பாலான வட இந்தியர்களிடம் இருக்க்கிறது. இதற்குக் காரணம் நாம் மொழி மற்றும் இனம் பற்றி ஓவராக அலட்டிக் கொள்கிறோம் என்கிறார்கள்.

   நாம்தான் “மும்பை மண்ணின் மைந்தர்களுக்கே ” என்று சொல்லி மற்றாவர்களை துரத்துகிறோமா..?? 🙂 🙂

  • Deepak 12:47 முப on பிப்ரவரி 18, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Hi,

   What you told is absolutely true. Even I have faced similar words from my colleagues here in Bangalore. I always tell them that we don’t require to speak hindi in TN as most of them speak tamil. After all chennai is known to be good to people who travel from outside our state and even country.

  • blj 2:21 முப on பிப்ரவரி 18, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   I wonder if Cleartrip has annoyance guide to other cities in the world, lets say people in Shanghai, Budapest or even London are reluctant to speak in Hindi. How annoying!

  • மணியன் 5:33 முப on பிப்ரவரி 18, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   மும்பை,தில்லி போன்ற நகரங்களுக்கான வழிகாட்டுதலில்,
   //People in Mumai/Delhi are generally averse to speaking in English which makes it difficult to converse with the locals // என்று போட்டிருந்தால் கொள்ளாம்:)

  • சத்யராஜ்குமார் 9:35 முப on பிப்ரவரி 18, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   @சுந்தர்: அரசியல்வாதிகள் தங்கள் சுய லாபங்களுக்காக தோற்றுவிக்கும் கருத்துக்களுக்கு மக்களும், நிறுவனங்களும் பலியாகின்றன. ஹிந்தி படிப்பதாலோ படிக்காததாலோ எழும் லாபமோ நஷ்டமோ அவரவர் சொந்த வாழ்க்கைப் பாதையின் அடிப்படையில் நிகழும் ஒன்று. எந்த பாஷைக்கும், எந்த மண்ணின் மைந்தர்களுக்கும் நாம் எதிரி அல்லவே. 🙂

   @Deepak: This topic is discussed in internet by individuals so many times and there is no end for this debate. I wanted to convey cleartrip or any other organization that this can only be an information to Indians speaking Hindi (or 20 other languages excluding Tamil and Hindi) or foreigners visiting Chennai, not annoyance.

   @blj: 🙂

   @மணியன்: சென்னை, மும்பை, டில்லி உட்பட எப்பகுதி மக்களின் மனதையும் காயப்படுத்தாவண்ணம் செய்திகள் தொகுக்கப்படட்டும் !

   @Umesh Gopinath: Thanks for addressing this post with the exact tone in Whitespace. I wondered that you could read and understand Tamil !

  • Umesh 11:24 முப on பிப்ரவரி 19, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   @SRK Yes i can read and understand Tamil; just that it took some extra time for me 🙂

  • Balaji Prasanna 5:36 முப on மார்ச் 7, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   this is not a valid point.

  • Stone 5:22 முப on திசெம்பர் 19, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Regarding the clear trip remarks, the said words are due to the experience of the reporter or as the case may be. Let him be like that. We the tamilians continue to be as we are. Without knowing a language and visiting that country is a mistake on the visitor. Just because other language people are visiting, a tourist country cannot learn all other languages. They forgot one thing, That is “when you are Rome, you should be a romanian”. If you are not so, the mistake is yours only and not that of Rome’s. To avoid such irritations, the visitor should take atleast some simple steps to learn the language. Particularly in a diversified cultural / linguistic / ethnic country like that of ours, we should respect others culture, language, etc., and everybody should try to learn other language etc., and try to mingle with them. Otherwise intolerence will be growing within us without our knowlege

  • சத்யராஜ்குமார் 8:11 முப on திசெம்பர் 19, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Stone, You are right. Nothing wrong in learning one more language basics if you have to visit the place.

  • Sri 12:16 பிப on செப்ரெம்பர் 1, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   *******, you ask others to learn the languages, and you guys are living in ******** for centuries and never tried to learn the local language. forget learning the language dont even respect the local sentiments

  • சத்யராஜ்குமார் 12:28 பிப on செப்ரெம்பர் 1, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   UPDATE: Looks like Clear Trip has changed the page and text. Now I see the following paragraph under Chennai:

   “The preferred language of communication amongst the local population is Tamil. However, English is widely spoken as the language of commerce and English speaking visitors should have no problem getting around. The city also has a fair number of people that speak Telugu, Malayalam and Hindi.”

 • சத்யராஜ்குமார் 10:57 am on February 15, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  ஈகோவும், இயந்திரங்களும் 

  அந்த Get Together முகவரியை கண்டு பிடிப்பது சற்று கடினம்தான். சுற்றிலும் முழு முஸ்திபுகளில் சாலைப் பணிகள் நடப்பதே காரணம். நிறைய Detour அம்புக்குறிகள். GPS உபகரணம் இருந்ததால் சாட்டிலைட் பகவான் புண்ணியத்தில் நான் குழப்பமின்றி இடம் சேGPS on smart phoneர்ந்தேன்.

  சென்ற வருடத்து விழாக் கால விற்பனையில் நாயகன் GPS தான். மக்களின் வாங்கும் சக்திக்கு நிகராக அதன் விலை இறங்கி வந்ததே காரணம். சந்தித்தவர்களில் பலரும் இந்த முறை GPS வைத்திருந்தார்கள்.  சந்தேகமில்லாமல் இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. குழப்பத்தைக் குறைத்து மனதை சாந்தப்படுத்துகிறது.

  இருந்தும் இது போன்ற தொழில்நுட்ப சாதனங்களை வீம்புக்காக முதலில் வாங்க மறுக்கிறோம். Map Quest-ல் Turn by Turn  அச்சடித்துக் கொண்டு, அட்லசில் அட்ச ரேகை  தீர்க்க ரேகைகளுக்கு நடுவே தென்படும் நுணுக்கி நுணுக்கிய எழுத்துக்களைப் படித்து இடம் சேர்வதுதான் வீரம் என்று (பிடி)வாதம் பண்ணி வந்தவர்கள் வீரமா, நேரமா எது முக்கியம் என அன்று உணர்ந்தார்கள். 
   
  • Thevananth 2:07 முப on பிப்ரவரி 20, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   GPS உபகரணம் பற்றிச் சிலாகித்திருக்கிறீர்கள் சத்தியராஜ் குமார் நல்லது. ஆனால் இதில் உள்ள மிகப் பெரிய குறை உங்கள் தனிமையை இது போக்கிவிடும். உங்களுக்குத் தேவையான இடம் எங்கே இருக்கிறது என்று தெரிவித்துவிடுவது போலவே நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதையும் அது காட்டிக் கொடுத்துவிடும். சமயத்தில் உங்கள் ஆபீஸில் உங்களைத் தேடினார்கள் என்றால், நான் அங்கே இருக்கிறேன் இங்கே இருக்கிறேன் என்று சொல்லி உங்களால் தப்பிக்கவே முடியாமல் போய்விடும். – பிறேம்

  • prem 2:20 முப on பிப்ரவரி 20, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   GPS உபகரணம் பற்றிச் சிலாகித்திருக்கிறீர்கள் சத்தியராஜ் குமார் நல்லது. ஆனால் இதில் உள்ள மிகப் பெரிய குறை உங்கள் தனிமையை இது போக்கிவிடும். உங்களுக்குத் தேவையான இடம் எங்கே இருக்கிறது என்று தெரிவித்துவிடுவது போலவே நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதையும் அது காட்டிக் கொடுத்துவிடும். சமயத்தில் உங்கள் ஆபீஸில் உங்களைத் தேடினார்கள் என்றால், நான் அங்கே இருக்கிறேன் இங்கே இருக்கிறேன் என்று சொல்லி உங்களால் தப்பிக்கவே முடியாமல் போய்விடும். – பிறேம்

  • சத்யராஜ்குமார் 6:36 முப on பிப்ரவரி 20, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Thevananth/prem, GPS உபகரணம் நீங்கள் நினைப்பது போல் உங்களை காட்டிக் கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் வைத்திருக்கும் GPS உபகரணத்தின் தனிப்பட்ட அடையாளம் ஆபிசில் உங்கள் அதிகாரிக்கு தெரிந்திருக்க வேண்டும். இதற்கு GPS-ஐ விட செல்போன் போதும். ஏனெனில் உங்கள் செல்போன் எண் எல்லாரிடமும் உள்ளது. குற்றம் புரிந்தாலோ, தொலைந்து போனாலோ மட்டுமே அவ்வளவு சிரமப்பட்டு நீங்கள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்க முனைவார்கள். மற்றபடி நீங்கள் செல்போனில் எந்த அளவுக்கு பொய் சொல்லலாமோ அந்த அளவுக்கு GPS வைத்துக் கொண்டும் பொய் சொல்லலாம் 🙂

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி